இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, December 29, 2010

புத்தாண்டே...புதுவரவே.


ஈராயிரத்துப்பத்து வருடங்கள் 
ஒரு நொடியில் கடந்ததுபோல் 
புத்தம் புதியதுவாய் 
மலர்வதோடு மறைகின்றாய் 

உன்னுள் அகப்பட்ட 
உயிர்களின் அலறல்களும் 
சீற்றங்களில் சிதறிய 
மனிதர்களின் ஆசைகளும் 
அங்காங்கே ஒலிக்கிறதே..

Tuesday, December 28, 2010

எதிர்பார்த்திருக்கிறேன் .....

அன்புநிறைந்தவனே எனை
ஆட்சி செய்தவனே உன்
பிரிவைத் தந்து என்றும் உன்
தவிப்பில் தத்தளிக்க விட்டாயே...


நீ வேண்டும் என்னருகில் 
உன்மார்மீது சாய வேண்டும் 
உன்விரல்கள் தலைகோர வேண்டும் 
உன் பாசமுத்தம் என்
நெற்றி தழுவ வேண்டும்

Monday, December 27, 2010

மாமியாரான தாயவள்

மாமியென்ற பந்தமும் 
மருமகளென்ற சொந்தமும்
காலாகாலம் கைகலப்பில்
திருத்தம் கண்டிரா தொடர்கதையாய்


கணவனின் தாயவளை 
என்தாய் போன்றவளென்று 
நண்மை செய்துவிடின் 
நலம் காணலாமதிகம் 

Sunday, December 26, 2010

சிறகொடிந்த பறவைகள்


சின்னஞ்சிறுசுகளாய்
சிதறித்திரிந்த சிட்டுகளாய்
கவலைகளறிந்திராத
வேளைகளோடு பயணித்தோம்


தந்தை உழைத்திருக்க
தாயும் அரவணைக்க
சகோதரப் பாசங்களுடன்
சந்தோசமே காலங்கள்

Thursday, December 23, 2010

நீபோதும் இவ்வுலகில்

அன்பே உன் வதனமலர்வில் 
அகிலம் மறக்கின்றேன்
ஆதாரமற்ற வாழ்வில் 
உனையடைந்து மகிழ்கின்றேன்

உன்னாசை தீர்த்திட 
உயிராய் நானிருப்பேன் 
உத்தமனாய் வலம்வந்து 
ஊடலோடு கலந்திடுவேன் 

Wednesday, December 22, 2010

அதிகாரியாயிரு

மனமே இல்லாத அதிகாரியாய்
மனிதனை மேய்த்து 
மனிதன் பிழைக்கிறான் 
உழைப்பைச்சுறண்டி உயர்வடைகிறான் 


ஏய் மனிதா......
இன்றையதினம் உனதானதால் 
ஆட்டிப்படைக்கிறாய் முடியும்வரை
தொழிலாழியானவனும் மனிதனடா

Monday, December 20, 2010

அச்சங்கொண்டு அடங்கிடாதே....


சொல்வதற்கு துணிந்துநில் 
வெல்வதற்கு எழுந்துநில் 
மாற்றானின் செய்கையில் 
அச்சங்கொண்டு அடங்கிடாதே


ஆளப் பிறந்தவனென்று 
ஆட்டிப் படைப்பவனையோ
வாதப் பிறவியென்று
விவாதம் செய்பவனையோ..
அச்சங்கொண்டு அடங்கிடாதே...

Sunday, December 19, 2010

கறிவேப்பிலையான மனிதம்......


தேவை என்றறிந்தேன் 
மருத்துவம் உன்னில் கண்டேன் 
உன் வாசத்தில் நலங்கொண்டேன் 
பாவித்ததால் தூக்கியெறிந்தேன்


சமையலோடு உடனிருந்தாய்
பரிமாறும்போது சேர்ந்திருந்தாய் 
உண்ணும் போது ஒதுக்கிவிட 
மனமேன்தான் கோணுவதில்லை

Thursday, December 16, 2010

மடிப்பிச்சை தாராயோ....


அன்பே உருவமாய் அடைந்தேன்
பாசமே உயிராய் தொடர்ந்தாய்
சுவாசமே நீயாய் சுவாசிக்கிறேன்
உலகமே நானாய் கொள்கிறாய்


மெய்மறந்த காதலை உணர்கிறேன்
அமுதமாய் என்றும் தித்திக்கிறாய் 
வாழ்வின் வெற்றியாய் கொள்கிறேன் 
மங்கிடா ஒளியாய் மிளிர்கிறாய் 

Tuesday, December 14, 2010

என்னிதயத்தைப் பறித்தாய்....



கபடங்களறியா மனதுடன் 
இதய சுத்தியோடும் 
கவலைகளற்ற நாட்களோடும் 
காலங்கள் கரைந்தன 


இதயந் தேடிய
இனிய காவலனாய் 
சுகங்கள் நிறைந்த 
சுகமானவனாய்....
என் இதயத்தை திருடிவிட்டாய் 

Sunday, December 12, 2010

வைரக் கண்ணீர்கள்.....(aids)

உன் தந்தைவழி தவறோ 
உன் தாய்விட்ட பிழையோ 
தங்கமே உனக்கும் 
AIDS என்ற கொடியநோய்

உன்பார்வையின் ஏக்கத்தில் 
பலகோடி வரிகளுண்டப்பா 
பிறந்தது உன்தவறா?
படைத்தவனைத்தான் கேட்கலாமா......?

Saturday, December 11, 2010

மன்னித்தது என்மனம்....



வேசமற்ற பாசமொன்றை விதைத்து
என் தாயற்ற தாயனவளேயுனை 
தங்கம் என்ற குணமென்று 
தாங்கினேனே என்நெஞ்சில் 


என் காதலியாகவோ 
எனைச்சேர்ந்த தாரமாகவோ 
வென்றிடாத பாசத்தினுச்சத்தை
உறவுகளின் மேன்மையானவளாய்
அடைந்திருந்தாய்.....

Thursday, December 9, 2010

நா...காத்து நலம்பெற



நான் செய்திடுவேனென்று 
சொற்களோடு மறந்து 
நாள்முழுக்க காக்கவைத்து 
வாக்குறுதியும் மறந்துவிடுவதேன்


சொன்னபடி நடந்திடுவானென
நாளெல்லாம் காத்திருந்து 
பலதிட்டம் இவனடைந்து 
பரிதவித்து தோற்கின்றான் 

Tuesday, December 7, 2010

தரணியில் பிறந்தபயன்...

பசிக்குக் கையேந்திய 
பச்சிளம் குழந்தைக்கு
இல்யென்று மனமும் 
எப்படியப்பா சொல்கிறது 
யாரோ விட்டதவறில் 
வீதிக்கு வந்துவிட்ட 
மனித(உன்)குலத்தின் அவலமிது
உன்கடமை மறந்துவிட்டாய் 
ஏற்றத்தாழ்வு 
இணைந்திருக்கும் வாழ்க்கையில் 
ஏழை நிலை உணர
ஏனுள்ளம் நாடவில்லை
வாகனப் பவணியுன் 
வருகையென்றும் நிலைத்திடுமா
வழியிலுள்ள ஓர்தடங்கல்
உன்நிலையும் மாற்றிடுமே...
நீயறியா கஞ்சத்தனமுன் 
அகத்திரையினை மறைத்திருக்கு 
கண்மூடும் வேளையிலே
கைசேதப் படுவாயே...
தயவுதேடுகின்ற ஓருயிரை
தத்தெடுத்தேனும் வழிசெய்திடு
தரணியில் பிறந்தபயன் 
அடைந்தபலன் கிடைத்துவிடும்

Monday, December 6, 2010

அனாதையெடி உன்னால்......

அனாதையடி நானும்
அதாரமில்லையெடி உன்னால்
நீ மறுத்த அன்பைத்தேடி
அனாதரவாய் தவிக்கிறேனடி

குழைந்து வழைந்து
நகம்கடித்து நாணித்தாய்
குழந்தை மனமுனக்கென
உள்ளமுனை தரிசித்தது

Sunday, December 5, 2010

உணர்ந்த நட்பு....



உதிரும் பொழுதுகளை 
பசுமை நினைவுகளோடு 
உயிர்ப்பித்து மறைந்தவளே
உன் தரிசனம் எப்போது..


கபடமற்ற உள்ளத்திற்கு 
காதலை காவலனாக்கி 
பூட்டிவைத்துச் சென்றாயே
விடுதலையும் தாராயோ...

Thursday, December 2, 2010

கைகொடுக்கும் நட்புலகம்



தட்டுத்தடுமாறி தாவிப்பிடித்து 
தவழ்ந்து வரும் தங்கமேயுனை
அன்புக்கரம் நீட்டி 
அகமகிழ்வுடன் காத்திருக்கிறேன்


அஞ்சாநெஞ்சமுனக்கு 
ஆனதெல்லாம் சொல்லிவிட்டாய்
ஆற்றல் இருந்தமையால்
அறிவுக்கண் திறந்துவிட்டாய்

Wednesday, December 1, 2010

மனங்கலங்காதே...


காதல் என்றுரைத்து
திசைமாறும் வாழ்வற்று
சிதைந்திடா உணர்வுகளுடன்
காத்திருக்கிறாய் உன்துணைக்காக

காண்போரை நாடவில்லை
கைகோர்த்தும் நடக்கவில்லை
சமூகத்திரையினில்
உன்சரித்திரம் சிறந்ததே..




Related Posts Plugin for WordPress, Blogger...