மனிதா
காக்கை தன் இனத்துக்காக
கொள்ளும் வேட்கையை
சற்று கவனித்துப்பார்
எறும்புகளின் கூட்டங்களைப் பார்
கறையான்களின் வாழ்வுதனை
எண்ணிப்பார் இவைகளில்
எமக்குண்டு படிப்பினை
புத்தி எனும் ஆறாவது
அறிவுடன் பிறந்த
நீ மட்டும் எதிர் மறையாய்
வாழ்வதேன்
உன்னோடு பிறந்தவனுக்கு
எதிரியாய் நீ
உன்னை பெற்றவளுக்கு
பாவியாய் நீ
உன்னோடு பழகியவனுக்கு
துரொகியாய் நீ
உன்னோடு வாழ்தவனுக்கு
கயவனாய் நீ
ஏமாற்றுவதில் சிறந்தவன் நீ
காட்டிக் கொடுப்பதில்
வல்லவன் நீ
இவைகளால் நீ
ஆடைந்ததுதான் எது?
மாறாக இவைகள் கழைந்து
ஒற்றுமைப்பட்டுப்பார்
உன் வாழ்வின் சிறப்பை
உன்னோடுதான் உன் உறவுகள்
உன்னோடுதான் உன் தோழன்
உன்னோடுதான் உன் சமூகம்
ஏன் நீ ஒன்றுபட்டால்
உலகையே ஆட்டிவைக்கலாமே
ஆட்சி கொள்ளலாமே
சிந்திப்பதில்லையா? நீ …..
உன் போன்ற மாற்றான்
உன் ஒற்றுமை கழைந்து
வேற்றுமை வளர்;த்து
உன்னை வைத்து
அவன் வாழ்கிறான்
அவனோடு கைலாகுக்கு முன்
சற்று கவனித்துப்பார்
உன்னை மாற்றிய
அவனை வெல்வதற்காய்…
ஒற்றுமை வேண்டும்
அனைத்திலும் எமக்கு
குடும்ப வாழ்விலும்
உறவுகளின் பிணைப்பிலும்
சமூக மேம்பாட்டிலும்
சூழல் சமத்துவத்திலும்
ஒன்றுபட்டுப்பார்
நாளை உன் கையில்.
நின்று நிதானித்து
எழுந்துபார் மலரும் நாள்
சிறப்பாக அமையும்..
1 comments:
super haseem arumayna varikal valthukkal
Post a Comment