இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, March 22, 2015

பெண்மை போற்று......!!!!!


ஆண்மை என்ற தலைக் கனத்தின் 
அத்திவாரமே பெண்மை - இவ்வுலகை 
ஆழப் பிறந்த அரசிகளின் 
அரியணையே பெண்மை 

நாணிக் குனிந்து நல்லவளாய் 
நானிலம் போற்றும் பெண்ணவளாய் 
நா காத்து நலம்பெற்ற 
நங்கையர்தான் எங்கே......????

வீடு துலங்கும் விளக்காய் 
நாடு சிறக்கும் பெண்களாய் 
கடந்து வந்த பாதையில் 
குறைந்து விட்டதெம் குலப்பெண்மை 

ஆங்காங்கு ஆண்மை கொண்ட பெண்களால் 
பெண்மை அடையும் ஆண்களின் 
தொண்மை போற்றிடத் துவண்டு 
தோற்றே போகிறான் 

பெண்மை பெண்ணின் அடையாளம் 
பெற்றவளும் பிறந்தவளுமாய் 
உலகில் சிறந்தே சீர் பெற்றிட 
சிகரம் பெண்மையிலாக்கிடணும் 

அச்கம் மடம் நாணம் பயிர்ப்பு 
என்னவென்றே தேடுகின்றனரின்று 
பெண்மையின் அடையாளங்கள் 
எது என்று கூகிளை நாடுகின்றனரே.......!!!!

Saturday, March 21, 2015

கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!




நானெழுதிய முதல் கவிதை தாய்ப்பாசம் 
நானேங்குகின்ற உணர்வும் தாய்ப்பாசம் 
எனக்காக மறுக்கப்படுகிறது தாய்பாசம் 
என்னளவில் வேசமாய் இருக்கிறது தாய்பாசம் 

தரணியில் பிறந்த தங்கங்களெல்லாம் 
தயவின்றிப் பெறுகிறார்கள் தாய்ப்பாசம் 
துரதிஷ்டமாய் நான் பிறந்து 
தவித்துப் பெறுகிறேன் தாய்ப்பாசம் 

தயென்ற உத்தம உறவின் தற்பெருமையாய் 
மரணம் வரை தொடர்கிறது தாய்ப்பாசம் 
இவ் உலகத்து நிகழ்வில் - அற்ப சுகங்கள் 
அரண்மணை ஆனாலும் குறைத்திடுமா தாய்ப்பாசம் 

அன்று அம்மா அம்மாவென்று அழுதபோது 
அரவணைத்து ஆறுதலாக்கியது உன் தாய்ப்பாசம் 
இன்று எத்தனை அம்மாவென்றழைத்தும் 
சத்தமின்றிச் செல்கிறாயே எங்கே உன் தாய்ப்பாசம் 

எத்தனை குழந்தை ஈண்றாலும் 
சமநிலையானதல்லவா தாய்ப்பாசம் 
ஒன்று போற்றி ஒன்றகற்றி 
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்  

பாசங்களுக்கெல்லாம் அதிபதியாயம் தாயின் 
பாசத்திற்காய் ஏங்கச்செய்கிறது தாய்ப்பாசம் 
நேசமது தாயிடமிருந்தடைந்து - என் 
கவசமது பாசத்தை அளிக்குமா தாய்ப்பாசம் 




குறிப்பு : தாயிருந்தும் அவளது பாசத்திற்காய் ஏங்கும் ஒரு அபலையின் கருவிது. 

Thursday, March 5, 2015

சுமையாகும் தனிமை.......!!


வலியின் சுடர்கள் மட்டும் 
சுழல்கிறது சுற்றும்முற்றும் 
சுகமான தருணங்களை 
தேடிக்கொண்டிருக்கிறது மனம் 

உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத 
உறவுகளின் மத்தியில் 
உலகம் ஏனோ 
இருண்டதாய்த்தான் தெரிகிறது 

யார் யாரோ வந்தார்கள் வாழ்வில் 
தங்கியவர் யாருமில்லை 
தங்கியவர்களின் துணைகூட 
தேங்குவதும் எதுவரையோ......!

உலகத்து எதார்த்தம் 
உணர்த்தப்படுகின்ற வாழ்வை 
தாமதித்து உணர்ந்ததால்தான் 
தவிக்கச் செய்திருக்கிறது 

பிறப்பதுவும் இறப்பதுவும் 
துணையின்றியதுதான் 
இடைப்பட்ட வாழ்வில் 
தனிமையின் தவிப்பை 
சுகமாக்கிச் சாதனையாக்கிடு 




Related Posts Plugin for WordPress, Blogger...