இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, April 17, 2018

தூக்கிலிடுங்கள்....(ஆசிபா)

காம வெறியர்களின்
மற்றுமொரு கழியாட்டத்தில்
ஆசிபா என்னும் உயிர்
சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாகியிருக்கிறது

அரக்கர்களின் உலகில்
அடிக்கடி காம வேட்டை
நடந்தவண்ணமிருக்கிறது
தண்டிக்கப்படாத பிசாசுகள்
வெறிபிடித்தாடுகிறது

மதிக்கப்படாத பெண் குலம்
வதைககளால் மிதிக்கப்படுகிறது
பச்சிளம் குழந்தை அறிந்திடாத
இவ் வெறியர்களை வேரோடழித்திடணும்....

சட்ட ங்களின் தளர்ச்சியில்
பெட்டைகளின் துணிவிது
நாலு பேரை நடு வீதியில்
தூக்கிலிட்டுப்பாருங்கள்
நாடே தூய்மை பெறும்.....

நிலையில்லா உன் நிலை

நாளை நாறப்போகும் உடலோடு
நாளைக்காய் ஏன் நாவிழக்கிறாய்
நானிலமும் நமக்கற்றதாகி
நால்வரல்லவா சுமந்து செல்வர்

பிறந்த மேனியுடன் செல்லயிருக்கிறாய்
இறப்போடுன்னுலகம் முடிந்திடுமே
வெறுப்போடேன் வெட்டியாள்கிறாய்
வேற்றுமையற்று வாழ்ந்திடலாமே.





Related Posts Plugin for WordPress, Blogger...