காமத்தின் வாயிலாக
கலியுகம் கண்ட மானிடமே
காமம்தனை கருத்துள்ளதாக்கி
மாசற்ற காமத்தில் மகிழாயோ...??
மதிகெட்ட உன் காமத்தில்
உறவு மறந்த நேரத்தில்
மிருகமாய் மாறுகின்ற
மானிடப்பிறவியா நீ
அரிய மானிடப்பிறவியாய்
அவதரித்த நீ
ஐந்தறிவு ஜீவராசிபோல்
ஆறாமறிவை மறந்து
அனுபவிக்கத் துடிக்கிறாய்
தந்தை மகள் சகோதரன் சகோதரி
ஆசியரியன் மாணவியென
பந்தம் மறந்து மகிழத்துணிந்த
மானிடத்தின் அவமானச் சின்னம் நீ
பாசத்தில் கட்டுண்ட
பாதுகாவலன் நீயென்றிருக்க
பாதகம் உன்வடிவிலாகி
பாரும் வெறுத்து உமிழச்செய்கிறாய்
இப்படியும் காமத்தின் லீலைகள்
இடிந்துவிழுமோ வானமும்
என்றழுகின்ற மனங்களெல்லாம்
வெறுக்கின்றது நானும் மனிதனென்று

2 comments:
valikal!
கொடுமை !
Post a Comment