இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, October 17, 2011

உன் தொடுகையைத் தேடுகிறது....

அந்திமாலை அகல்விளக்கினூடே 
நாம் பேசிய காதல் மொழிகேட்டு 
கதிரவனும் வெட்கித் தலைகுனிந்தான் 

இயற்கை தந்த காதலோடு 
இயற்கையின் ஸ்பரிசங்களுடன் 
இறுகிவிட்டதே எம் உணர்வுகளும் 

நீரில் பட்டுவந்த தென்றலும் 
தேகம் தொட்டுவிட சில்லென்ற உடலும் 
உன் தொடுகை தேடுகிறது....

எத்தனை இன்பமடா 
இதுநாள்வரை பெற்றதில்லை 
இன்றே மடிந்திடனும் உந்தன் மடியினிலே...


நான் கட்டிவைத்த கற்பனையுலகை 
இன்று நனவாக்கினாய் என்மன்னவா 
உனக்காக என்ன தவம் நான் செய்தேன் 

உன்கண்ணில் தெரியும் திருப்தியுடன் 
தீண்டாத உன்தேகமளித்த 
சுகமாய் உணர்கிறேன்....

காதலுலகம் எம் காதல்கண்டு 
காதலிக்கத்துடிக்கிறது 
காதலை வாழவைத்தோமின்று...
கவிதைக்கு கருதந்த ஆதிரா அக்காவுக்கு நன்றி 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

Anonymous said...

அருமையான ஒரு கவிதை.
மெருகேறி வருகிறது உஙளின் கவிதைகள்.
வாழ்த்துக்கள் அன்பு உறவே!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...