இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 5, 2012

சமுகத்திற்காய் விழித்தெழு.......!!!


விழித்தெழு என் வாலிபனே 
உன் தூக்கம் கலைத்து விழித்தெழு 
உன் தலைவனின் பாதையில் 
படுகுழி காத்திருக்கிறது விழித்தெழு 


உன்னை மயங்கச்செய்த கட்சிவாதமும் 
உனக்கு ஆசையூட்டிய பசப்பு வார்த்தைகளும் 
கானல் நீராயானது இன்னுமா தூக்கம் 
விழித்தெழு உன்னை நீயறிவாய் 


சமுகத்தின் ஒற்றுமைக்காய் வாக்கிட்டு 
உன் சந்தோசத்திற்காய் காத்திருந்து 
தசாப்தங்கள் கடந்தும் பரிதாப வாழ்வுடய
உன் தவிப்பிலிருந்து விழித்தெழு 


சமுக ஒற்றுமை நோக்காகக் கொண்டு 
அடக்கு முறைக்கு சாவுமணியடித்த 
தங்கத்தலைவனின் உரைகள் மறந்து 
தாரைவார்த்த தலைவர்களின் வழியறுத்து 
வீரியம் கொண்ட விழுதுகளாய் விழித்தெழு 


அன்னியன் உனை அவமதிக்கிறான் 
ஆட்சியாளன் உனை ஏறிமிதிக்கிறான் 
நிராயுத பாணி உனை நிற்கவைத்துச் சுடுகிறான் 
உணர்வற்ற உறக்கமெதற்கு விழித்தெழு 



ஓராயிரம் கட்சிகளோ பிரிவுகளோ வேண்டாம் 
முஸ்லிம் என்ற ஓர்கட்சியில் சேர்ந்து 
முழு உலகையும் திரும்பச்செய்திட 
முழு மனிதனாய் இன்றே விழித்தெழு 


பகட்டு வார்த்தைகளோடும் 
பசப்பு வாக்குறிதிகளோடும் 
பரிதாபமாய் உனைக் கட்டிவைத்து 
சிறுதூக்கம் தந்தவன்- உன்மீது 
கூத்தடிக்கிறான் வீரத்துடன் விழித்தெழு 


வேங்கையுன் வெற்றிகளும் 
உன் சமுகத்தின் நண்மைகளும் 
சூரையாடப்படுகிறது வாலிபனே 
விழித்தெழு காவலனாய் விழித்தெழு 


இன்று நீபடும் அவலத்தினை 
நாளை உன் பிள்ளைகளுக்கும் 
மீதம் வைத்திடவா இன்னும் தூங்குகிறாய் 
விழித்தெழு மனிதா விழித்தெழு 


பேராயுதங்கள் வேண்டாமென்று 
ஒற்றுமை எனும் ஆயுதத்தினை விட்டுச்சென்ற 
அஷ்ரபின் கனவுகள் சிதைக்கப்படுகிறது 
ஒன்று சேர்த்திட இன்றே விழித்தெழு 


உன் அக்கம் பக்கமும் திரும்பிப்பார் 
அயலவர்களும் அசந்து தூங்கிறார்கள் 
தளர்வு விட்டு அவர்களையும் தட்டியெழுப்பு
அவர்களின் வீரத்தலைவனாய் விழித்தெழு 


உன் விழிப்பில் ஓடுவார்கள் 
உன் விழிப்பில் அடங்குவார்கள் 
உன் விழிப்பில் ஒதுங்குவார்கள் 
உன் விழிப்பில் தூங்க மறுப்பார்கள் 
ஈற்றில் துயில் கொள்வாய் சாந்தியோடு 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Admin said...

இன்றைய இளைஞனுக்கு வேண்டிய கவிதை..

குறிப்பாக..

உன் அக்கம் பக்கமும் திரும்பிப்பார்
அயலவர்களும் அசந்து தூங்கிறார்கள்
தளர்வு விட்டு அவர்களையும் தட்டியெழுப்பு
அவர்களின் வீரத்தலைவனாய் விழித்தெழு

எனக்குப் பிடித்தது.

Unknown said...

காலத்திற்கு ஏற்ற கவிதை.............. நன்று .................. தொடரட்டும் ...............

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...