இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, March 29, 2012

பார் மகளே.... பார் !!


பார்..... பார் மகளே பார் ..!
பார் முழுதும் பரந்து கிடக்கும் 
படிப்பினைகளைப் பார் 


உலகமது நிரந்தரமற்ற பயணம் 
இருள் சூழ்ந்த பாதையில் 
பலதிசையும் கண்திறந்து பார் 


தேவைகளை நிவர்த்திக்கும் நாயன் 
அல்லாஹ்விடமே கையேந்தி 
அனைத்தையும் பெற்றிடப்பார் 


எம்மைக் குறையின்றிப்படைத்த 
உலகத்து வல்லோனுக்கே - என்றும் 
நன்றிக் கடமையுடன் பார் 


பண்பானவர்களின் மத்தியில் 
பக்குவமான பாசத்துடன் 
நடந்து கொள்ளப்பார் 

Monday, March 26, 2012

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 11)

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 10)

நிதர்சனமான நிலையினையாள
தடுமாறிய வாழ்வின் துடுப்பினைத் தேடி
வாழ்வின் ஆழம் வரை அலையநேர்ந்தது
இறந்தது குழந்தை இருப்பதும் (கணவன்)
குழந்தையாகவே உணர்நதேனதை மறக்கவில்லை

இருந்தவைகளை இழந்திருந்து
வைத்திய சேவைக்கே யாசகம் தேடும் நிலையில்
மீண்டும் துயர் மீளாத்துயராகி
வயிற்றைக்கழுவ வேலையும் தேடி
அலைந்த போது தருபவர்களும்(உடலை) கேட்டபோது
கொடுத்துப்பெற மறுத்ததென் மனம் - இருந்தும்
என்னை இழக்காததை மறக்கவில்லை

அழகையும் அறிவையும் படைத்த இறைவன்
எனோடு துயர்களையும் பிறக்கச்செய்தானேன்
என்ற கேள்விகளை எனக்குள் நான் கேட்கலானேன்
என்னைத் தாங்க முடியாமல் அழுத கணவனின்
கண்ணீரில் தினமும் நனைந்ததை
என்நெஞ்சமின்னும் மறக்கவில்லை

Saturday, March 24, 2012

நீயாகிய நான்....!!!


என் நாடித்துடிப்புகளில் 
தினமும் ஊடுருவும்  
உன் நினைவுகளில் 
என்னை நான் உணர்கிறேன் 


கண்மூட மறுக்கும் - 
உன் ஊடல்களின் நிழல்கள் 
சக்தி கொடுத்து சரிசெய்கிறது 
என்னை நானாக உணர்வதற்கு 


எம் உலகத்தின் அரசியாய் நீயானபோது 
காதல் கைதியாய் உன்மடியில் நானானேன் 
கருவறையும் வெறுக்கின்ற உன்ஆட்சியில் 
எம் வாழ்நாட்கள் செழிப்புறுகிறது


உலகத்து உறவுகளுள் உன்னதமானவள் நீ 
எனக்கென நீ கொள்ளும் ரணங்களால் 
என் குருதிகளை தியாகம் செய்து 
உனக்கென நான் வாழ்கிறேன் 

Wednesday, March 21, 2012

அன்னை மடி அரவணைக்குமா??



அம்மாவென்றழுத போது 
அரவணைத்த மாதா - உனது 
எறிகணை சொல்லம்பால் 
அகமின்னும் அழுகிறது 


பத்துமாதச் சுமை தீர்த்த - உனது 
எச்சுமையும் எனதாக்கி 
சிரமேற்றுச் சுமந்தவனை 
சிதைத்ததுன் செயல்கள் 
பிணமானேன் உயிரோடு 


இருவருடப்பால் குடித்து 
பலவருடப் பக்குவத்தில் - உனது 
வைராக்கியமும் என்னுள் 
அட்டையாய் ஒட்டியுள்ளதே அம்மா......
சேட்டைகள்தான் பலிக்குமா??
என்தவறு ஏதங்கே.....

Wednesday, March 14, 2012

தொடரும் மனமிங்கு


நிம்மதிக்காய் நினைத்துப்பார்க்கிறேன் 
நிராயுதபாணியாய் நிலை தடுமாற்றங்கள் 
அடைந்தவைகளால் அல்லலுறுகிறேன் 
அயர்ந்த போதும் அவஷ்தையெனக்கு 


மனிதனாய்ப் பிறந்ததில் 
இத்தனை அவலங்களென்று 
வியந்துநிற்கும் விடையங்களை
விரைந்து நானும் வெல்ல முற்படுகிறேன் 


திடமான உறுதியும் 
பலமான நம்பிக்கையும் 
இறைவனளித்த வரங்களாகி 
தேற்றிய மனமிங்கு 
அமைதி கொண்டு ஆறுதலாகிறது 


சலனங்களெம்மை சரிசெய்யாத போது 
சறுக்கல்களாகும் வாழ்விற்கு 
சொந்தங்களும் பந்தங்களும் 
சொற்றொடர்களில் கிடைக்கிறது 


நீண்ட இடைவெளியில்
மீண்டும் மனந்திறந்திட 
வரிகள் தேடிநின்று 
தொடர்ந்திட நானும் முயல்கிறேன் 
நன்றிகள் நண்பர்களே 





Related Posts Plugin for WordPress, Blogger...