இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, April 23, 2010

அரசியல் சாக்கடை


அரசியல் எனும் புனிதம்
சாக்கடையாகிக் கிடக்கிறது..
துடைப்பவர் யாருமில்லை
சுயநலமிக்க குப்பைகளும்
காட்டிக்கொடுக்கும் கூளன்களும்
பேரம் பேசும் பாசிகளும்
துரோகியான பாறாங் கற்களும்
அரசியல் ஓடையில்
கொட்டிக்கிடக்கிறது
துடைப்பார் யாருமில்லை

மக்கள் எனும் பாமரன்
பசப்பு வார்தைகளில் மதிமயங்கி
குப்பைகளுக்கே முலாம் பூசுகிறான்
வாக்கு எனும் பேராயுதம்
கையிலிருந்தும்
புத்திஎனும் இயந்திரம் தனக்கிருந்தும்
அரசியலை சுத்தம் செய்ய
முனைபவர் யாருமில்லை

வாக்கிடும் மனிதா
சற்று சிந்தித்துப்பார்
உன் வாக்கை மட்டும் அடைவதற்காய்
உன் கால்பிடிக்கிறான்
உன்னை உறவு என்கிறான்
அத்தனையும் நீ வாக்கிடும் வரை
உன் வாழ்நாளில் எத்தனை
தடவை ஏமாந்திருப்பாய்
உன்னில் மாற்றம் ஏதுமுண்டா?
சற்று கவனித்துப்பார்

உன்னை ஏணியாக்கி ஏறியவன்
எட்டி உதைத்து விட்டு....
அடுக்கு மாடிகளிலும்
சொகுசுவாகனங்களிலும்
சல்லாப வாழ்க்கையுடன்
வலம் வருகிறான்
தன்குடுப்பத்துக்கும்
தன்னைச் சார்ந்தவனுக்கும்
அரசியல் செய்கிறான்
நீ கவனிக்க வில்லையா?

மீண்டும் உன் காலடி வருவான்
மீண்டும் உன்னிலை அதுதான்
உன் சந்ததிகளுக்கு
நீ செய்தது ஏதுமில்லை
அருகதையற்ற அரசியல் வாதியாகிய
அவன் சந்ததிதான் நாட்டின்
நாளைய தலைமைகள்
சிந்தித்துப்பார்.....

ஒன்று மட்டும் சாத்தியம்
உன்னை வைத்து மூட்டப்படும்
அரசியல் எனும் தீயினால்
உன்னால் மட்டும்
அணைத்து விடவும் முடியும்
பிராகாசிக்கச்செய்யவும் முடியும்
இன்று ஓடிக்கொண்டிருக்கும்
அரசியல் சாக்கடை
சமூகமெனும் சமுத்திரத்தை
மாசுறச்செய்யு முன்
நிறுத்தி வடிகட்டி விட
உன்னால் மட்டும் முடியும்
இன்றே விழித்தெழு
இனி உன் கையில்.....
மாறுமா நாளை?

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...