இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, September 19, 2014

அன்பின் சக்தியில்

என்னவளே......எனையாளப்பிறந்தவளே
முழுவதுமாய் உன் ஆட்சியில்
முழ்கித்தத்தளிக்கிறேன்
உன் நினைவின்றிய நொடிகளின்றி
இவ் உலகமும் இருளாகிறது

உன் காதலின் அடிமையாய்
உமை வலம் வருகையில்
உம் காதலின் முன்னால்
உலகமும் அற்மாய்த் தோன்றுகிறது

எம் காதலுலகத்து அரசியாய்
எம் உணர்வுகளுக்கு உயிர்தந்து
நடமாடும் பல கவிதைகளாய்ப்
பிறந்து  - எம் உலகை
ஆக்கிரமித்திருக்கிறாய்

உன் அன்பும் அரவணைப்பும் 
சக்தி கொடுக்கிறது - இன்றே
மடிந்திடினும் நான் மகிழ்ந்தே 
இறந்திடுவேன். 

Thursday, September 18, 2014

ஹைபாவுக்கான வாழ்த்து

நிஷா அக்காவின் வரிகள் 

நேசமுடன் ஹாசிமின் நேசமான செல்ல மகள் 

ஹைபாவிற்கின்று பிறந்த நாள் 
அப்பா, அம்மா, அக்கா, அத்தை, மாமா ஆசிகளும்
பரிசுகளும் கிடைத்திடும் நாள் 

மாண்புடைய செல்வமகள் தீண்டுமின்பம்  தந்திடுவாள்
பட்டுப்போன்ற பாதங்களால் எட்டிஅடி வைத்தருகில் வந்து 
கட்டி முத்தம் தந்திடுவாள் கவலையெல்லாம்  மறக்க வைப்பாள்!
மழலையவள் சிரிப்பினாலே மலைகளையும் மயக்கிடுவாள் !

முத்தான முல்லை மகளிவள் முழுமதியாய் வாழ்ந்திடணும்
வரும் காலம் இவள் கரத்தில் வளங்களையே தந்திடணும் 
நெடுங்காலம் இவள் வாழ்வு சீரோடு சிறந்திடணும் 
வாழும் காலம் முழுவதுமே வசந்தம் மட்டும் வீசிடணும்

கவலைகள் கஷ்டங்கள்  கடுகளவும் அண்டாது 
கலைமகள்கள் இவள் வாழ்வில் நல்லாட்சி செய்திடணும் 
திருமகளாய் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்திடணும்
மனமார வாழ்த்துகிறேன் மருமகளே! நீ வாழ்க!


என் மனதிலிருந்து 

காலத்தின் கோலமிது 
கனிவான நேரமிது 
தூரத்துத் துயர்களில் 
தூற்றிய செய்திகளுக்கெல்லாம் 
அருகாமையின் அன்பில் 
அகம் நிறைந்து மகிழ்கிறேன் 

தத்தித் தாவிக் கைபிடித்து
சுட்டிக்குறும்பும் புன்னகையும் செய்து 
ஆசையாய் ஒரு முத்தம் 
வீம்பாய் பல சேட்டையென
அத்தனையிலும் மகிழ்கிறேன் 
அகிலமிது அற்பமாகிறது 

சொற்ப காலம் இருந்தாலும் 
சொர்க்கமாய்த்தான் உணர்ந்து 
சிகரம்தொடும் மகிழ்வில் 
சிலிர்கிறதென்தேகம் 
தொடர்ந்திடப் பிரார்த்திக்கிறேன் 
தொடரும் நாளுக்காய் காத்திருக்கிறேன் 


Tuesday, September 9, 2014

கவிதைக் கொலைகள்

கவிதைகளின் துணையில் 
காதல் காவியங்களின் 
அரங்கேற்றம் நடக்கிறது 
காதலை உள்ளம் உணரும் போது 
கவிதைகளும் உயிர்பெறுகிறது 

அத்தனை கவிஞர்களும் 
காதலிப்பதால்தான் - அவர்களின் 
கவிதைகளுடன் வாழ்கிறார்கள் 
நேசிக்கப்படாத கவிதைகளால் 
மனதளவில் வஞ்சிக்கப்படுகிறார்கள் 

காதல் உணர்வுகளால் 
உருவாகின்ற கவிதைகளை 
காதலின்றிய பார்வையால் 
சிதைத்து சீரழிக்கிறார்கள் - அதனால் 
ஏங்குகிறது கவிதைகளும் கனவுகளும் 

கருவுக்குள் காதலைவைத்து 
காதலை உணர்வுக்குள் வைத்து 
உணர்வுகளால் உருவாகும் கவிதைகளை 
உயிருள்ள குழந்தைகளாய் 
யாசிக்கிறார்கள் கவிஞர்கள் 

அத்தனை கவிதைகளும் 
மொத்தமாய் ஒவ்வொரு உயிர்கள் 
வெறுப்பை ஆயுதமாக்கி 
பொறுப்பின்றிய கொலைகள் 
கவிதைக்கொலைகளாய் சாதாரணமாகிறது 

உயிர்தரும் கவிதைகள்....

கவிதைக் காதலன் நான் 
என் காதல் தேவதை நீ... 
என் உயிராகிய கவிதைக்கு 
கருப் பொருளாகிய உடலும் நீ.....

உனக்காக எழுதிய 
ஆயிரமாயிரம் கவிதைகள் 
எனைப்பார்த்து ஏளனம் செய்கிறது 
உனைப்பார்த்துப் பரிதாபங்கொள்கிறது 

என் உள்மனதின் உணர்வுகளை 
கவிதைகளாய்ச் சேர்த்து 
படைத்து வைத்திருந்தும் 
இன்னும் புசிக்கப்படாது வீணாகிறது 

காதலித்துப்பார் கவிதை வருமென்றார் அவர் 
கவிதைகொண்டு காதலித்தும்  
வெறும் கனவுகளாகிப்போனது 
என் உணர்வுகளும் ஆசைகளும் 

உனைப்படைத்தளித்த 
இறைவனைப் புகள்கிறேன் 
என் வலிகள் வேதனைகளானாலும் 
என் வார்த்தைகள் உனக்காக 
கவிதைகளாய்த்தான் படைக்கப்படும் 

இன்றய என் படைப்புகள் 
உனக்கு மட்டும் அருவருப்பாகியும்...... 
ஏனதைத் தொடர்கிறேன் தெரியுமா? 
நாளை என் மரணத்தின் பின் 
கவிதைகளாய் உயிர்வாழுமென்பதால் 

கவிதைகளை உதாசீனப்படுத்துவது 
கவிஞர்களை கொலைசெய்வதற்கு சமம்
நானும் நடைபிணமாயத்தொடர்கிறேன் 
உனைக் காதலிப்பதால்தான் 

இக்கவிதைகளுக்காய் 
எனைவிட்டு நீ பிரிந்தாலும் 
வடு தீர்க்கும் மருந்தாகி 
கவிதைகள்தான் எனை வாழவைக்கும் 
என்றும் நீ நலம்வாழ என் பிரார்த்தனைகள் 

                            

குறிப்பு : முன்பொரு நாள் மனவேதனையில் வடித்திருந்த வரிகள் பிரசுரமாகவில்லை இன்று கண்டு வரிகளின் ஆழம் என் மனதில் தைத்தது கருவில் ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்ந்தேன் ஆதலால் இன்று 29/11/2015 பிரசுரம் செய்கிறேன் 

Friday, September 5, 2014

விழித்தெழு என் வாலிபனே.......


என் சமூகத்து வாலிபனே
சற்றும் சலனமின்று சிந்தித்துப்பார்
உன் முதுகெலும்பிலுன்னால்
நிமிர்ந்து நிற்கமுடியுமென்று
நிருபிக்க வேண்டாமா.......நீ.

சீதனக்கொடுமையில்
சிக்குண்டு சீரழியும் எம்
சீர்குலப்பெண்களை
எம்மைவிடக் காப்பவர்
யாருமுண்டோ...........

பெண்பெற்ற தந்தையும்
பெண்களோடு பிறந்த சகாவும்
பொருள்தேடியலையும்
பரிதாபங்கண்டும்
பகல்கொள்ளையுன்னால் நியாயமா????

உனக்கென ஒருவீடமைத்து
அதிலுந்தன் துணையமர்த்தி
அகிலம்போற்ற வாழ்வுதரும்
உத்தமனாய் உனையாழ முடியாது - உன்
தாய்தந்தையை நரகத்திற்கு தயார்செய்கிறாய்

Wednesday, September 3, 2014

குடியெனும் கொடுங்கோலன்


குடிக்கிறான் குடிக்கிறான்
குடிகாரன் என்கிறார்கள்
ஏனவன் குடிக்கிறானென்று
யாரவனுக்குள் தேடியவர்கள்

என்னவளங்கு எனக்காகயில்லையென
துக்கம் மறக்கக் குடிக்கிறான்
காதலித்தவள் கைவிட்டாளென்று
காதல் துறக்கக் குடிக்கிறான்

அழிந்தது செல்வம்
அற்றது உறவெனக் குடிக்கிறான்
அச்சம் தவிர்த்திட
அகிலம் மறந்திடக் குடிக்கிறான்

இறப்புக்கும் குடிக்கிறான் 
பிறப்புக்கும் குடிக்கிறான் 
பழகிப்போனது குடியென
வீழ்ந்துவிட்டேன் குடியிலென்கிறான்

குடிகாரனாக்கிய பொறுப்பாளிக்கோ  
அடிமையாகிய பாவிக்கோ தெரியவில்லை 
குடியொரு கொடுங்கோல் அரசனென்றும் 
விசத்தில் உருவான நஞ்சென்றும்  

கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்சிசெய்து
இவனையும் ஆட்டிவைத்து
அவனையே இழந்திடவும்செய்து
ஒரு நாள் முழுவதுமாய் முடித்துவிடும் 
அசுரனென்றும் புரியவில்லை 

எனதன்பு உலகத்தவரக்ளே
குடிகாரர்களுக்கு உணரத்துங்கள்
வாழப்பிறந்த மானிடன் உனக்கு 
குடிதரும் அற்ப சுகம் தவிர்த்து
ஆயிரமாயிரம் இன்பங்கள்
உலகில் கொட்டிக்கொடுக்கிறன்றது

Tuesday, September 2, 2014

தூக்கம் தொலைந்த இரவுகள்


என்னிரு கண்களும் மூடமறுத்து 
சுழன்று புரண்டு நித்திரையின்றி 
நினைவுகளின் நிழல்களில் 
கடத்திய நாட்களின் தவிப்பை
என் தலையணை சொல்லும் 

என்னவனங்கிருக்க 
நானிங்கு தனித்திருக்க 
நான்கு சுவர்களுக்குள் 
சிறைபிடித்த இரவுகளில் 
சிற்றின்பமேனுமின்றி  
நானிருந்த தனிமை விபரிக்கும் 

துணைதேடிய உணர்வுகளுக்கு 
விலங்கிட்டு வேதனைதந்து 
யார் யாரினதோ வெற்றிக்கு 
தான் தோற்றுப்போன வாழ்வை 
என் வயதுங்களிடம் விவாதிக்கும் 

தூரத்துத் தொலை பேசிகளும் 
துயரடைந்த நிகழ்வுகளும் 
துடிதுடித்த மனதினை 
துயில் கொள்ளத் தடுத்திருந்து 
தூக்கம் தொலைந்த இரவுகளாக்கியது 
Related Posts Plugin for WordPress, Blogger...