இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, September 18, 2014

ஹைபாவுக்கான வாழ்த்து

நிஷா அக்காவின் வரிகள் 

நேசமுடன் ஹாசிமின் நேசமான செல்ல மகள் 

ஹைபாவிற்கின்று பிறந்த நாள் 
அப்பா, அம்மா, அக்கா, அத்தை, மாமா ஆசிகளும்
பரிசுகளும் கிடைத்திடும் நாள் 

மாண்புடைய செல்வமகள் தீண்டுமின்பம்  தந்திடுவாள்
பட்டுப்போன்ற பாதங்களால் எட்டிஅடி வைத்தருகில் வந்து 
கட்டி முத்தம் தந்திடுவாள் கவலையெல்லாம்  மறக்க வைப்பாள்!
மழலையவள் சிரிப்பினாலே மலைகளையும் மயக்கிடுவாள் !

முத்தான முல்லை மகளிவள் முழுமதியாய் வாழ்ந்திடணும்
வரும் காலம் இவள் கரத்தில் வளங்களையே தந்திடணும் 
நெடுங்காலம் இவள் வாழ்வு சீரோடு சிறந்திடணும் 
வாழும் காலம் முழுவதுமே வசந்தம் மட்டும் வீசிடணும்

கவலைகள் கஷ்டங்கள்  கடுகளவும் அண்டாது 
கலைமகள்கள் இவள் வாழ்வில் நல்லாட்சி செய்திடணும் 
திருமகளாய் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்திடணும்
மனமார வாழ்த்துகிறேன் மருமகளே! நீ வாழ்க!


என் மனதிலிருந்து 

காலத்தின் கோலமிது 
கனிவான நேரமிது 
தூரத்துத் துயர்களில் 
தூற்றிய செய்திகளுக்கெல்லாம் 
அருகாமையின் அன்பில் 
அகம் நிறைந்து மகிழ்கிறேன் 

தத்தித் தாவிக் கைபிடித்து
சுட்டிக்குறும்பும் புன்னகையும் செய்து 
ஆசையாய் ஒரு முத்தம் 
வீம்பாய் பல சேட்டையென
அத்தனையிலும் மகிழ்கிறேன் 
அகிலமிது அற்பமாகிறது 

சொற்ப காலம் இருந்தாலும் 
சொர்க்கமாய்த்தான் உணர்ந்து 
சிகரம்தொடும் மகிழ்வில் 
சிலிர்கிறதென்தேகம் 
தொடர்ந்திடப் பிரார்த்திக்கிறேன் 
தொடரும் நாளுக்காய் காத்திருக்கிறேன் 


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...