அன்பிற்காய் கையேந்தி
அலைந்த பொழுதுகளில்அடைந்தேன் உனையோர் திருவிழாவில்
தொடர்ந்தேன் உனையடைய
வியந்தேன் உன் சரிதையில்
அடைவது உனையென்று
உள்ளம் எனக்கிட்ட கட்டளையில்
உனக்காக ஏங்கினேன் கண்ணே
இன்ப அதிர்வுக்காய்
செய்தனன் நாடகம் - அதில்
வீழ்ந்தது நாநானேன்
எனக்காகப் பிறந்தவளே
உன் விழிகளில் ஈரமெதற்கு
பிறப்பில் அனாதையாய் நானும்
வளர்ப்பில் உயர்ந்து நிற்கிறேன்
உனக்குப்பிணி தந்து
உயிரில் கலந்திட்ட காதலுடன்
உனையேந்தினேன் அழகே
உன்னோடு மரணம்வரை
தொடர்வது திண்ணம்
வரிகளின் இனிமையிலும்
வார்த்தைகளின் உறுதியிலும்
சொக்கித் தவித்து
சொப்பனத்திற்காய் அவன்மார்பில்
சாய்ந்த நிமிடம் மறக்கவில்லை
தழுவலில் எமை மறந்து
சூழல்நிலை மறந்து
சுவனம் நேரில் கண்டதாய்
சுகம் கண்டபொழுது
எழுந்த சிரிப்பொலியில்
அதிர்ந்ததை மறக்கவில்லை
இன்னும் தொடர்வாள்...........
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 06)
0 comments:
Post a Comment