விதியின் வழியில்
விக்கித்த பெண்ணானேன்
விலை மதிப்பற்ற மானமிழந்து
விபச்சாரியானேன் எனைமறந்து
கன்னிப்பருவமதில் என்
கட்டழகில் மயங்கியவனால்
கனிவுடன் காதல் விதைத்து
கடுப்பகன்று விட்டிருந்தான்
ஆசைக்கு அடிபணிந்ததில்
ஆனேனே பாவியாய்
ஆதரவு தினம் நாடி
ஆக்கி விட்டேன் எனை இழந்து
நாசம் எனைச்சேர்ந்தது
நாள் தோறும் வசை வந்தது
நாற்பது கடந்து விட்டதால்
நான்னும் ஒரு சருகானேன்
சமூகத்தை நாறச்செய்து
சலித்திருக்கும் பொழுதுகளில்
சஞ்சலங்கள் நிறைந்திருந்த
சந்தர்ப்பங்களை வைகிறேன்
வழிதவறும் நேரங்களில்
வடு பற்றி உணர்ந்திருந்தால்
வகுத்தடையும் துயர்களை
வருமுன் காத்திடலாம்
விபச்சாரம் செய்ததில்
வினைகள் மட்டும் அடைந்து
விடையற்ற கேள்வியாய்
விதி நொந்தழுகிறேன்
8 comments:
கவிதை அருமை நண்பா வாழ்த்துக்கள்
அருமை அண்ணா... உண்மையை சொல்லும் வரிகள்...
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி நண்பா சசி மற்றும் ஜோதி உங்களின் மேலான கருத்திற்கும் வாழ்த்துக்கும்
எங்கயோ இடிக்கிது...
இதையும் படிச்சு வைங்க புவனேஸ்வரிகள் பேசா (*தேவைப்*) பொருட்களா?
நண்பரே தங்களின் கட்டுரை படித்தேன் அருமை தங்களது நோக்கம் விபச்சாரம் செய்யும் பெண்மாத்திரம் குற்றவாளி அல்ல ஆண்களும் சமுகமும் கூட குற்றவாளிகளே என்பதாக அமைந்திருக்கிறது அதை மறுப்பதற்கில்லை உண்மைதான் ஆனால் அதிகமாக விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களை விட பெண்களை பேசப்படுவதால்தான் அவர்கள் மீது ஆக்கங்களும் வாதங்களும் எழுகின்றன காரணம் விபச்சாரத்தில் இருசாரார் இருக்கிறார்கள் அதில் ஒருசாராரான ஆண் தப்பித்துக்கொள்கிறான் அத்தனையிலும் சுமையாக மாறுபவள் பெண்ணாகிறாள் சமுக அமைப்பு இவ்வாறே அமைந்து விட்டது ஆண் தப்பாக இருக்கும் போது கண்டுகொள்ளாத உலகம் பெண்ணை மாத்திரம் குறை சொல்வது பிழையாக தென்பட்டாலும் சில எதார்த்தங்கள் இருக்கத்தான் செய்கிறது அத்தனைபேரின் பார்வையும் பெண்களைத்தாங்கியதாக அமைவதுதான் காரணம் பெண்களை மையமாக வைத்த சமுக அமைப்பு அது மாற வேண்டுமானால் சமுகத்தின் அங்கமான ஒவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும் அப்படி திருந்தினாலொழிய பழி விழுந்து கொண்டேதான் இருக்கும் மாறாது பெண்களது தடுமாற்றத்திற்கு மூல காரணம் ஆணாக இருந்தாலும் அதனைப்பற்றி பேசப்படுவதில்லை காரணம் அதிக கவர்ச்சி ஆண்களை விட பெண்களிடம்தான் ஆண் அழுதால் திரும்பிப்பார்க்காத உலகம் பெண் சினுங்கினாலும் வெருண்டெழுவதை காண்பதில்லையா இவைகள்தான் பெண்சார்ந்து அதிகம் எழுதப்படுவதற்கு காரணமாக அமையலாம் என்பது எனது கருத்து
எனது கவிதையைப்பொறுத்தவரை எங்கோ இடிப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள் ஒவ்வொரு விடயத்தையும் நோக்குணர்களின் நோக்கத்தைப்பொறுத்து வித்தியாசப்படலாம் எனது நோக்கம் இங்கு அதிகமாக ஏமாற்றப்படும் பெண்கள் ஏமாறி அதன் விழைவில் சிக்கி தவி்ப்தற்கு முன் அதனை முன்கூட்டியே சிந்தித்து நடந்தால் இவ்வாறான குறைகளுக்குள் இருந்து நாம் எம்மை தவிர்ந்து கொள்ளலாமல்லவா
மாறாக பிளைகள் அனைவரிடமும் இருக்கிறது ஒவ்வொருவராக திருந்தினால் உலகம் வளம் பெற வழியாகலாம் என்பது அன்பான கருத்து
மிக்க நன்றி நண்பரே
தங்களின் மேலான கருத்துக்கு இவ்வாறான கருத்துகளை வரவேற்கிறேன்
அற்புதம் .. அழகான விளக்கமும்..
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
கவிதை வலி மிகுந்தது
பின் கூறிய கருத்து
கொஞ்சம் வருடி தந்தது
Post a Comment