இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, December 30, 2014

ஒன்றுபட்டு உலகையாள்வோம்.....


என் மனம் சிறகடித்துப்பறந்திருந்தது
ஆயிரமாயிரம் வார்தைகள்
ஆங்காங்கே தேங்கிக் கிடந்தது
என் தலைவனின் முடிவுகளுக்காய்
அத்தனையும் காத்திருந்தது

எங்கே உங்கள் தீர்மானம்
வரலாற்றுப் பிழையாகிடுமோவென்று
உன்னிப்பாய் ஊர்ந்தவண்ணமிருந்தேன்
உளம் மகிழும் முடிவுதந்து - மனங்களில்
முடிசூடா மன்னனானாய்

அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
பட்சிகள் பல தன்பங்குப் பா ஓதுகின்றன
காதில் வாங்கிடாது - வேங்கையாய் 
உம்வழியில் வீறு கொண்டு நடந்திடுங்கள் 
நாளைய சரித்திரம் காத்திருக்கிறது 

எட்டப்பர் கூட்டம் எள்ளிநகையாடுகின்றனர் 
அவர்களின் மனசாட்சிக்கே நாளை 
பதில்சொல்லாமல் தவித்துநிற்பர் 
சமூகமென்னும் பெருங்கடலுடன் 
விளையாடுகின்றனர் பேரலை மறந்து 

பெருவெள்ளங் கடந்து 
மனிதவெள்ளத்தின் ஆழங்கண்டு 
ஆட்சியாளர்களின் அகமழுகிறது 
ஆழும் போதே ஆற்றும் சேவையற்று
ஆசைக்கு அடிமையாயிருந்தனரே......

MY3 என்னும் சுனாமி 
செல்லா இடங்களெல்லாம் சென்று 
வெல்லும் சூட்சிமம் அமைத்து 
நல்லோர் யாவரையும் சேர்த்து 
நாளைய நலவுக்காய் காத்திருக்கிறார்

பெருந்தலைவன் அஷ்ரஃபின் வழியில் 
உம்மோடு பயணிக்கும் நாங்கள் 
உம் சுட்டுவிரல் திசையில் 
துணிந்து நின்று உயிரும் விட 
உளமாறக் காத்திருக்கிறோம் 

நாளை தோற்றுவிட்டால்  
என்ற கேள்வியில் பயணமெதற்கு 
நாளைய தீர்ப்புக்கு அதிபதி எம் இறைவன் 
தோற்றாலும் துவண்டிடா 
துணிவுள்ள சமுகம் எம்முடையது 

நாளைய சந்ததிக்காய் 
இன்றைய முடிவில் உறுதியாகி
பெறுமதியான தீர்வுகளுக்காய் 
ஒன்றுபட்டு உலகையாள 
இன்றே புறப்படு என் தோழா.............
.

Wednesday, December 24, 2014

இன்னும் காத்திருக்கிறேன்

என் கண்ணகியவள் 
கனதூரம் சென்றுவிட்டாளோ....
காத்திருக்கிறேன் 
எதிர் பார்த்திருக்கிறேன்.

ஆக்கிவைத்துக் கோலமிட்டு 
ஆறவிட்டு பரிமாறி - எப்போதும் 
ஆசுவாசம் எங்களுக்குள் - ஆனால் 
இப்போது பலநாள் இப்படியே 
பரிதாமாய்த்தான் கழிகிறது 

இன்னுமவள் வரவில்லை 
என்னையவள் அழைக்கிறாள் 
மரணமவர் வரும்வரை - அவள் 
சென்றவழியில் காத்திருக்கிறேன்


Sunday, December 21, 2014

தாயையும் தாங்கும் தாய்

பாசமென்னும் மெத்தையிட்டு 
அரவணைத்துத் தாலாட்டியதாலா 
தாயையும் தாண்டி
மெய்மறந்து தூங்குகிறாய்??

தந்தையென்னும் உன்னதம் 
தரணியில் ஏதுமில்லை 
தாயையும் தாங்கும் தாய் - உன் 
தந்தை என்பதாலா உறங்குகிறாய்??

மகனே/ளே உலகையே உனக்காய் 
உருவாக்கிடக் காத்திருக்கிறேன்
என் உதிரமெல்லாம் மகிழ்கிறது 
கண்ணயர்ந்து தூங்கிவிடு


Saturday, December 20, 2014

என் தாகம் தீர்த்திட.....

முதுமையில் வாடிநிற்கும்
காய்த்த மரங்கள் நீங்கள் 
உங்கள் தாகம் தீர்த்து 
என்தாகம் தணிக்கிறேன் 

வீதியில் விட்ட
விழுதுகளின் தவறில் 
சாதுகள் நீங்கள். 
சலனமும் அவர்களுக்கே.....

வருவீர்களா என்னோடு 
வாழ்வளிக்கிறேன் வறுமை தீர்க்க 
பிஞ்சு உள்ளம் என் நெஞ்சில் 
தாங்குவேன் குழந்தைகளாய்.....

Wednesday, December 17, 2014

அறிவீரோ......(படம் தந்த கவிதை)


என் எழில் காணும் 
கண்கள் கொண்ட காதலால் 
என் பசுமைக்காய் 
தவமிருக்கிறார்கள்  

என்னை அரவணைத்து 
தன் மடிமீது தவளவிட்ட 
நிலமகள் மீதென் காதலை 
சமர்ப்பித்திருக்கிறேன் 

எண்ணிலடங்கா இன்பங்களுண்டு 
என்பெருமையை சொல்லியடங்காதென 
மகிழ்வோரைக் காண்கிறேன் - ஆதலால் 
தற்பெருமையும் கொள்கிறென் 

என்சிறப்பில் லயித்த வானம் 
தூரநின்று மகிழ்கின்றபோதெல்லாம்  
அவரின் ஆனந்தக் கண்ணீராய் 
மழை பொழிந்து மகிழ்விக்கிறார் 

இயற்கையாய் நாங்கள் கொண்ட 
சமநிலையை மறுக்கின்ற... 
மானிடனே எங்களுக்கெதிரியாகின்றனரே  
அறிவீரோ......????

Sunday, December 14, 2014

மறதி வேண்டும் மானிடா....!!

இறைவனின் கொடையிது 
அற்புதக் கணமிது 
மறதிக்கு மருந்து தேடி 
மாந்தர்கள் அலைவதுண்டு 

மறக்கத் தெரிந்த மனிதன் 
மகிழ்வோடிருக்கிறான் 
மனதின் காயங்களெல்லாம் 
மறப்பதாலன்றி வடு மாறுவதில்லை 

கடந்து வந்த பாதைகளில் 
கசப்புணர்வுகள் பலகோடி
நாளைய நிம்மதிக்காய் 
அவைகளை மறந்திடலே மருந்தாகிடுமே

எதிர்காலம் நோக்கிய பயணத்தில் 
திரும்பிப் பார்த்து நடந்திட முடிவதில்லை 
பாதிவழியில் தடுமாறிட 
சந்தோசவாழ்வில் தடுக்கிவீழ்வதாகிடும் 

மனிதனின் ஆற்றலறிந்த இறைவன் 
மறதி தந்து மகிழச்செய்திருக்கிறான் 
மனதின் ஆழுமையில் - மனிதர்களால்  
மறப்பதின்றி மகிழ்ந்திட முடிவதில்லை

மறப்பதுவும் மன்னிப்பதுவும் 
மகிழ்வுக்கு வித்திடும் - இன்றே 
மன்னித்து மறந்துவிடு - உன் 
வாழ்நாள்கள் உயிர்பெற்றுவிடும்  

சுவனத்துக் கரங்கள்


முதுமையிலும்  பாட்டாளியாய்
முனைப்புடன் தொழில்செய்து
முதுகெலும்பற்ற வாலிபனுக்கு
முன்மாதிரியாக்கிய கரங்கள்

இரும்பைத் தொழிலாக்கி
விரும்பிக் கறை ஏந்தி
துலங்கும் வாழ்வுதனை
வழங்கிய கைகளிவை

வறுமை தீர்க்க வயதை ஈந்து
மரணம் எய்திடினும்
யாசகத்திற்காய் கை ஏந்திடா
சுவனத்துக் கரங்களிவை

சோம்பேறி மனிதா...
பார்... இப் பார் முழுதும்
படர்ந்திட்ட இக்கரங்களால்தான்
பஞ்சங்களும் பயந்தொழிகின்றது




Related Posts Plugin for WordPress, Blogger...