இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, August 16, 2012

(வாக்கெனும்) அரிவாளைத் தீட்டிக்கொள்....


தற்பெருமை அரசியலும்
தாளாத துயரங்களுடன் 
அடாவெடித்தன தலைவர்களும்
அவதியுறும் அப்பாவிகளுமாய்
அரங்கேற்றப்படுகின்ற அவலங்களை
கூத்தாடிகளங்கு அகத்தினுள் மகிழ்கின்றனர்

அண்ணன் தம்பியாய்
ஓர்தாய் பிள்ளைகள்போல்
ஒற்றுமை அரசியலை
உலகுக்கறிவித்த சமுகம்
இன்று சின்னாபின்னமாய்
சிதறிச் சீரழிகிறது சிரிக்கிறார்களங்கு

மதத்தால் ஒரு கொடியின் கீழிருந்தும்
மனங்களால் உருவான பாகுபாட்டில்
மானங்களை கூறுபோட்டு
வியாபாரம் செய்கின்றனர்
இலாபத்திற்காய் காத்திருக்கின்றனர்
முதலீடு செய்த முதலாழிகளங்கு


வீரவசன முழக்கங்கள்
வீதியிலிறங்கிய போராட்டங்கள்
அத்தனையும் வாக்கிடும்வரை
இழந்தவைகள் திரும்பிடாது
இறந்தவர்கள் உயிர்த்திடாது
சல்லாபத்தில் இவர்களும் சேர்ந்து
சட்டமுரைப்பார்களங்கு

பல தாசாப்பதங்கள் கடந்தும்
அடைந்திடாத ஈடேற்றங்களுடன்
மீண்டும் ஓர் கலவரம் தேர்தல் வடிவில்
ஈடுபட்டோருக்கு வாய்தாக்களும்
பார்வையாளருக்கு வெகுமானமுமாய்
மாறாத் தலையெழுத்தாய் வாழ்வுகள்

அப்பாவி இளைஞனே சிந்திக்க மாட்டாயா??
உன்னை பகடைக்காயாய் பாவித்து
பரிகாசத்தை பரிசளித்து
பஞ்சணைதேடும் அரசியலுக்காயேன்
உன் அயலவனின் குருதி குடிக்கிறாய்
உயிர்மாய்த்து உருவாக்கத்துணிவது எதை??

அன்பனே உன் புத்திக்கு வேலைகொடு
சுயநலவாதிகளையும் கூத்தாடிகளையும்
சமூகத்தை காட்டிக்கொடுப்போரையும்
ஆய்ந்து அடையாளப்படுத்திக்கொள்
சமுகத்தின் எதிர்கால ஒற்றுமைக்கும்
எம் பாலகர்களின் எதிர்கால வாழ்வுக்கும்
அரிய உன் ஆயுதத்தை(வாக்கு) கூர்மையாக்கிக் கொள்
சமுக எதிரகளுக்குச் சாவுமணி
உன்னாலேனும் உருவாகட்டும்
நாளை உன் நாமம் சரி்த்திரமாகும்...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் nanbare...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

Seeni said...

nalla varikal!

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...