இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, November 29, 2012

(ஹிஜாப்) பர்தாவின் உரை கேளுங்கள்.......


மகளீர் மாணிக்கங்களை
காத்திடப்பிறந்தவள் நான்
மாதர் குலத்துக் கற்புகளுக்குப்
பாதுகாவலும் நான்

என் கண்மணிகளின் தேகத்தை
மேயவரும் கண்களுக்கு எதிரியானவள்
பார்வைச் சிறைபிடிக்கப்படும் மாதுகளின்
தேகத்தை விடுவிப்பவளும் நான்

எங்கே திறந்து கிடக்கிறதென்று
ஊர்ந்து வரும் கண்களுக்கு
என்னைக் கண்டமாத்திரத்தில்
ஆத்திரம் கொண்டதைக் கண்டிருக்கிறேன்

அழகு சாதனங்களுக்கென கிரயங்களும்
விரயமற்ற நேரங்களுமென
என்னால் என் அரசிகளுக்கு
எப்பொழுதும் வீண் விரயங்களில்லை

கண்களால் கற்பழிக்கப்டாத
உடல் நெளிவுகளின் அழகினை
உரியவனிடமே முழுதாய் ஒப்படைத்திட
முழுக் காரணி நானாகிறேன்

Monday, November 26, 2012

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பாகம் - 13)

     அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பாகம் - 14)
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 12)


அனாதையுடன் அனாதையொன்று சேர
ஆரத்தழுவி அணைத்தபடி அங்குமிங்கும்
அரவம் தேடினேன் யாருமில்லை
யாரது சேயோ எனக்களித்தவர் யாரோ
விடைகளற்ற கேள்விகளோடு
வீதியில் இறங்கி நடந்ததை மறக்கவில்லை

என்னைப்போல் நீயுமா வென
நோக்கினேன் மழலையை
அவளது புன்சிரிப்பில் புதையுண்டேன்
புலரும் பொழுதுகளெல்லாம்
அனாதைகளைச் சுமக்கிறதே
காலத்தின் கொடுமையிதுவா வென
வெறுத்ததென்மனம அதை மறக்கவில்லை

முடித்திட நினைத்த வாழ்வுக்கு
முகவரி தந்த குழந்தையை முத்தமிட்டு
முழுத்தாயாய் நான் மாறி
அவளையும் பார்போற்றச் செய்து
அனாதைகளற்ற உலகம் நாட
உணர்ந்தேனதை மறக்கவில்லை

Sunday, November 25, 2012

உலகம் அழியும் நாள் அரிகிலுண்டு.....


அக்கிரக்காரர்களின் அராஜகத்தைக்
காணச் சகிப்பதில்லை மனம்
விக்கித்த எம் இதயங்களிலிருந்து
கண்ணீரும் வர மறுக்கிறது

உயிர்கள் மதிப்பற்றதாகி
வீதிகளெங்கும் சிதறடிக்கப்படுகிறது
அப்பாவிக் குழந்தைகளைக் கொன்று
இரத்தம் குடிக்கிறான் இஸரேலியச் சாத்தான்

வளர்த்துவிட்ட அமெரிக்காவும்
வேடிக்கை பார்க்கும் அரபுலகமும்
வேதனைப்படுவதாய் தெரியவில்லை
இறைவனின் துணைநாடி
ஏழைகளங்கு இருகரமேந்துகின்றனர்

வாடகைக்காய் வதிவிடம் நாடியவன்
உடமைகள் என்னுடையதென்று
உரிமையாளனை வீதியில் நிறுத்திவிட்டு
நிரந்தரக் குடிபுகுந்த துரோகிகளின் ஆட்சி

Saturday, November 24, 2012

மனங்களின் ஏக்கம்....


கிடைத்ததோடு வாழ்ந்து
பிறருக்கும் நற்கொடையளித்து
மகிழ்ந்தானன்று மனிதன்
இல்லாதவற்றுக்குக்கெல்லாம்
ஆசைகொண்டு இல்லாதவனிடமே
கொள்ளையடிக்கிறானின்று

பணந்தான் வாழ்வென்று
பணத்துக்காக எதையும்
இழக்கத்துணிந்து இழிவுறும்
இயல்புகொண்ட மானிடர்கள்

ஆட்சிசெய்யும் பேராசையுடன்
யார் எக்கேடு கெட்டாலும்
என்னலம் என்னோக்கமென்று
கொன்று குவிக்கும் அசுரர்கள்

வாழ்வளிக்கப்படாத அனாதைகள்
வாழ்விழந்த விதவைகளென
அடிப்படைத் தேவைகளுக்காய் - இன்று
கண்ணீர்வடிக்கிறது உயிர்கள்


Thursday, November 22, 2012

காதலோடும்... கவிதையோடும்


சுகமானது காதெலென்றும்
ரணமானது ஏக்கங்களென்றும்
வலுவானது உறவுகளென்றும்
உள்ளக்கிடக்கைகளான உணர்வுகளுக்கு
உருவம் கொடுக்கிறதென் கவிதைகள்

தினமும் மொழிந்திட நினைக்கும் (கவிதை)
பேச்சை நிறுத்து என்றதினால்
பேசத்துடிக்கும் வார்த்தைகளின்
போராட்டங்களால் என்னுள்ளம்
போர்க்களமாகித் தவிக்கறதெடி


உன் மூச்சை நிறுத்து என்று
சொல்லியிருக்கலாம் என்னிடம்
உனக்காக உடனே என்சுவாசம்
நின்றிருக்கும் நின்றஇடத்தில்

Wednesday, November 21, 2012

உணர மறந்த சர்மிளாவால் உணர்த்தியவைகள் தவறு....


சர்மிளா செய்யத் என்ற எழுத்தாளரின் கருத்தில் தத்தளித்திருக்கின்ற எம் சமுகத்தவர்களின் மனங்களுக்கு ஆறுதலை இறைவன் அளித்திடட்டும் உண்மையில் சர்மிளா செய்யத்தின் எழுத்து பற்றியும் அவரது சில சமுக அக்கறை பற்றியும் மிகவும் மகிழ்ந்திருந்த வேளை (BBC ல் சர்மிளாவின் செவ்வி) இப்படியான ஒரு செய்தி அவர் மூலமாக வெளியிடப்பட்டிருப்பதுதான் வருத்தத்தினை அளிக்கிறது இதற்கு சார்பாகவும் சிலர் (உதாரணத்திற்கு) கருத்தெழுதியும் வருகிறார்கள். இவர்களுடைய பார்வையில் முஸ்லிம் சமுகத்தவர்களின் கருத்தில் பிழை இருப்பதாக காண்கிறார்கள் இதனை பலர் தெழிவு படுத்தியும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை 

உண்மையில் இந்த கோபத்திற்கான எதார்தமான காரணம் என்ன என்று ஆராயும் போது ஒரு பௌத்த மதத்தைச் சார்ந்த ஒரு அமைச்சரின்(“விபச்சார்த்தை சட்டரீதியாக்க வேண்டும் அதன் மூலமாக சுற்றுலாத்துறையின அபிவிருத்தி செய்யலாம்”) என்ற இந்த  கருத்தை சொன்ன போதே இலங்கையின் நிலை எந்த அளவுக்கு செல்கிறது என்று சிந்திக்கின்ற பாமரன் கூட “காசுக்காக கூட்டிக் குடுக்கத்துணிகிறானே” என்று வாய்விட்டுச் சொல்லும் நிலைக்கு இட்டுச்சென்ற கருத்தினை ஆதரித்து இஸ்லாமிய மார்கம் தெரிந்த அதில் வாழ்கின்ற ஒரு பெண்மணியால் இதனை ஆதரித்து பேசமுடிகிறது என்றால் அவரது நிலை என்ன என்ற கேளவிதான் அனைவரையும் நிலை குலையச்செய்தது என்பது நிதர்சனமான உண்மை 

Sunday, November 11, 2012

மதம் திறந்தொரு காதலா...???

வாழ்க்கைக்காய் காதலித்து 
காதலுக்காய் யாவும் துறந்து 
கால் பதிக்கின்ற காதலர்களே 
உம் கால்கள் தடுமாறுவதேன்

அத்தனையும் மறந்ததொன்றும் 
அதிசயமில்லை காதலுக்கு 
படைத்த இறைவனையும் மறக்கின்ற 
உம் அற்பக் காமத்தையா 
காதலென்கின்றீர்கள் .....

தாய் தந்தை துச்சமுங்களுக்கு 
பிறந்து உமை வளர்த்த சமுகம்
துச்சமுங்களுக்கு இருந்தும் 
படைத்த இறைவனுக்கு 
அச்சமில்லையா உங்களுக்கு??

Related Posts Plugin for WordPress, Blogger...