இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, July 18, 2016

கடலோரத்து மணலுக்கான எனது வாழ்த்து.......

கவிஞர்களை ஈன்றெடுத்த பாலமுனை
என்றோ உன்னையும் கவிஞனாய் ஈன்றிருந்தது
தனித்துவப் புலமையாய் உன் பரிணாமத்தால்
எம் தாய் மண்ணுக்கு என்றும் பெருமிதமே

நாம் கற்றிருந்தது ஒரே பாசறையானாலும்
எமை இரு வேறு திசைகளில் பயணிக்கச்செய்த
விதியின் சதுரங்கத்தில் கவித்துவம் என்னும்
ஒரு பாதை எமை மகிழ்வித்திருக்கிறது தோழா.....

தட்டுத்தடுமாறிய வாழ்வில் துணிந்து திசைதேடி
முனைந்து முத்தெடுத்து இன்று உன் சொத்தாய்
கடலோரத்து மணலைக் கையிலேந்தி நிற்கிறாய்
இக்காலத்தின் வெற்றியாளன்நீ வாழ்க வாழ்க!

இம் மணலின் அருமை போற்றிட
தமிழ் அறிஞர்கள் கூடிநிற்கும் வேளையில்
எமைப் படித்திடும் உள்ளங்களுக்கும் மகிழ்வுதர
என் மன முற்றத்தில் உண் மணலைத் தூவியிருக்கிறேன்

நல்லதோர் சமுகம் நோக்கிய படைப்பாளியாய்
சுமைகளேந்திய சொற்களால் செப்பனிட்டு
சமுகக் குறைகளாய்ந்திடும் கவிதைகளை
தன்னகத்தே கொண்ட மணலை மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்

சொற்ப வாழ்நாளில் சுடர்விடும் நன்னறங்களாய்
காலத்தால் அழியாத தமிழ்த்தொண்டாய்
இலக்கியப் பாதையில் விளக்கவுரைகளாய்
உம் படைப்புகளும் பதிவாகிட மனதாற வாழ்த்துகிறேன்

அனைவரும் கூடிக் குலாவும் கடலோரத்து மணல்போல்
அனைவர் மனதையும் கொள்ளைகொண்டதாய் அமைந்த
உன்னால் உருவாக்கிய இம் மணல் மீதும்
கலந்து மகிழும் சான்றோரையும் போற்றி வாழ்த்துகிறேன்.
நன்றிகள்.



நண்பன் முஹாவின் கவிதை நூலுக்கான என் வாழ்த்து என்றோ எழுதி சேமித்திருந்தேன் தமதமாய் பிரசுரித்தாலும் உள்ளத்தின் வெளிப்பாடு என்றும் உண்மையாய் அமைந்திருக்கிறது என்பது திண்ணம். நன்றிகள்

Sunday, December 21, 2014

தாயையும் தாங்கும் தாய்

பாசமென்னும் மெத்தையிட்டு 
அரவணைத்துத் தாலாட்டியதாலா 
தாயையும் தாண்டி
மெய்மறந்து தூங்குகிறாய்??

தந்தையென்னும் உன்னதம் 
தரணியில் ஏதுமில்லை 
தாயையும் தாங்கும் தாய் - உன் 
தந்தை என்பதாலா உறங்குகிறாய்??

மகனே/ளே உலகையே உனக்காய் 
உருவாக்கிடக் காத்திருக்கிறேன்
என் உதிரமெல்லாம் மகிழ்கிறது 
கண்ணயர்ந்து தூங்கிவிடு


Wednesday, November 19, 2014

ஏழ்மை...... கவிதை 02

உள்ளத்து ஆசைகளின் 
உந்துதலின் பாதைகளால் 
உலகத்து ஏழ்மைகள் 
உருவாகிறது உத்தமர்களே....

சமுகத்து விளைவுகளில் 
சரிந்து நிற்கும் பொருளாதாரத்தில் 
சலனமுன் திருப்தியில் கண்டு 
ஏழ்மையெனும் வறுமையில் திண்டாடுகிறாய் 

ஏ..மானிடா உம் உள்ளத்து உலகத்தில் 
வரையறையென்னும் சுவரமைத்துக்கொள் 
நீ ஏழ்மையை உணராய் - உன் 
உயிர் உள்ளவரை.

Monday, November 17, 2014

ஏழ்மை.........!!!


ஏழ்மை கொண்டுணர்ந்து 
தாழ்மையுடன் துவண்டு 
ஏழனச் செம்மலாய் 
மடிந்திடாதே துணிந்து நில் 

ஏழ்மை ஆட்கொண்டால் 
சிறுமை ஆகிடுவாய் 
சீற்றம் வாழ்வில் கொண்டு 
சீரழித்திடும் உன் நிம்மதியை 


ஏழ்மையின் உச்சம் கண்டு 
அச்சத்தில் அழிந்தோருமுண்டு 
ஏழ்மையுன்னுள் எதானாலென்று 
ஆய்ந்துபார் அமைதியடைவாய் 

ஏழ்மையை ஏராக்கி 
கூர்மையை புத்தியில் கொண்டு 
வாழ்கையை உழுதுபார் 
அறுவடையின்லாபம் உனதாகும் 




Related Posts Plugin for WordPress, Blogger...