இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, October 31, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 06)

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)


சந்திசிரித்தாற்போல்
தெரிந்துகொண்ட காதலுக்காய்
வாழ்த்தொலிகளோடு புத்திமதிகளும்
காதினில் ஓதிட்ட தோழியருக்கு
ஜாடயில் ஒப்புதலும்
பார்வையில் காதலையும்
சமர்ப்பித்ததை மறக்கவில்லை

இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை

ஒலித்த கைபேசியில்
மறுமுனையில் இசைத்த குரலின்
இன்பக்காதல் மொழியில்
இறுக்கமான மனதினை
வசியம்செய்த வஞ்சகனின்
அழைப்பாணை மறக்கவில்லை

Sunday, October 30, 2011

கருணைக் காதல்


பள்ளிநாள் வகுப்பறைமுதல்
பக்குவமெனை சேருமுன்னே
காதல் வலை விரித்து - என்னை
வீழ்த்திவிட்ட விந்தையானவளே...

கொண்டு விட்டேன் காதலென்று
நள்ளிரவு நடுநிசியிலும்
பத்திரமாய்க் காதல்தூது
பக்குவமாய் படைத்திருந்தேன்

அடைந்த எம் காதலுக்காய்
ஒருநாளேனும் உன் மடி துயில
காத்திருந்து பலவருடத் தவமிருந்து
ஏந்திக்கொண்டேன் மலராக

காதலில் வென்றவெர்களென
மார்தட்டி பெருமையும் கொண்டு
வாழ்வின் இன்பமாக
அடைந்தோமிரு கண்கள் - ஆதலால்
காய்த்த மரமானோம்

Wednesday, October 26, 2011

அவர்களெம் குழந்தை....

அப்பா படுத்த படுக்கையில்
முடங்கிவிட்ட நோயாளியாய்
அம்மா வீடு வீடாய் வேலைதேடி
வேதனைப்பட்ட வேலையாளியாய்


கைகொடுக்கும் கரங்களென்று
காத்திருந்தும் கை நீட்டப்படாது
கைசேதப்பட்டவர்களாய்
துணிந்துவிட்டோம் எம் கரங்களோடு


உழைத்திருந்த தந்தையின்
ஊதியத்தின் குதூகலத்தில்
உளமாறப்புசித்திருந்தோம்
ஊனமேதும் கண்டதில்லை

Saturday, October 22, 2011

இன்று யார் சர்வாதிகாரி....??ஒடுக்கப்பட்டது சர்வாதிகாரமென்று 
ஓர் சர்வாதிகாரியின் கூக்குரல் 
உள்நோக்கம் ஊமையாக்கி 
ஒலிக்கிறது உலகெங்கும் 


42 வருட அரசாட்சியில் 
சித்தரிக்கப்பட்ட சிலவருடங்களில்தான் 
சர்வாதிகாரியாக முத்திரை குத்தப்பட்டார் 
ஏற்றப்பட்ட சூழ்ச்சிகளில் 
வீழ்த்தப்பட்டவர் வீர மரணமெய்தினார் 


குறிவைக்கப்பட்ட நாட்டு மன்னர்களை 
குற்றம்சுமத்தும் அரக்கன் (அமேரிக்கா)
நிரூபிக்கப்ட்ட ஆயிரம் குற்றங்களுடன் 
உலகின் முக்கியமான சர்வாதிகாரி 
திரும்பிக் கேட்டவர்கள் யார்??

Friday, October 21, 2011

முனாஸ் என்ற என்தோழனுக்கு.....


முத்தொன்று கண்டெடுத்தால்
முத்துக்குப் பெருமை இம்முத்தினை
இன்றெடுத்த பெற்றோருக்குப் பெருமை
சொத்தான திலகமே நீ வாழீர் 


துடிப்பான மாணவனாய் 
சிறந்த சாரணணனாய் 
கற்றதை கற்றவாறு 
கற்றுத் தேர்ந்த கல்விமானே நீ வாழீர் 


குடும்பச்சுமையும் தானுணர்ந்து 
தன்னலம் கருதிடாது சகாக்கள் துணையுடன் 
சரிந்திடாத குடும்பத்திற்காய் 
இரவுபகல் உழைத்திருந்தவனே நீ வாழீர் 


சமுக அக்கறை வாழும்போதே கொண்டிருந்தாய் 
பிணைந்திருந்த வேற்றுமைகளை 
களைந்திடவும் துடித்து நின்றாய் 
ஏழை நிலையுணர்ந்து மனதினால் அழுதிருந்தாய் 
வசயதியற்ற வள்ளலாய் இருந்தவனே நீ வாழீர் 

Wednesday, October 19, 2011

காத்திருப்பின் வெகுமதி...


கண்களுனைத் தேடுகிறது 
காத்திருக்கிறேன் கானகத்தில் 
காதல் எனக்களித்து 
தவிப்பை பரிசளித்தாய் 


உனக்காகக் காத்திருக்கும் 
ஒரு நிமிடத்தவிப்புக்கூட 
தசாப்தங்களாய்த் தெரிகிறதே 
காதலின் தெய்வீகமிதுவோ...


மரங்களும் பட்சிகளுமாய் 
ஏளனப்பார்வையில் எம் காதலை 
குற்றம் சொல்கிறார்கள் 
என்னுள்ளம் பரிதவிக்கிறது 

Tuesday, October 18, 2011

சொன்னபடி நீ கேள்....


நான் பெற்றெடுத்த பிள்ளை நீ 
பேறுகளனைத்தும் எனக்கே சொந்தம் 
குறையதிகம் கண்டாலும் - நான் 
சொன்னபடி நீ கேள்....


என்னாசை தீர்ந்திடனும் 
என்விருப்பம் நடந்திடனும் 
உனக்காக அத்தனையுமென்று - பிள்ளையிடம் 
பறித்தெடுக்கும் சுதந்திரங்கள் 


உனக்கென்றொரு மனமில்லை 
அதிலொரு காதல் உதிப்பதில்லை 
அகந்தை மனம் அழுக்கானாலும் - விரல் 
நீட்டிய பெண்ணை மணந்திடனும் 

Monday, October 17, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 05)

அன்பிற்காய் கையேந்தி
அலைந்த பொழுதுகளில்
அடைந்தேன் உனையோர் திருவிழாவில்
தொடர்ந்தேன் உனையடைய
வியந்தேன் உன் சரிதையில்

அடைவது உனையென்று
உள்ளம் எனக்கிட்ட கட்டளையில்
உனக்காக ஏங்கினேன் கண்ணே
இன்ப அதிர்வுக்காய்
செய்தனன் நாடகம் - அதில்
வீழ்ந்தது நாநானேன்

எனக்காகப் பிறந்தவளே
உன் விழிகளில் ஈரமெதற்கு
பிறப்பில் அனாதையாய் நானும்
வளர்ப்பில் உயர்ந்து நிற்கிறேன்

உன் தொடுகையைத் தேடுகிறது....

அந்திமாலை அகல்விளக்கினூடே 
நாம் பேசிய காதல் மொழிகேட்டு 
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான் 

இயற்கை தந்த காதலோடு 
இயற்கையின் ஸ்பரிசங்களுடன் 
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும் 

நீரில் பட்டுவந்த தென்றலும் 
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும் 
உன் தொடுகை தேடுகிறது....

எத்தனை இன்பமடா 
இதுநாள்வரை பெற்றதில்லை 
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...

Sunday, October 16, 2011

வாடும்நெஞ்சம் அழுகிறது....கைவிட்ட கணவனும் 
கைநழுவிய உறவுகளென 
தனிமை தந்த வாழ்வுடன் 
எதிர்நீச்சல் ஆகிறதென் நாட்கள் 

தான்கொண்ட வேதனை 
தன்னோடு திர்த்திடவே....
சேயுந்தன் நிலைமாற்ற 
சுமந்தனன் முதுகிலே....

கடப்பாறை கைபிடித்து 
கடினபணி செய்துவிட்டு 
வயிற்றுப் பசிதீர்க்க...
வகுத்தானோ எம்மிறைவன் 

வாழ்வோரெல்லாம் வாழுகிறார் 
வாடும்நெஞ்சம் அழுகிறது 
ஏழைத்தாயின் தலையெழுத்தென
ஏனிந்த ஏக்கமெமக்கு...

Thursday, October 13, 2011

பற்றிக் கொண்டது காதல்


மலரின் இதளைப் பதம்பார்த்த 
வண்டுக்குத் தெரியவில்லை 
அம்மலரின் கிறக்கம் என்னவென்று 

மலர் கொண்ட கவர்ச்சியில் 
மதிமயங்கிய வண்டுக்குத் தெரியவில்லை 
மலர் மீதுள்ள காதலதுவென்று 

சேர்ந்து மலர்ந்து வகுத்த முகத்திதை 
ஈர்த்துக்கொண்ட மனதையல்லவா
பற்றிக் கொண்டது காதல்
Related Posts Plugin for WordPress, Blogger...