பெண்மை வெறுத்து
பெண் உலகம் வெறுத்து
அன்பை வெறுத்து
அன்பு வைத்தவளை வெறுத்து
பாசம் வெறுத்து
பாசம் அழித்தவளை வெறுத்து
காதல் வெறுத்து
காதலித்தவளை வெறுத்து
என்னை மறந்து
உலகை துறக்க
நடந்தேன் பெண்ணே
உன்னை காணும் வரை
உன் தரிசன நிமிடம்
என் வாழ்வின் ஆரம்பம்
கடவுளின் படைப்பில்
உலகம் நீயானாய்
உன் பாச வரிகள்
எனக்கு உயிராகியது
உன் அனபின் திகைப்பில்
எம் புது உலகம் உருவானது
நீ பிறந்திருப்பது எனக்காக
என்னை பெற்றெடுத்து
வாழ வைத்ததும் நீயாக
இவ்வுலகில் மாண்ட நான்
மீண்டதும் உன்னால்தான்
0 comments:
Post a Comment