மொட்டும் மலருமாய்
பிஞ்சும் காயுமாய்
தளிரும் இலையுமாய்
பசுமையுடன் செழுமையாய்
வாழ்ந்த என்னோடு
எத்தனை உறவுகள்
நான் முதன் முதலாய்
மொட்டு மலர்ந்த போது
உறவுகளின் ஆரவாரத்தில்
பட்டாசு வெடிகள்
நான் பிரசவித்த கனிகளை
மென்றவர்கள் பல நூறு
என் கழுத்தில் ஊஞ்சல் கட்டி
ஆடி மகிழ்ந்தவர்களும்
என் நிழலில் மண்சோறு சமைத்து
உண்டு மகிழ்ந்தவர்களுமாய்
என்றென்றும் உறவுகள்
கால ஓட்டத்தில் இன்று
நான் மட்டும் அனாதரவாய்
எனது புதிய பெயர் பட்ட மரம்
ஆனாலும் விறகு வெட்டிக்கு
விற்றதால் எனது
அங்கங்கள் தீக்கிரையாகின்றன
பட்டமரமானாலும்
இறுதி மூச்சுவரை நானும்
பயநாளிதான்
0 comments:
Post a Comment