இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, November 26, 2012

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பாகம் - 13)

     அவளாகிய அவள்.... (தொடர்கவிதை பாகம் - 14)
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 12)


அனாதையுடன் அனாதையொன்று சேர
ஆரத்தழுவி அணைத்தபடி அங்குமிங்கும்
அரவம் தேடினேன் யாருமில்லை
யாரது சேயோ எனக்களித்தவர் யாரோ
விடைகளற்ற கேள்விகளோடு
வீதியில் இறங்கி நடந்ததை மறக்கவில்லை

என்னைப்போல் நீயுமா வென
நோக்கினேன் மழலையை
அவளது புன்சிரிப்பில் புதையுண்டேன்
புலரும் பொழுதுகளெல்லாம்
அனாதைகளைச் சுமக்கிறதே
காலத்தின் கொடுமையிதுவா வென
வெறுத்ததென்மனம அதை மறக்கவில்லை

முடித்திட நினைத்த வாழ்வுக்கு
முகவரி தந்த குழந்தையை முத்தமிட்டு
முழுத்தாயாய் நான் மாறி
அவளையும் பார்போற்றச் செய்து
அனாதைகளற்ற உலகம் நாட
உணர்ந்தேனதை மறக்கவில்லைஓய்வின்றி ஓடிய கடிகார முட்கள்
பல நாட்களையும் கடத்திவிட்டன
என் குழந்தை வளர்ந்தாள் - தன்னை
தானாக வளர்த்துக்கொண்டாள்
நடந்த பாதைகளெல்லாம் வெற்றகளோடும்
வீடுதிரும்பலானாள் வியந்தேன்
உரமேற்றினேனதை மறக்கவில்லை

பட்டமரமாய் பாழடைந்த வீடாய்
ஆனதென் வாழ்க்கைக்கு ஆண்டவன்
சேர்த்த துணை மகளென்றே இருந்துவிட்டேன்
மறுவாழ்வு பற்றி நினைக்காத என்னை
மனைவியாய் ஏற்கத் துடித்தனர் பலகோடி
ஏமாற்றங்களைப் பயந்து
எட்டியோடியதை மறக்கவில்லை

மனிதப்பிறவியான என் மனதுக்கும்
கடிவாளமிடத்துணந்தானொருவன்
என்தவத்தினையும் கலைக்க நாடினான்
காய்ந்து கிடந்த கரிசல்காட்டினுள்
தீயிட்ட பாவியாய் தொடர்ந்தானொருவன்
துடித்தது தேகமெல்லாம் தொடரவும்
மறுத்தது என்மனம் அதை மறக்கவில்லை


இன்னுந் தொடர்வாள்.......நீண்ட இடைவேளையின் பின்னர் இதை தொடர நாடினேன் தொடரும் அன்பர்களுக்கு நன்றிகள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Semmalai Akash! said...

புலரும் பொழுதுகளெல்லாம்
அனாதைகளைச் சுமக்கிறதே!

என்ன அற்புதமான வரிகளின் புனைவு, ஒரு வாழ்க்கையையே சொல்லிவிட்டது.

பாராட்டுகள் நண்பரே!

தொடர்ந்து எழுதுங்கள் , நானும் உங்களை பின்தொடர்ந்து வருகிறேன். எனது பக்கமும் வந்து போங்க...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள் நண்பரே... அருமை...

நன்றி...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...