இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, April 29, 2010

வடக்கு - கிழக்கு

வடக்கென்றும் கிழக்கென்றும்
பிரித்துப்பிரித்து
எத்தனை தடவை
உரத்துக்கூறுகிறீர்கள்
சேர்ந்தாலும் ஒன்றுதான்
பிரிந்தாலும் ஒன்றுதான்
எதிலும் எதுவுமில்லை
அரசியல் நாமம் சூட
உங்களின் லாபத்திற்காய்
மீண்டும் மீண்டும்
வழிதேடல் தீரவில்லையா

வடக்கிலும் மனிதம்தான்
கிழக்கிலும் மனிதம்தான்
உணர்வுகளில் சேர்ந்தவர்களை
பிரிவினை வளர்பதில்
ஏது லாபம் கண்டீர்கள்

மீண்டுமொரு அவலம்
அரங்கேற்ற கதைவசனம்
தேடியதில் தேர்ந்தெடுத்தது
வடக்கும் கிழக்குமா?

வடக்கு கிழக்கு வாழ்
உறவுகளே......
உணர்வுகள் உக்கிப்போன
மானிடம் எனும்
மந்தைகளின் கபட
விளையாட்டுகளில்
சீர் குலைந்திடாதீர்கள்
வேற்றுமை வளர்த்ததில்
வெண்றவர் யாருமில்லை
ஒற்றுமை உலகில்
நாயகர்கள் நாமேதான்
பேதம் மறந்து
உண்மை உணர்வுடன்
ஒற்றுமை காக்க
ஒண்று திரள்வோம்
எம்மை வைத்து
உறுட்டப்படும்
பேத பந்துகளை
எமக்காக திசைமாற்ற
எம்மால் முடியும்
சிந்தனை செய்க
சிறந்ததை தேர்ந்திடுக...

அன்னை வழி


அன்னை கண்ட
அழகான வீடு
நாங்கள் மட்டும்
வசிக்கும் வீ டு
உறவின் இறுக்கம்
கண்ட வீடு

சிறிது சிறிதாய்
உணவு தேடி
பசி தீர்த்திடப்
பறக்கும் அன்னை
பரிதாபம்தான்

தான் உண்ணமறந்து
சிசுக்களின் ஊணுக்காய்
தேடும் நெஞ்சம்
அன்னை மட்டும்தான்

எங்கள் கட்சிதம்
காத்த அன்னை வழியில்
காலம் கழித்திட
கடவுளே நீயும்
கருணை தாராயோ...

Wednesday, April 28, 2010

கவிஞன் கலைநிலாவுக்கு


அருமை நண்பா
என் உள்ளத்தின்
ஆழத்தில் தேடினேன்
உம்மை வாழ்த்த
வரிகள் கிடைக்குமா என்று
எம் ஊரில்(ஈகரை)
உள்ளவரெல்லாம்
உம்மை வாழ்த்த
போட்டியிடுவதால்
நான் வாழ்த்த
சொல் இன்றி
பரிதவிக்கிறேன்..

நீ எம் தமிழ் சமுத்திரத்தில்
உன்னால் முடியுமட்டும் நீந்தி
அழகான சொல் எனும்
முத்தெடுத்து கவி மாலையில்
பதிக்கிறாய் ஆதலால்
உன் ஆழம் வரை
நீந்திப்பார்த்தேன்
திரும்பிவிட்டேன்

நீ காண்பதெல்லாம்
கவிதையவதால்
நான் காண்பதெல்லாம்
அற்பமாகிறது....
இன்னும் தேடுகிறேன்
உன்னை வாழ்த்த
வரிகளின்றி அலைகிறேன்..

தொடரட்டும் உன்பணி
தொடர்கிறேன் நிற்கும்வரை
வாழ்க நலமுடன்
மகிழ்ந்து வாழ்த்துகிறேன்

நன்பன் சம்ஸ் இன் வாழ்த்துப்பா


ஆருயிர் நன்பன்
அஞ்சா நெஞ்சன்
புதுமை வேந்தன்
காதல் கவிஞன்
ஊர் ஊராய்ச் சுற்றி
உலகை வலம் வந்து எட்டி நின்று ...
தொட்டுப்பார்த்து
அரியதை மட்டும்
தேர்ந்தெடுத்து
செதுக்கி செப்பனிட்டு
சீர் செய்து......
உறவுகளின் உளமாற
ஆறப்போட்டு .....
இடையிடயே உண்மை
உணர்வுகளை அழகாய்
கவிமாலை கோர்த்து
அன்பாய் சூடி
சிறுகச் சிறுக
அரிய பல செய்திகளை
காதில் போட்டு
வாழ்த்தோலை
வடித்தெடுத்து
பவ்வியமாய் சமர்ப்பித்து
உறவுகளை வழியனுப்பும்
என்னுயிர் நண்பா
உளம் பூரிக்கிறது
வாழ்த்துகிறேன்
வாழ்க வெல்க என்றும்

கற்ற பாடம்.......


பரீட்சையறையில்
பாடங்களின் பரீட்சை
ஒன்றொன்றாய் ஆறும்
எழுதிவிட்டு ஒன்பதாவது
பாடம் காதல் உருவெடுக்க
எட்டாவது பாடத்தில்
ஒன்பதாவது பரிட்சையும்
எழுதிவிட்டேன்......

அவளின் பச்சைக்கொடி
ஏந்திக்கொண்டு
யாருமறியா வேளையில்
பதுங்கி நடுங்கி
சந்தித்து மகிழ்ந்திருந்தேன்

காலனின் கனிவில்
எம் காதலும் கனிந்திருக்க
விதி செய்த மாயம்
அவளுக்கென்று...
வீட்டாரும் துணைதேட
காதலை மறைத்த
அவள் செயலால்
துடியாய் துடித்தேன்
தவியாய் தவித்தேன்
அந்த நிமிடம்....

பரிட்சைக்குச் சென்றனான்
பாடங்களை கற்காது
காதல் பாடம் கற்றதினாலோ
பாதியில் அவளும்
விட்டுவிட்டாள்....
சிறந்த பாடம் சிறப்பாய்
எழுதியிருந்தால்
இன்று நானும்
பட்டதாரியாகிருப்பேன்
இன்று நான் கற்ற பாடம்
அன்று நான் கற்றிருந்தால்
என்வாழ்வும் சிறந்திருக்கும்

பின் குறிப்பு : இக்கவிதையின் கருவானது எமது உறவுகளில் ஒருவர் கண்டிப்பாக யாரென்று கேட்க வேண்டாம் (கதை கேட்டேன் தைத்தது மனதை)

Tuesday, April 27, 2010

புது உலகம்என்னுலகம்(பெண்) என்னோடு
அதனருமை என்னோடு
அதனால் உருவெடுத்த
இவ்வுலகம் புரிந்து விட்டால்
வெறுப்புலகம் தெரியாது
நொடிப்பொழுதும் தெரியாது
ஊணுறக்கம் தெரியாது
நாம் அமைக்கும் உலகமிது
யாருக்கும் பங்கில்லை
காதலின் கனிவும் இது
வெறுத்து விட்டால்
நினைவும் இது......
இப்படியே இருந்து விட்டால்
வேறுலகம் தேவையில்லை

கார் குழலாள்உன் கார் குழலின் கருமையும்
கவர்ந்திழுக்கும் நீழமும்
உன் கூந்தல் நுனி அழகும்
காற்றில் தவழ்ந்தாட
கொள்ளை கொண்ட
என் மனமும் சேர்ந்தாட

வண்ண மயில் தோகை போல்
உனக்கழகு கூந்தல் காண
சிக்கிய என் மனதை
சிதறாமல் சீர்செய்ய
சிற்றின்பம் தந்திடவேனும்
திரும்பி நீயும் பாராயோ.....

உன்கரங்கள் கொண்டு
குழலழகுக்காய்
வகுடெடுக்கும் நீ
உன் செல்ல மனம் கொண்டு
என் கெஞ்சல் மொழி தீர்க்க
ஒரு வரி உரைத்திடுவாயா.....

பள்ளி நாட்கள்


மழலையாய் சிறகடித்து
சிட்டாய் பறந்த நாட்கள்
என் பள்ளி நாட்கள்
நன்பர்கள் கூட்டம்
வித வித குதூகலம்
ஜாலியான நாட்கள்

அறிவின் பல உருவம்
கல்வியின் சிறப்பு
பகிர்ந்த நாட்கள்

வாலிப வரிகளில்
சுகமான காதல்
அரும்பிய அழகான
நாட்கள்

வெற்றியும் தோல்வியும்
மாறி மாறிக்கண்டு
வாழ்கை சமனிலை
சரி செய்த நாட்கள்

திறமைகள் கண்டு
தட்டிக்கொடுத்து
உயரச்செய்த ஆசான்
துவண்ட போது
ஆறுதல் கூறிய நன்பன்
கூடிய நாட்கள்

மீழா அந்த நாட்கள்
மீண்டும் கிட்டது...
நினைக்க மட்டும்
முடிந்ததால்
நெஞ்சம் கனக்கிறது

Monday, April 26, 2010

மனிதம் வேண்டும்


பார் வரைந்த சித்திரம்
வறண்ட நிலத்தில்
வெருண்ட வாழ்கை

நிலம் சிறக்க மழை
மழைசிறக்க நீர்
நீர் பிறக்க நிலம்
நிலத்தின் செழுமைக்கு
மழையின் தூறல் வேண்டும்

கோலன் வரைந்த சரித்திரம்
இருண்ட வாழ்வு
வெருண்ட வறுமை

இந்த மனிதம் சிறக்க
சிந்திக்காத மனங்கள்
மனங்களில் வேண்டும்
ஈகையின் சிந்தை
சிந்தை உள்ள....
மனிதம் வேண்டும்

Sunday, April 25, 2010

கயல் விழிகாந்தக் கண்களில்
கண்கவர் கயல்விழி
விழி வளியே மதுரசம்....

கூசுகிறது கண்கள்
இருந்தும் பார்கத்
தூண்டுகிறது மீண்டும்...

விசப்பார்வையால்
வேல்பாய்ந்ததில்
உலகம் உன் காலடியில்...

பனி கொட்டுமிரவுஒருநாளிரவு
பௌர்ணமி நிலவில்
நானும் என்
தேவதையுடன் ..
கைகோர்த்து நடந்தேன்

மொழிகளின் திகைப்பு
தென்றலின் வருடல்
பனியின் சங்கமம்
தேகம் சிலிர்க்க
காதலின் இறுக்கம்

அணைப்பை கரங்கள் தேட
நாவில் உளரல் அலை
“குளிர்கிறது தேகம்
நாடுகிறேன் குளிர்காய
என்கிறாள்” இன்ப அதிர்வு

காரணம் புரிந்தது
பனியால் நனைந்தது
இரவு அதனால்
நனைந்தேன் அன்றிரவு
அகம் நன்றி உரைத்தது
அவ்விரவுக்கு....

காவிய அரங்கேற்றம்


என் மலராகிய நீ
மலர்களோடு சங்கமித்து
காதல் மாலைகோர்த்து
கண்ணாளன் என்
வருகைக்காய்.....
வாடிநிற்கிறாய்...

வாடிய உன் வதனம் கண்டு
என்னை நான் மறந்து
வார்தைகள் ததும்ப
கவி மட்டும் வரிகளாகி
காதல் கமகமக்க
எம் காவிய அரங்கேற்றம்

காதலுக்கு காதலை
கற்றுத்தந்தவள் நீ
வரலாறுபடைத்த காதலர்கள்
இன்று உனையடைந்தால்
காதல் மொழி கற்க
காத்திருப்பர்
உனைநினைத்து ....
காவிய நாயகன்
நான் என்பதால்
உன்னால் உயர்வு
தானன்றோ......

காத்திருந்த கண்கள்


அந்தோ பார்
என்னவன் வருகிறான்
எனைக்காண….
நாணிக்கிறேன்
வந்ததும் தருவானோ முத்தம்
தந்ததும் கொடுக்க வேண்டுமோ
நானும்
இத்தனை காலம்
அவனுக்காகவல்லவா
காத்திருக்கிறேன்…
பூத்திருக்கிறேன்…
கனிந்திருக்கிறேன்…
அவன் தொட்டதும்
வெடித்திடுவேனோ..
பஞ்சாக!

ஒன்று மட்டும்
நிச்சயம்
அவனும் என்போன்று
தாகத்தில்
எனையடைந்தால்
மென்றிடுவான்
எனை முழுவதும்
இது எப்போது
புரியவில்லையே

இப்படியே கழிந்தது
பல வருடங்கள்
இன்னும் அவன்
வந்து சேரவில்லை
என்றும் காத்திருக்கிறேன்
கண்கள் குளமாகிறது

மழை மகளேமழை மகளே
நீ பிறந்தது என்னில்
உன்தாயின் பரிதாப நிலை
கண்டு உன் நெஞ்சம்
பதைக்கவில்லையா
உன் தரிசனம் இன்றி
என் மார்பு தீகிறது
என் சேவகன் கையேந்தும்
நிலை காண
பதைக்கிறது நெஞ்சம்
இந்த நிலை தீர்த்திட வேனும்
உன் கண்ணீர் ததும்பாதா....

(காதல்) காவியம் படைப்போம்


மாந்தர்களில் சிறந்தவளே
மாதுகளில் உத்தமியே
நீ என் மீது கொண்ட காதலை
என்னவென்று சொல்வேனடி

என்தவறுகள் தெரிந்தும்
ஏன் இத்தனை மோகமடி
காதலர்களின் சரித்திரத்தில்
உன் காதல் இமயமடி

நான் என்ன செய்தேன் உனக்கு
என்னில் உன்னை கவர்ந்தது எது
அன்பு எனும் பரிமாணம்
எம்மை கிறங்கச் செய்கிறதோ

கண்மணி நீ உன்பாசத்தால்
கட்டிவிட்டாய் என்னை
நீ வேண்டும் எனக்கு
என் வாழ்நாள் முழுதும்

உன் சல்லாப தரிசனத்தில்
நாம் உயிர்வாழ வேண்டும்
காதலின் தெய்வீகத்தை
உலகுக்கு பறைசாற்ற வேண்டும்

உலகின் உன்னத காதலர்கள்
நாமாக வேண்டும்
காதலை கொச்சைப்படுத்தும்
கயவர்கள் வெருண்டோட வேண்டும்

புதிய காவியம் எம்மால்
உருவாக வேண்டும்
சரித்திரத்தில் நாமும்
கிளையாக வேண்டும்
இத்தனைக்கும் நாம்
ஒன்று சேர வேண்டும்

ஒன்றுபட்டுப்பார்


மனிதா
காக்கை தன் இனத்துக்காக
கொள்ளும் வேட்கையை
சற்று கவனித்துப்பார்

எறும்புகளின் கூட்டங்களைப் பார்
கறையான்களின் வாழ்வுதனை
எண்ணிப்பார் இவைகளில்
எமக்குண்டு படிப்பினை
புத்தி எனும் ஆறாவது
அறிவுடன் பிறந்த
நீ மட்டும் எதிர் மறையாய்
வாழ்வதேன்

உன்னோடு பிறந்தவனுக்கு
எதிரியாய் நீ
உன்னை பெற்றவளுக்கு
பாவியாய் நீ
உன்னோடு பழகியவனுக்கு
துரொகியாய் நீ
உன்னோடு வாழ்தவனுக்கு
கயவனாய் நீ
ஏமாற்றுவதில் சிறந்தவன் நீ
காட்டிக் கொடுப்பதில்
வல்லவன் நீ
இவைகளால் நீ
ஆடைந்ததுதான் எது?

மாறாக இவைகள் கழைந்து
ஒற்றுமைப்பட்டுப்பார்
உன் வாழ்வின் சிறப்பை
உன்னோடுதான் உன் உறவுகள்
உன்னோடுதான் உன் தோழன்
உன்னோடுதான் உன் சமூகம்
ஏன் நீ ஒன்றுபட்டால்
உலகையே ஆட்டிவைக்கலாமே
ஆட்சி கொள்ளலாமே
சிந்திப்பதில்லையா? நீ …..


உன் போன்ற மாற்றான்
உன் ஒற்றுமை கழைந்து
வேற்றுமை வளர்;த்து
உன்னை வைத்து
அவன் வாழ்கிறான்
அவனோடு கைலாகுக்கு முன்
சற்று கவனித்துப்பார்
உன்னை மாற்றிய
அவனை வெல்வதற்காய்…

ஒற்றுமை வேண்டும்
அனைத்திலும் எமக்கு
குடும்ப வாழ்விலும்
உறவுகளின் பிணைப்பிலும்
சமூக மேம்பாட்டிலும்
சூழல் சமத்துவத்திலும்
ஒன்றுபட்டுப்பார்
நாளை உன் கையில்.
நின்று நிதானித்து
எழுந்துபார் மலரும் நாள்
சிறப்பாக அமையும்..

கனவில் நீ


தேவலோக கண்ணகியவள்
என்னை ஆட்கொண்டவள்
என் காதலியவள்
எதிர்கால துணைவி
இருவரும் அருகருகே
கடற்கரை மணலில்
இதமான தென்றலுடன்
அமர்ந்திருக்கிறோம்..

எதிர்கால கனவுகளை
அசைபோடுகிறோம்
சிக்கனமான திருமணம்
ஆசைக்காய் இரு குழந்தை
எமக்காய் அழகிய மனை
எம்மோடு எம் பெற்றோர்
இவ்வாறு வாழ்ந்தால்
தித்திக்கும் எமது வாழ்வு

இன்நிலை கிடைக்க
என் கண்மணி
வேண்டுகிறாள் கடவுளை
பூரிப்பில் நான்
நேரம் கழிகிறது

இறுகிய உணர்வுகளில்
காதலின் உச்சம்
கன்னியவளின்…
கொவ்வை இதளை
பதம்பார்க நாடுகிறேன்
சடாரென்று வீழ்ந்ததால்
கலைந்தது சொப்பனம்
கிடந்தது தரையில்
கண்டது கனவு…

துள்ளித்திரியும் இளமை


வாலிபனே
உன் இளமைக்காலத்தின்
ஒவ்வொரு நொடியும்
அற்புதமடா

அதை நீ மறந்ததால்
வீண் விளையாட்டிலும்
மதுவிலும் மாதுவிலும்
சூதிலும் களவிலும்
சிக்குண்டு சிதறிவிட்டாய்

முதுமை உன்னை அழைக்கிறது
அடைந்ததும் கைசேதப்படுவாய்
விட்ட தவறை
இழந்த உன் இளமையை
அடைந்த இழப்புக்களை
திரும்பப் பெறமாட்டாய்

சற்று நில்
திரும்பிப் பார் உன்னை
உன்னால் முடியும்
உலகுக்கு ஒளியேற்ற
உலகுக்கு வழிகாட்ட
உன் இளமைக்கு வாழ்வளிக்க

நீ இன்று விதைப்பது
நாளை விரூட்சம் பெறும்
துடிப்பான இளமையில்
துல்லியமாக செயற்படு
சந்தோசம் பெறுவாய்
முதுமையில்
விழித்தெழு நலம்பெறுவாய்

காதல் தோல்விஎன்னுயிர் காதலியே
நீ……..
அள்ளித்தந்த காதலமுதை
பருகி முடிப்பதற்குள்
தட்டிவிட்டாய் கொட்டிவிட்டேன்

கண்ணா என்றாய்
காதலே என்றாய்
அன்பே என்றாய்
உயிரே என்றாய்
உன்வார்தையில் செருகியதால்
நான் செக்கி நின்றேனன்று
ஆனால்..

இன்று நீ சொன்ன வார்த்தையில்
நொறுங்கிப்போனேன்
சுக்கு நூறாய்…
காதலிக்கும் போது…
நீதான் நான் என்றாய்
திருமணத்துக்காய்
தடை பெற்றோர் என்கிறாய்
நான் காதலித்தது
உன்னை மட்டும்தான்..

குறுகிய காலம்
முறுகிய காதல்
பகிர்ந்த உணர்வு
லயித்த நொடிகள்
அத்தனையும்….
ஆதவனைக்கண்ட பனிகளாய்
இரவைக்கண்ட பகலாய்
மரணம் ருசித்த ஜடமாய்
மாற்றியது நீதான்..

நடக்கிறேன்
தடுமாறுகிறது கால்கள்..
நிற்கிறேன் சுற்றுகிறது தலை
உட்கார்கிறேன்
வெறுக்கிறது தேகம்..
துயில் கொள்கிறேன்
மறுக்கிறது கண்கள்
வெறுக்கிறேன் உலகையே
உன்னால்தான்..

நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்

Saturday, April 24, 2010

துணைவியின் பிரிவில்

இப் பூவுலகில்
எனக்காக பிறந்தவளே
என் மடியில் தவழ்ந்து
என்னோடு கலந்தவளே
என்னையே சுவாசித்து
எனக்காக வாழ்ந்தவளே
உனைப் பிரிந்ததால்
இன்று நானும்
உணர்வற்ற ஜடமானேன்
உயிரற்ற உடலானேன்

பசுமையற்ற பட்ட
மரமானேன்…..
ஏன் இந்த கோலமடி?
நீ கொடுத்த முத்தங்களும்
நீ கோதிவிட்ட முடியும்
நீ ஊட்டி விட்ட உணவும்
நீ கொட்டித்தீர்த்த பாசமும்
நீ என்னோடு கலந்த நாட்களும்
நீ என்னை ஆக்கிரமித்த வினாடிகளும்
என் கண்முன்னே
நிதமும் காட்சியடி

ஆதலால்
தவிக்கிறேன் என் உயிரே
துடிக்கிறேன் உனை நினைத்து
என் நாடி நரம்புகளில்
உன் நினைவுகள்தான்
உதிரமாய்.. அதனாலும்..
நீதான்; நான்.
உன் காதலை ரசித்ததால்
உன்னை நான் மென்று
ருசித்ததால்
உன் தித்திப்பில்
உலகமே கசக்குதடி..

நீ என்மீது கொண்ட
காதலுக்கு நிகரேதடி
காவியங்கள் கூட
உன் காதலுக்கு
உன்னிடத்தில் அடிமையடி
இவ்வுலகின்
என் தேவதையே
ஒவ்வெரு நொடியும்
கடிகாரம் பார்க்கிறேன்
காலத்தை நொந்துகொள்கிறேன்
காகிதங்களை நேசிக்கிறேன்
ஏன் இவ்வுலகையே
வெறுக்கிறேன்
யாவும் உன்னால் தானோ
நீ இன்றியதால்தானோ
பொறுத்திரு என் சுவாசமே
பிரிவுக்கு விடைகொடும்
காலம் எம்மை
கூடி வரும்
அதை நினைத்து நானும்
சாந்தம் கொள்கிறேன்
எமக்காக....

காதலில் கஞ்சத்தனம் ....


காதல் அள்ளித் தந்த
வள்ளல் நீ
அமுத மொழி பேசி
கருணை வழங்கிய
கொடைவள்ளல் நீ
தேகம் சிலிர்த்திட
முத்த மழை தந்த
ஈகை வள்ளல் நீ

மாலைமட்டும் நான் சூட
நாட்கள் மட்டும் நகர
வள்ளலாய் இருந்த நீ
கஞ்சத்தனம் காட்டுகிறாய்
ஆதலால் சிறுமை வாழ்வு
சீரற்ற நிலை....
வசந்தம் பல வீசிட
வள்ளலாய் மாறாயோ.....

பரிதாபம் மாறும்


கடந்த நிகழ்வில்
மடிந்துவிட்ட புனிதர்களின்
சடலங்களில்…
மானிடம் எனும் ஜீவராசிகள்
குதூகலிக்கின்றன…

ஏய்….
இறந்தவனும் மனிதன்தான்
உன்போன்று உணர்வுள்ளவன்
அவன் மறைந்து உயர்ந்துவிட்டான்
நீ இருந்து தாழ்ந்து விட்டாய்
இதன் வடுக்களாய்
பல்லாயிரம் பேரின்
பரிதாபம் காண
பதறுகிறது உள்ளம்

அந்தோ….
மனிதத்தின் அவலங்கள்
உறவுகள் இழந்து
உடன் பிறப்பும் இழந்து
மனையிழந்து
செல்வமிழந்து
உண்ண உணவிழந்து
உடுக்க உடையிழந்து
தூக்கம் மறந்து
சந்தோசம் மறந்து
பாசம் மறந்து
பரிவு மறந்து
பரிதவிக்கிறான்..

நாதியற்ற உலகமிது
திரும்பிப் பார்க்க
யாருமில்லை…
சுய நலத்துக்காக சிலர்
வார்த்தைகளில் பூர்த்தி
செய்கின்றனர்
ஒன்று மட்டும் நிச்சயம்
மறந்து விடாதே…

கடவுளின் படைப்பில்
சுகமும் துக்கமும்
ஒரு சுழற்சிதான்
இன்று நீ துக்கித்ததனால்
நாளை நீ நலம் பெறுவாய்.
பொறுத்திரு காலம் பதில் செல்லும்
கடவுள் என்றும் துணை.

மழலையாக நீ


மழலையாக நான்
மலர்ந்த போது
அரவணைத்த அன்னை
மழலையாக மாறி
அவதரித்த உன்னை
என் மழலை மொழியால்
செல்லத்தாலாட்டு

அம்மா நீ கண்ணுறங்கு
கவலை மறந்து கண்ணுறங்கு
நீ பெற்ற பிள்ளை
தாயாக நானிருக்க
பிள்ளையாக நீயும்
கண்ணுறங்கு
அனாதரவும் இல்லாது
ஆதரவும் நானாக
உலகவலம்தான் வரலாம்
நிம்மதியாய் கண்ணுறங்கு

கருச்சிதைப்பு...


உன் கருவாக உருவெடுத்ததால்
ஆனந்தம் அம்மா
உன் கரிசனையால்
வயிற்றுப்பாசறையில்
குதூகலம் அம்மா
உன் முக மலர்ச்சியில்
கடந்த மாதம் இரண்டரை
மறந்தேன் அம்மா

ஐயோ.....அம்மா
ஏன் அழுகிறாய்...
உன்னை உதைக்கிறேன் என்றா ?
இல்லை - என்னை
அழிக்க நினைக்கிறார்கள் என்றா ?
அம்மா நான் சத்தியமாக
உன் ஆனந்தக்குழந்தை
உன் ஆறுதல் குழந்தை

நிறுத்தச் சொல்லுங்கள்
யாரே என்னை குலைக்கிறார்கள்
கால்கள் கைகள் வலிக்கிறது
கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா...

அம்மா கவலைவிடு
என்னை வெறுத்த இவ்வுலகில்
யாருக்கும் புரியாத அழுகையோடு
மறுமையில் உனக்காக
காத்திருக்கிறேன்
உன்னை சுவர்க்கம் சேர்க்க....

மலர்களின் வேதனை


வண்ண மலர்கொண்டு
உன் வதனம் சிலிர்த்திட
பாதடி நாடி தூவிய மலர்கள்
இதள் இதள்களாய்
நீ அடைந்த வழிகளில்

என் எண்ண ஓட்டத்தில்
கலந்த உன்னால்
நெஞ்சம் நிறைய
தந்த காதலில்
மங்கிய மதியால்
உன்னைச் சூடினேன்
மலராய்.......

மலர்களின் வேதனையால்
வெறுத்த எம் காதல்
மலரா மலர்களாய்
வாடியதும் தகுமோ....

மௌனம்....


பெண்ணே... என் கண்ணே
நான் பேசும் போதும்
நீ மௌனம்
நான் ஏசும் போதும்
நீ மௌனம்
என் கவி கேட்டும்
நீ மௌனம்
என் காதல் மொழி கேட்டும்
நீ மௌனம்
என் உணர்வுகளை
மதிக்காத உன் மௌனம்
நிதமும் கொல்வதை விட
ஒரு பளிச்சொல் ஏனும்
மொழிந்து விடு
என்னோடு உன் மௌனம்
கலைத்து விடு........

நட்பின் உத்வேகம்


வசந்தங்கள் நிறைந்த
பூங்காவனம் நீ
வாசங்கள் நிறைந்த
றோஜாவும் நீ
உன் பாசமெனும்
வாசனையால் எனைமறந்து
தவிக்கிறேன்

நீ மட்டும் ஏன்
உன் தூய நட்பால்
எனைக்கவர்ந்து
இவ்வுலகை மெய்
மறக்கச்செய்கிறாய்

நீதான் நட்பின்
திருவுருவமோ
ஏன் உன் பாச
விம்பத்தால்
எனைக்கொல்கிறாய்

நீதான் நட்பின் ஆழ்கடல்
ஆதலால் உன்னுள்
நீந்தி அன்பு எனும்
முத்தெடுத்து
தவியாய் தவிக்கிறேன்

உன் பாச வலையில்
கட்டுண்டதால்
இப் பூவுலகை
துறந்தாலும்
என்றும் உனையகலேன்
இது தான் எம் நட்பின்
உத்வேகமோ.....

கனவுலகில் நீ


பேரழகிகளின் ராணி
உன் அன்ன நடை கண்டு
உன்
வண்ண இடை கண்டு
கார் குழலின் நீளம் கண்டு
சாந்த நிலா முகம் கண்டு
உன்னில் மையம் கொண்டு
எம் உலகில் நாம் மட்டும்

காதலும் காமமாய்
தேனமுத மொழிபேசி
கொஞ்சல் சினுங்கல்
என்றும் குதூகலம்
வண்ண வண்ண
பட்டாம் பூச்சிகளாய்
சிறகடிக்கும் சிட்டுகளாய் நாம்

நிலைத்த உலகம்
என்றெண்ணி என்னை
நான் மறந்து......
உன்பின்னே ஓடோடி
கட்டிலை விட்டுருண்டோடி
தரைதொட்டு தலைகுனிந்து
கனவுலகில் நீ -
விளையாடிய நாளது
நிலையற்ற உலகதில்
உன்னோடு வாழ்ந்த
உணர்விது..........

மீண்டும் ஒரு கொலைகாரன்


பெரும் சீற்றத்தில்
எஞ்சிய எங்களை
கொண்று விட்டாயே
மனமிருக்கிறதா உனக்கு
நீ வருமுன் கிடைத்த
உணவுகளும் அற்று
வெறும் வயிற்றுடன்
தண்ணீர் மாத்திரம் உணவு
பட்ட காயங்களை
போக்கிய மருந்துகள் அற்று
பழக்கப்படுத்திய வலிகளின்
உணர்வுகள்
தேடலுக்கு வழியற்று
முடக்கிய முள்வேலிகள்
ஓநாய்களின் வெறியால்
பறிக்கப்பட்ட சுதந்திரம்
தேர்தல் என்று நீ வந்து
மீண்டும் கொண்று சென்றாய்
இன்று நீ கொண்டதை விட
அன்று விழுந்த செல்லில்
மடிந்திருந்தால் சாந்தி
பெற்றிருப்பேனோ.....
ஒரு உன்மை தெரியுமா
யாருக்கும் வாக்கே அழிக்காத
அப்பாவி நான்....

சோக உள்ளம்


ஒவ்வொரு நொடியும்
உனைத்தேடி நான்
காத்திருக்கும் நிமிடங்களில்
தவிக்கும் உள்ளத்தை
நினைக்க முடிகிறதா உன்னால்

உன்னை கண்டவுடன்
என்உயிர் திரும்பியதாய்
சிட்டாய் சிறகடிக்கும்
என் உள்ளத்தை
சிந்தை செய்யாத நீ

தவித்த என் மனதை
வாஞ்சைகள் செய்து
வாரி அணைப்பாய்
என்றிருந்தேன் மீண்டும்
தவிக்க விட்டதால்
உள்ளத்தின் சோகம்
உள்ள படி உள்ளதே

கோலம்.....


என் தேவியே......
நீ இட்ட புள்ளியில்
நான் வரைந்த கோடுகள்
எம் நட்பு .....
அதில் நாம் சேர்த்த
வண்ணங்கள்... கனிந்த
எம் காதல் சுவடுகள்
அத்தனை அழகு
பொறுக்காமல் உண்ண வந்த
எறும்புகளாய் எம் உறவுகள்
வீசிய சூறாவளியுடன்
நனைத்த மழையினால்
அழிந்த கோலம்
எம் காதல்...
எத்தனை பேர்சேர்ந்தும்
அதேவடிவில் எழுத
முடியாத கோலமாய்
எம் தொலைந்த வாழ்வு..

பிறக்கும் புது வருடம்


கருணை உள்ள கடவுளே....
பிறக்கும் புதுவருடம்
புதுமையாய் அமைத்திடு
சாந்தி சமாதானம்
நிலைத்த வருடமாக்கிடு
வேற்றுமை களைந்து
ஒற்றுமை உலகை அமைத்திடு
பாவிகள் மனங்களை
பாசமிகு மனங்களாக்கிடு
வறுமைகளற்ற செல்வம்
மிகு வருடமாக்கிடு
தோல்விகளற்ற வெற்றி
மிகு வருடமாக்கிடு

இறைவா.......நான் பிறந்தும்...
மாறா பல வருடம் பிறந்து விட
இவ்வருடமாவது நான் கேட்ட
வருடமாக தந்திடு.......

தேனியின் பாடம்


தேனியாய் மலர்நாடி
மலர்களின் தேனை
களவாடி சிறுது சிறிதாய்
தோள் கொடுத்த இனங்களுடன்
ஒருசேர உம்மால்
உலகுக்கு ஒரு பாடம்

சிறு துளியாய் நீயிருந்தும்
உன் விசம் கொடியது
உனைக்குலைக்கும்
எதிரியை துரத்தும்
விடாமுயற்சியில்
உன்னால் பறைசாற்றும்
ஒற்றுமையும் ஒருபாடம்

உனை பயந்த மனிதம்
தித்திக்கும் தேனால்
உன்மீது காதல்
உன்னை பார்த்தும்
திருந்தா மானிடம்

சேர்ந்து வாழ்தல்


எத்தனை காலம்தான்
எதிரிகளாய் நாம்
உன்னை நானடித்து
என்னை நீ அடித்து
மாற்றானை நாம் அடித்து
யாருக்கு ஏது பயன்

பூ மாதாவின் வைற்றுப்
பிள்ளைகள் நாம்
இப் பூவுலகில் பிறந்தவை
எமக்கும் சொந்தங்கள்
நாம் அடித்துக்கொண்டு
தின்பதை விட
சேர்ந்து பகிர்ந்து வாழ்தல்
சிறப்பன்றோ......


கண்ணீர்......


திருமணமாகி
கணவனே கதி என்று
வாழ்க்கைப் பாடத்தை
கற்க வந்த அபலை நான்

பெண் என்றோ
மனம் என்றோ
மனிதம் என்றோ
மதிக்காத மிருகம் நீ

கிடைத்ததை குடித்து
வெறியில் குலைந்து
என்னை வதைத்து....
கண்ணீர்தந்த வள்ளல் நீ

கண்ணீர் துடைப்பாய்
என்றெண்ணி...
கண்ணீர் விடுகிறேன்
உன்னோடுதான்....

அடிவாங்கும் ஆண்


பெண் என்று மலரென்று
வையாது உனை தாங்கும்
என்னை........
சீ என்று பேயென்று
தூற்றாத நாளுண்டா
பெண்ணே....
எழியவன் நானென்று
என் பெற்றோரிடம்
வாங்கிவிட்டதால்
உன் மமதையில்
நீ பெண் என்று
மறந்து விட்டதோ....

உன்னால் எத்தனை
அடிவாங்கினாலும்
வெற்று மனதோடு
உன்னை மட்டும்
காதலிக்கும்
கணவன் நான்

கவலை வேண்டாம் பெண்ணே


பெண்ணே....
நீ விழ எத்தனித்தால்
தாங்கும் இதயங்கள்
சில கோடி...........
விழுந்து விட்டால்
தூக்கிவிட பல கோடி

மலர்களுக்கு மலர்ச்சியை
கற்றுத்தந்தவள் நீ
மலர்களை விட
மலர்ந்திருக்க வேண்டாமா?

நீ ஒரு முறை அழுதுவிட்டால்
அண்ட சராசரமும் சேர்ந்தழும்
ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை
பாக்கிய சாலி நீ
ஆதலால் கவலை
வேண்டாம் கண்ணே.....

சுமை...


பிள்ளை பிறந்ததினால்
பிள்ளை தாய்குச்சுமை
பெண்ணை பெற்றதினால்
பெண் தகப்பனுக்குச் சுமை
மனிதன் மண்ணில் பிறந்ததினால்
மனிதன் மண்ணுக்குச் சுமை
காய் கொடியில் பிறந்ததினால்
காய் கொடிக்குச் சுமை
பெண்ணே நீ பிறந்ததினால்
வாழ்வதற்காய்...........
உன் தலையில் சுமை

விதைத்த வினை


பணமாய் நீ பல்லாக்கிலேறி
உலகவலம் விதவிதமாய்
உன்னால் விளைந்த
நன்மைகளும் தீமைகளுமாய்
வைகறை உன் கையில்
நீ விதைத்த வினை
உன்னையே அழித்ததை பார்
நீ மூட்டிய தீயில்
அழிந்தவர் பல்லாயிரம்
உன்னையும் தீ மூட்டக்கண்டு
ஆனந்தம் பேரானந்தம்

ஆனந்தம் பேரானந்தம்

காத்திருப்பு..


உள்ளத்தில் அலைபாயும்
காதல் வெள்ளத்துடன்
கண்ணாளனுக்காய்
காலனும் நானும்
தினமும் கரைந்ததிதினால்
காத்திருப்பு மட்டும்
என்னோடு.........

சிட்டுக்குருவிகளாய்
சிறகடிக்கும் என்
உள்ளக்கிடக்கைகளை
கண்ணா நீ அறிவாயோ
காதல் என்னை
ஆட்கொண்டதால்
காதலனுக்காய் மட்டும்
காத்திருக்கிறேன்

சகோதரி சிந்திக்க மாட்டாயா


உன் தாயவளும்
உன் போன்ற பெண்தானே
உன்னோடு என் தாய்
பெற்ற பெண் எட்டு
எட்டையும் எட்டாய்
தானுருகி .........
கஷ்டங்கள் பல கடந்து
தன்னை பலி கொடுத்து
உங்களை வடித்தெடுத்தாள்
ஒன்றொன்றாய் கரைசேர்க்க
அவள் கடந்த இன்னல்கள்
வடுக்களாய் காயங்கள்
தேகமெங்கும்.......
வலிக்கிறது மனம்
சிந்திக்க மாட்டாயா?

உன்னையும் பெற்ற
எம் தகப்பன்
எம்மை விட்டகன்று
பாலர்களாய் அவள்
மடியில் தவழ்ந்த எம்மை
யாருமற்ற அனாதைகளாய்
நாதியற்று பட்டதுயர்
மறந்து விட்டாய்
சிந்திக்க மாட்டாயா?

எம்மோடு பிறந்த
மூத்தவன் துணைகொண்டு
அவளும் விறகு வெட்டி
அப்பம் சுட்டு
எம்மை வளர்த்தெடுக்க
தினம் தினம்
கண்ணீர் விட்ட எம்தாயை
மறந்து விட்டாய்
சிந்திக்க மாட்டாயா?

கண்மணி திரும்பிப்பார்
நீ வளர்ந்த பாதையை..
அதை மறந்து தாயவளை
தூற்றி...வீட்டை விட்டகற்றினால்
அவள் மனம் படும் வேதனையை
சிந்திக்க மாட்டாயா?

இத்தனை வருடம்
உனக்காக அவள் பட்ட
துயர்களை ஒரு நொடியில்
சுக்குநூறாக்கினாய்...
மனம் நொறுங்கிய
எம் தாய் படும் பாடு
நீ அறிவாயா
சிந்திக்க மாட்டாயா?

தாய் என்றொரு
மஹா அத்தியாயம்
உனக்கு அற்பமாய்
காட்டியது எது
உன் துணையா
உன் சுயநலமா
உன் மமதையா
எது வானாலும் உன்னால்
திரும்பப்பெற முடியுமா
அற்புதமான தாய்மையை
சிந்திக்க மாட்டாயா?

நாளை நீயும் தாயாவாய்
நீயும் நிச்சயம்
விரட்டப்படுவாய்
அன்று உணர்வாய்
இன்று எம் தாய் படும்
வேதனையை...
நீயும் பெண்தானே
சிந்திக்க மாட்டாயா?

உன் அண்ணனாய்
ஒரு உபதேசம்
உன் மழுங்கிய புத்தியில்
நீ செய்த இத்தவறை
போக்குவதற்காய்
உன் தாயடி சென்று மன்றாடி
மன்னித்தருள வைத்து
அவளுக்காய் என்றும்
உன் வாழ்வை அமைத்திடு
எம் தாய்க்கு சாந்தி கொடு
ஈடேற்றம் பெறுவாய்
அன்றேல் உன்னாசம்
உன்னால்தான்.....
என்னை மன்னித்திடு


குறிப்பு: இக்கவிதையின் கரு உன்மைச்சம்பவம் எனது நன்பனுக்கு நடந்தது அவர் தனது சோகத்தை என்னிடம் கூறியபோது என் மனக்கவலையில் எழுதியது இதை என் உறவுகளுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

உனக்காக நான்


என்னைக் கொள்ளை
கொண்டவளே.....
உன்னில் லயம்
கொண்டேன்.......
கனிந்து காதல்
வயம் கொண்டேன்
ஆதலால் உனை
அடைந்தேன் ......

இப் பூவுலகில் எனக்காக
பிறந்தவளே........
நீ யின்றிய வாழ்வு
இனியேதடி.........
உலகமே எதிர்த்தாலும்

நீதான் என் ஜீவன்
நீதான் என் சுவாசம்
நீதான் என் துணை
நீதான் என் உறவு
நீதான் என் கூடல்
நீதான் என் இன்பம்
நீதான் என் வாரிசு
நீதான் என் செல்வம்

ஏன் சகலமும் நீயே
பொறுத்திரு என்
கண்மணியே........
உன்னவன் நானே
உனக்காக இவன்

ஓலைக்குடிசை


வனாந்திரம் அடைந்து
மரங்கள் சேர்த்து
ஓலை வெட்டி
கிடுகு பின்னி
களிமண் எடுத்து
தரை செய்து
கொத்தனாரும் கூலியாளுமாய்
தானே மாறி
அமைத்த தளம்
ஓலைக் குடிசை

அலுமாரிகளுமில்லா
கட்டிலுமில்லா
மெத்தையுமில்லா
தட்டாந்தரை மட்டும்
கிட்டிய இடம்
ஓலைக் குடிசை

குறுகிய நிலம்
குறுகிய கிரயம்
வசதிகளற்று வசதிக்காய்
அமைத்ததால்...
நின்றாலும் நிமிர்ந்தாலும்
தினமும் அடிவாங்கி
கூனன் நிலையில்
வாழுமிடம்
ஓலைக் குடிசை

முற்றத்தில் சமைத்து
உண்ட இடத்தில்
உறங்குமிடம்
விருந்தினருமில்லை
உறவினருமில்லை
இருந்தாலும்
தனிமை நிறைந்த
சிக்கன வாழ்வுக்காய்
கட்சிதம் நிறைந்த
ஒரே இடம்
ஓலைக் குடிசை மட்டும்தான்

தந்தைக்கு நன்றி


அல்லும் பகலும்
அயராது உழைத்து
வியர்வையில் தினமும்
குளித்து......பட்சிகளுக்காய்
பறந்து திரியும் பிதாவே
உன் சேவைக்கு
பல கோடி நன்றிகள்

வெயில் உன்னை வறுத்தாலும்
மழை உன்னை நனைத்தாலும்
குளிர் உன்னை வாட்டினாலும்
அத்தனையும் வென்றெடுத்து
இப்பாலகனுக்காய் தியாகம்
செய்கிறாயே அதற்காக நன்றி

நீர் பட்ட கஷ்டமும்
நீர் சிந்திய வியர்வையும்
நீர் காட்டிய பாசமும்
நீர் அளித்த கல்வியும்
ஒரு சேர்ந்து விரூட்சமாய்
இப்பார் போற்றும் புனிதனாய்
என்னை உருவாக்கினீர்
அதற்கும் நன்றி

என் தந்தையே நான்
உலகில் உள்ளவரை
தங்களுக்காய் என்
செய்தாலும் என்
கடன் தீராது .........
என் சாந்திக்காய்
நன்றி உரைத்து
சாந்தம் கொள்கிறேன்
மிக்க நன்றி

தேர்தல் .......

அரசியல் வாதி எனும்
நடிகர்களுடனும்.......
வாக்காளர் எனும்
கோமாளிகளுடனும்
அரங்கேறுகிறது
தேர்தல் எனும்
கபட நாடகம்

ஒற்றுமை களைந்து
வேற்றுமை வளர்க்கும்
தயாரிப்பாளர்களும்
எவனோ மேடைஏற
தன்னவனை சாய்க்கும்
வில்லன்களும்
நடப்பவைகளை
வேடிக்கை பார்க்கும்
காவலர்களாகிய
புகைப்படக்காரர்களும்
இன் நாடகத்தின்
உரிமையாளர்கள்

ஏமாந்த பார்வையாளர்கள்
எத்தனை நாடகம்
கண்டாலும் படிப்பினை
இல்லை அவர்களுக்கு

கண்கள் குளமாகிறது

தஞ்சம் புகுந்த பெண்ணை
காமுகனின் வேட்டையில்
மரணமே முடிவாகி......
பரிதாபம் காண
குழமாகிறது கண்கள்

ஈழத்தில் அவதரித்ததால்
அவமானம் தாங்காமல்
தன்னை தானே
எரித்துக்கொண்ட
உத்தம பேதை அவள்


உலகமே துரத்த
உயிரையாவது காக்க
காப்பு தேடி வந்தவளை
கொண்று தீர்த்ததில்
உங்களுக்கும்
அவர்களுக்கும்
வேற்றுமை ஏதுமுண்டோ........

ரகசியமில்லா உள்ளம்என் அழகு தேவதையே
உன் கரம் பிடித்த
நிமிடம் முதல்....
உன்னிடம் மறைக்க
நாடியதையும்.....
மறைக்காமல்
ஒப்புவித்தால்.....
என் உள்ளத்தில்
உன்னைத்தவிர
வேறொன்றுமில்லை

இசையானவள் ....


கண்ணே.......
என்வாழ்வின் நாதமாய்
விளங்கிய இசை நீ
காலன் எம்மை
சாய்த்ததால்.......
உன்நினைவுகளின்
ஸ்பரிசங்களை
இசையாய்.........
மீட்டிப்பார்கிறேன்
அதிலும் நீதான்
பேரின்பம்.......
நான் மடியும்
நொடிவரை
உன்னோடு
வாழ்கிறேன் என்பதில்
ஆனந்தம் ........

நிலவு....


வண்ண நிலவே
உன் தரிசனத்தின்
வெட்க மிகுதியால்
காரிருள் கூட
ஓடி மறைகிறாள்


உன்னை முழு
நிலாவாய்
கண்டபோதுதான்
பார் முழுதும்
பேரானந்தம்.......


மாதம் ஒரு முறை
வந்து மறைவதால்
ஆவலின் செறிவில்
அத்தனை இன்பம்சுதந்திரப்பறவை


சுதந்திரப் பறவயாய்
சுற்றித்திரிந்த என்னை
காதல் எனும்
மாய வலையில்
சிக்க வைத்து
தாடியுடனும்
பேனாவுடனும்
அலைய விட்டுச்
சென்றவளே....

சிறகொடிந்த
பறவயாய் மாறிய
என்னை மீட்பது
யாரு கண்ணே.....

சிரிக்க மறந்து....


பசுமை வளம்
பாலை வனங்களாகி
சேதங்களின் சிதறல்கள்
மாத்திரம் வளங்களாகி
மரக்கிளைகளை முகடுகளாக்கி
தகடுகளை சுவர்களாக்கி
வாழத்தகுதி அற்ற மனை

நிவாரணம் என்ற பெயரில்
அரை குறை உணவுகளுடன்
ஒருதரம் மட்டும் உண்டு
பட்டினி வாழ்கையுடன்

பேரழிவின் வடுக்களாய்
அங்கவீன உறவுகளுடன்
அவலங்களே நிகழ்வாகி
காலங்கள் நகர

உள்ளம் பதறுகிறது
தேகம் கொதிக்கிறது
மனங்கள் இறுகி
சிரிக்க மறந்து பல வருடங்கள்
சிந்திக்குமா உலகம்

சிந்திக்க மறந்த உலகம்
என்னை உல்லாசத்
தளமாக்கியிருக்கிறது
யாருக்குத் தெரியும்
என் மாறா நிலை
Related Posts Plugin for WordPress, Blogger...