இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, August 18, 2017

புலமைப் பரிட்சை (வேண்டாமே)
சுதந்திரமாய் கற்று 
சுகமாய் வெற்றிபெறாது 
சுழன்றடித்த சூறாவளியாகி 
ஓயும் நாள் நெருங்குகிறது 

திறமைக்கு தூண்டுகோலாகாத 
திட்டமிடப்படாத கல்வியாகி 
கற்றவருக்கும் தெகிட்டுகின்ற 
பரிட்சைநாள் நெருங்குகின்றது 

தலையில் கொட்டி
தரித்திரமென்று திட்டி - எதிர்மறையாய் வழிநாடாத்தியவர்களிடமிருந்து  
விடுவிக்கும்நாள் நெருங்குகிறது 

புலமைப் பரிசிலென்ற 
சிறையில் பிடித்து 
சித்திரவதை ஓயாது தந்த
விடுதலைநாள் நெருங்குகிறது 

கடந்தகால புலமையாளர்கள் 
கல்லு மண் தூக்குகிறார்கள் 
வெறுத்திருப்பார்கள் போல
வெற்றியாளர்கள் என்று 

விஞ்ஞான வளர்ச்சியின் 
வேகத்திற்கேற்ற வகிபாடுகளுடன் 
மாற்றப்பட வேண்டும் இந்த 
விற்பனைக் கல்வித்திட்டம் 

செல்வங்களைக்  கண்டுநான் 
கவலையுற்றேன் வென்றுவர 
இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 
ஆரோக்கியத்துடன் எழுதிவர 
மனதாற வாழ்த்துகிறேன் 

Tuesday, March 21, 2017

வாழப்பிறந்த நாம்......


இல்லறவாழ்வு என்பது 
இன்பமானது என்றனர் 
இணைகள் பிரிந்திங்கு 
இன்னல்களோடு தவிக்கின்றனர் 

துறவறமான வெளிநாட்டால் 
துன்பங்களின் சுமைகளால் 
தொடர்கின்ற பிரிவுகளால் 
வேதனையான வெறுப்புகள்தான் 

காசுக்காய் சென்ற இடத்தில் 
வேசிகளாய்ப் போனவர்களும் 
வேடமிட்டு வாழ்ந்தாலும் 
பாவிகளாய் ஆனவர்களும் 
தோல்விகளோடுதான் சங்கமிக்கின்றனர் 

மதிக்கப்படாத உணர்வுகள் 
மிதிக்கப்படும் உயிர்களாகி 
நிரந்தரமான பிரிவுகளடைந்து 
நிம்மதியற்ற வாழ்வுடன் 
நிராயுதபாணியாகின்றனர் 

மாய உலகமிதுவென்று 
மாய்த்துக் கூறினாலும் 
பகட்டு உலகமொன்று 
பொய்ப்பித்துக்கொண்டிருக்கிறது 

கஞ்சி குடித்தேனும் 
கால்வயிறு நிறப்பிக் கொண்டு 
காலம் முழுதும் சேரந்தே வாழ
வாழ்க்கைப் பயணம் தொடர்ந்திடணும் 

வாழப்பிறந்த நாம் 
வாழ்விழந்து தவித்து 
வாழ்வளித்து என்னபயன் 
அடைந்த வாழ்வையாவது  
வாழ்ந்திடப் புறப்படுங்கள் 


Monday, March 20, 2017

காதலுக்காய் உயிரோடிரு


உருவமில்லா உன் காதலை
உணர்ந்திடாத உள்ளத்திற்காய்
உனை அழிப்பதேன் பெண்ணே
உலகமிது அற்பமென்றுணராயோ...

உனக்கென நீ அடைந்ததில் 
உள்ளவைகளை வளமாக்கிக்கொள்
உலவும் உயிராக நீயிருந்தால்
உணர்வில் உருவாகும் காதலுடன்
உளமாற நேசித்திடும் காதலன்
உனைச் சேர்வான் காத்திரு பெண்ணே

உண்மையும் பொய்மையும்
உலகத்து வழமை என்பேன்
உச்சம் தொடும் மெய்களுடன்
உச்சி மோர்ந்து முத்தமிட்டு
உன்னையும் அரவணைத்திட
உத்தமனாய் நீ காண்பாய்
உயர்ந்தவனாய் அடைந்து கொள்வாய்
உச்சம் தரும் இச்சை தீர்ப்பாய்
உறவுகலந்து மகிழ்ந்திருப்பாய்
உயிர்திறக்கும் வரை சேர்ந்திருப்பாய்
உத்தமியே நீ நலமாயிரு
உயிரோடு மட்டும் மீதமாயிரு......

உறுத்தல்களைக் கழைந்து
உதடுகளின் வரிகளை மறந்து
உணர்வுகளுக்கு மதிப்பளித்து நட
உலகம் வியக்கும் வாழ்வடைந்து
உன்னத சுவனம் அடைந்திடுவாய்

Tuesday, March 14, 2017

நிழலின் நிஜங்கள் - மக்கள் மன்றின் முடிவை நோக்கி


ஊடக அரசியலின் உச்சமிந்தக் காலம் என்று சொல்லும் அளவு மிகவும் தீவிரமான ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோம் என்றால் அது மிகையாகாது அதற்கு வழியமைப்பது போல் இன்றய அத்தனை இளைஞர் பட்டாளமும் Facebook மூலம் மிகவிரைவான தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் அதுவே மிகப்பெரும் சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதும் சத்தியமே......

இற்றைக்கு பல வருடங்களின் முன்னர் இவ்வாறான நிலை இல்லாதபோது மேடைப்பேச்சுக்களில் மயங்கும் கூட்டங்களாக இருந்தது எம் சமுகம் அந்தக் காலத்து அரசியல் வெறும் முலாம் பூச்சுக்களாக இருந்தது வீரிய வசனங்களாக இருந்தது சமுகம் சார்ந்த அக்கறையான வார்த்தைகளை எமது வேதவாக்கியங்களாக ஏற்று ஒன்று பட்டு நிற்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக பயணித்திருந்தோம் ஆனால் இன்று அத்தனையும் தலைகீழாகிப் போய்க்கொண்டிருக்கிறது யாரையும் யாரும் விமர்சிக்கலாம் என்கின்ற அரசியல் நடந்தேறிக்கொண்டிருக்கிறது
ஒற்றுமை என்றால் என்ன என்று நாம் கேட்குமளவு எமது நிலை மாறிக்கொண்டிருக்கிறது இதன் முடிவு நோக்கிய பயணம் எம் அனைவரின் மீதான தலையாய கடமையாக நான் பார்க்கிறேன்

எம் சமுகத்தின் நிலை குறித்த கவலை இன்றய காலத்தில் மிகவும் மேலோங்கி நிற்கிறது எம் சமுகத்தின் தலைவர்களே மிகப்பெரும் குற்றவாளிகளாக மக்கள் மன்றில் நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ஆதாரங்கள் முன்வைக்கப்படுகிறது எடுத்துக்காட்டல்கள் காரண காரியங்கள் நம்பும்படியாக நிருபிக்கப்படுகிறது அத்தனை விடயங்களும் எமது மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது இருந்தும் தலைவன் உத்தமன் என்றுதான் வாதாடிக்கொண்டிருக்கிறோம்

சில வாரங்களாக பேஸ்புக்கில் நிழலின் நிஜங்கள் என்ற தொடரொன்றை https://www.facebook.com/jabeer.raazimuhammadh/posts/10211414263047677 எழுதிக்கொண்டு வந்தார் அவரின் எழுத்தின் ஆரம்பத்தில் நானும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தேன் காரணம் என்தலைவன் மீது மிகவும் கீழ்த்தரமாக குற்றம் சாட்டுகிறார்கள்  அசிங்கப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கோபப்பட்டிருந்தேன் ஒவ்வொருத்தருடைய வார்த்தைப் பிரயோகங்களையும் கண்டு மிகவும் வேதனையடைந்தேன் ஒரு சமுகத்தின் பிரதிநிதியாகிய ஒரு தலைவரைக் குறித்து இவ்வாறெல்லாம் எழுதுகிறார்களே என்று ஆதங்கம் கொண்டேன் அவர்களை கடிந்து கொண்டேன்

அந்த தொடரின் பகுதிகள் கடந்து சென்ற போது எனது மனம் பலவாறு சிந்திக்கலாயிற்று நான் கண்மூடி யாசித்திருந்த என் தலைவன் குறித்த பகுதிகள் என் மனதோடு போர்புரிய ஆரம்பித்து விட்டது இருந்தும் நான் இன்னும் அவரை நேசிக்கிறேன் உண்மைத் தலைவனாகவே கொண்டிருக்கிறேன் எதுவரை தெரியுமா
என் தலைவன் மொழியில் இங்கு விடபட்டிருக்கின்ற குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்கமான பதில் கிடைக்கும் வரை.....

எம் மக்கள் நீதிமன்றில் ஹக்கீம் என்ற முஸ்லிம்களின் தலைவனை குற்றவாளி என்று கண்டவர்களின் ஆதாரங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆனாலும் இது பற்றிய அவரின் நியாயப்படுத்தல்கள் எம் மக்கள் மன்றில் அவர் மூலம் பகிரங்கமாக  முன்வைக்க வேண்டும் அது அறிக்கைகளாகவோ அல்லது மேடைப்பேச்சுகளாகவோ இருக்கலாம் அவ்வாறில்லாது  இதை வெறுமனே விட்டுவிட்டு அமைதி காத்தால் கூட இந்த குற்றச் சாட்டுகளை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று மக்கள் நீதிமன்றம் முடிவு எடுத்துக்கொள்ளும் என்பதையும் எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறேன் உண்மையான தொண்டனாக மக்கள் மன்றில் நானும் ஒரு அங்கமாதலாம் நியாயமான தீர்வு நோக்கி பயணிக்க நானும் ஆசைப்படுகிறேன்

இத்தனை காலமும் ஏதோ ஒரு வகையில் அரசியல் அதிகாரங்கள் இரந்தும் முன்னேற்றமற்ற அனாதைகளாகவே எமது வாழ்நாள் கழிந்து விட்டது கடந்து வந்த எம் பாதையை திரும்பிப் பார்க்கின்ற போது மிகவும் வேதனையுடன் ஆசுவாசப்படுகிறோம் கடந்த காலமும் நிகள்காலமும் எதிர்காலமும் ஒரு வாறு அமையுமாக இருந்தால் எம் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பொரும் துரோகிகளாக நாம் இருப்போம் என்பது யாராலும் மறுக்க முடியாது  உண்மையில்  கடந்த முப்பது வருட மூத்த அரசியல் வாதிகள் இட்ட தவறுகளால் இன்று நாம் எமது முகவரிக்காக அல்லல்படுகிறோம்
இந்த நிலை எம் இன்றய இளைஞர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.

ஒன்று பட்ட ஒரு சமுகத்தில் ஒற்றுமையால் அத்தனையும் சாத்தியமாகும் எதிர்கால சந்ததிக்காகவேனும் அனைவரும் ஒன்றுபட்டு சாத்தியமான அரசியல் ஒன்றை இனங்காண வேண்டும் சமரசங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் தவறிழைக்காத மனிதனில்லை குற்றம் செய்யாத மானிடமில்லை திருத்தல்களும் திருந்துதல்களும் இறைவன் மீதான பயமும் நாளைய மறுமையின் விசாரணைக்கான பதில்களுக்குமாக எம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும் அற்பம் இந்த வாழ்நாளில் மரணம் எப்போது வரும் என்று யாரும் அறிந்தவரில்லை அதற்கு முன்னரான கடமைகளை சரிவர நிறைவேற்றுங்கள் நாங்களும் உங்களோடு துணைவருகிறோம் ----

எனதன்பு இளைஞனே.....


விளையாட்டோடு வீணாகும் 
வீரனே உம் விளையாட்டால் 
வாழ்வின் விளையாட்டை 
வென்று நீ காட்ட வேண்டாமா ?? 

வேலையில்லாச் சோம்பலோடு 
வேலைதேடி நீ வெந்து போகிறாய் 
வேலையொன்று உருவாக்கிட 
வழியொன்று நீ தேட வேண்டாமா??

படித்தவன் நானென்று 
படிப்புடன் பதவி தேடுகிறாய் 
நீ கற்றது உதவாக் கல்வியென்று 
உணர்ந்து கொள்ள வேண்டாமா??

உன்னைச் சுற்றி உற்றுப்பார் 
மாணிக்கங்களாய் வழிகளிருக்கிறது 
வாலிபம் என்னும் வைரமிருக்கிறது 
நம்பிக்கையை ஆயுதமாக்கி....
முனைந்து நீ முன்னேற வேண்டாமா??

வழியொன்று பிறக்குமென்று 
வழியற்றுக் காத்திருந்து 
வாழ்விழந்த ஏழையாகி 
வதைக்கப்படுகிறாய் வறியவனாய் 
சாதித்தவனாய் மாற வேண்டாமா??

கன்னியுன் பருவத்துக் காதலை
காளையென்ற மமதையுடன் 
காமத்தால் சீரழிந்து சிதைந்து போகிறாய் 
காதலை நீ வெல்ல காதலிக்க வேண்டாமா??

இன்றய முயற்சியின் பயன்பெற்ற 
நாளைய சமுகத்தலைவன் நீயாவாய் 
இன்று நீ உன்னை இளந்துவிட்டு 
நாளை உன்னை நீ தேடுவாய்.......

எனதன்பு இளைஞனே.....
மாற்றானிடம் கையேந்திய 
மடிப்பிச்சை வேண்டாமுனக்கு 
உனக்கெனப் பாதைவகுத்து 
முன்னேறத் துணிந்து நில்
முழு மதியாய் மகிழ்வாயென்றும் 

Monday, March 6, 2017

அல்லாஹ்வுக்காய் ஒன்றுபடுங்கள்


போராளியாய் பிறந்த நீ
போராளியாய் மரணிக்க வேண்டும்
புகளெதுவும் உனைச் சேராது
ஆசைப்பட்டு அழிந்திடாதே......
என்றுரைக்கும் அரசியலின்று

தலைவனின் பிழைகூறும் தொண்டனும்
தொண்டனின் குரல் நசுக்கும் தலைவனுமாகி 
வேடமுற்றோரின் கூப்பாடுகளும்
வேதம் உரைக்கும் வேதாந்திகளுமென
அனாகரீக அரசியற் காலமின்று

கூஜாத் தூக்கிகளின் பன்னீரிலும்
காக்கா மார்களின் கதையிலும்
மயங்கி மதிமறந்த மேதாவிகள்
எதிர்காலம் பற்றிய கவலையின்றி
மானம் வித்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்

ஒரே அல்லாஹ் ஒரே றசூலென
ஒரு கலிமாவை உரைத்த சமுகம்
சாத்தானிய அரசியலுக்காய்
சின்னாபின்னமாகிச் சிதறப்போகிறது
சீர்படுத்த முனைவாரில்லையின்று

அறையிலுள்ள அசிங்கங்கள்
அம்பலமாகி நாறிக்கொண்டிருக்கிறது
அறையினுள் துப்பரவு செய்ய
எவர் மனமும் நாடவில்லை
மரணித்துப்போன மனங்களுடைய
பிணங்களுடனா எம்பயணங்களின்று 

மாற்றும் சக்தியாய்த் தலைநிமிர்ந்து
ஒற்றுமையின் பலமென்ற பேயரெடுத்து
ஒன்று பட்டு உருமாற்றிய 
பெருமை கொண்ட சமுகம் நாம் 
புகள் மங்கி புழுதி படிகிறதின்று 

எம் சமுகத்தின் நிலைகண்டு
அழுகின்ற உள்ளங்களுக்கு
ஆறுதல்சொல்ல நாதியில்லை
செல்லும் வழிதேடியலைகிறாரகள்
கொண்டு சேர்க்க யாருமில்லையின்று 

இந்த நிலைதொடர்ந்திட்டால் 
எம் சமுகநிலை என்னவாகும் 
தோல்விகள் எமக்காகி 
அடிமைகளும் நாமாகி 
எதிர்காலம் இருளாகுமே 
சிந்திக்க மாட்டீர்களாயின்று 

அரங்கேறும் அசிங்களின் மத்தியில் 
அசையாத வீற்றிருப்புடன் 
பதவிக்கு அடிமைப்பட்டு 
பரிதாபம் உனக்கேன் தலைவா 
ஒற்றுமைப்படுத்த வழிசொல்வாயாயின்று 

நீ காட்டியது வேதமென்று 
கண்ணடைத்துக் காத்திருந்தோம் 
இன்னும் உன் மொழியில் கேட்க 
எதிர்பார்த்திருக்கிறோம் 
நிரூபணமுண்டா உன்னிடம் 
நாளைபற்றிய கவலையுடன் 
இன்னும் தொடர்கிறோமின்று 

கடந்துவிட்ட எங்கள் ஆயுள் 
வெறும் போராளியாய்த்தான். 
கண்ணீர் சிந்துகிறது 
வேண்டிநின்ற ஒற்றுமை கலைத்து 
சீண்டியெங்களைச் சிதறடித்து 
வெறுங்கையுடன் மரணிக்கச்செய்திடாதீர்கள்......

பெருமானார் காட்டிய வழியில் 
பெருவெள்ளமாய் ஒன்றுதிரள
ஆட்சியானாலும் அவமானங்களானாலும் 
ஆசைகளானாலும் சொகுசுகளானாலும் 
அனைத்தையும் திறந்து 
சமுக நலம் என்று மட்டும் நோக்கி 
அல்லாஹ்வுக்காய் ஒன்று படுங்கள் 

சலித்துப்போன மனங்கள் - இன்று 
உங்கள் சாகசங்களை ஏற்க மறுக்கிறது 
பிழைகளைத் தூக்கிவைத்துவிட்டு 
சரிகளை மட்டும் கருதி 
கோசங்களாய் வைக்கப்படுகிறது 
செவிடர்களாய் உறங்காதீர்கள் 
நாளைய வெற்றிக்காய் 
இன்றே விழித்தெழுங்கள் 
அன்றேல் வீழ்வது நிச்சயமாகிவிடும் 

Tuesday, February 28, 2017

உன் வழிமாற்று


ஆற்றாமை உன்னை ஆட்சிசெய்கிறது 
ஆற்றலுள்ளவன் அடிமைப்படுத்துகிறான் 
தேற்றவனாய்த் துவண்டு வீழ்கிறாய் 
தோல்விகளோடெதற்குத் தொடர்கிறாய் 

உன் துணிவிலும் பொறுமையிலும் 
உச்சம் தொட்டவன் - எச்சமேனும் 
உனக்காய் விட்டுவைக்கவில்லை 
அச்சமின்றி விலகிடு வெல்வதற்காய்....

உன்னாலும் முடியுமென்று நம்பி
முனைந்து நீ முன்னேறிக் காட்டு 
முழு உலகமும் உன் காலடியில் 
உனக்காகவும் ஒருநாள் தவமிருக்கும் 

கண்ணியத்தையுன் நேர்மையிலாக்கிடு 
தற்பெருமையகற்றி தனக்கெனவழியமைத்திடு  
கைகொடுத்தோருக்குக் கைகொடுத்துநடந்திடு 
உன்பாதையும் வெற்றிப் பாதையாகிடும் 

Monday, February 20, 2017

சந்தோசப் பூங்காற்றே....!


என் வாழ்வெனும் நந்தவனத்தில்
மகிழ்வெனும் பூந்தோட்டமாய்
மலர்ந்தென்றும் மாறாதிரு
சந்தோசப் பூங்காற்றே.....!

சிற்றின்பங்களும் சிகரங்களாகி
சிதைந்திடாத சொந்தங்களோடு
குறுகிய என் வாழ்நாளைக்
கடத்திட நீ வகைசெய்திடு.....

தேடல்களின் சோர்வுகளுக்கு
இணைவுகளின்  முடிவுதந்து
துன்பங்களைத் தொலைத்ததொரு
திடமான வாழ்வு கொடு....

தோழ்மீது விளையாடும் குழந்தையும்
துணையோடு விளையாடும் இணையையும்
பிரிந்தென்ன இன்பமுண்டு இவ்வுலகில்
சேர்ந்திருந்து மகிழ்ந்திடச்செய்திடு

சுற்றத்துச் சூழலின்
சுமையும் இங்கு கனக்கிறது
சுட்டெரிக்கும் சுடராய்
மனமும் இங்கு கொதிக்கிறது.
சுகந்தரும் ஆற்றலுண்டு உன்னிடமே....

சந்தோசம் மட்டும் சுவாசித்திடும்
சந்தர்ப்பங்களை உருவாக்கிட
துன்பங்களைத் துடைத்தெறியும்
சூறாவளியாய் மாறி - வசந்த
வாழ்வொன்று ஏற்றிவிடுவாயா.....??

Sunday, February 12, 2017

மாற்றம் நோக்கி ஒன்று படுவோம்..........

அஸ்ஸலாமு அலைக்கும் எனதன்புச்  சகோதரங்களே.....

எம் சமுகத்தவர்களின் நிலைகண்டு வெட்கித்தவனாக சமகால நிகழ்வுகளின் அடிப்படையில் விழைந்திருக்கின்ற வெகுமானங்கிளின் அசிங்கங்களை துடைத்தெறிந்திட வக்கத்தவனாக வெம்பி அழுகின்ற மனதுடன் ஆதங்கத்தினை அனைவரின் முன் நிறுத்திட விளைகிறேன். 

பல்லாயிரம் கேள்விகளடங்கிய எம் சமுகத்தின் எதிர்காலம் என்னவாக அமையப்போகின்றது என்ற பயம் அனைத்து சமுகப்பற்றாளர்களையும் தொற்றிக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் விடைகளை எங்கு தேடுவது என்ற பொறுப்புகளோடு கைசேதப்பட்டவர்களாக அவஷ்தைப்படுகின்ற நிலையினைக் காண்கிறோம் 

உணர்வுகளால் உருவாக்கப்பட்ட எம் சமுகத்திற்கான கட்சியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உச்சம் தொட்டு உன்னத நிலையினை அடைந்த முஸ்லிம் காங்கிரஸ் என்னும் பாரிய சக்தியை அழித்திடவும் அசைத்திடவும் பல்வேறு கோணங்களில் முயற்சித்தவர்கள் முட்டி மோதி மூக்குடைந்து வேறு வழியின்றி தலைவரை நோக்கி வசைபாடவும் வம்பிழுக்கவும் ஆரம்பித்து இன்று மிகக் கீழ்த்தரமான நிலையினை அடைந்திருக்கிறார்கள் பக்கம்பக்கமாக எழுதவும் ஆரம்பித்துவிட்டார்கள்
இதன் முடிவும் இறுதி அத்தியாயமும் அவர்கள் செல்ல இருக்கும்  ஈருலக நரகலோகம் என்பதை மறந்தவர்களாக இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து செயல்படுகிறார்கள் என்பது மிக வேதனையான விடயம் 

ஒன்று மட்டும் நிச்சயம் எம் முஸ்லிம் காங்கிரஸ் என்பது மறைந்த எம் பெருந்தலைவர் இட்ட அத்திவாரம் அவர் செய்ததெல்லாம் மக்களின் உணர்வுகளை சமுகப்பற்றாக்கி குருதிகளில் ஓடச்செய்திருக்கிறார் அவர் மரணித்தும் வாழும் இந்தக் கட்சி யார் இருந்தாலும் மறைந்தாலும் எம் சமுகத்திற்காய் ஓங்கி நிற்கும் என்பது ஒவ்வொரு உணர்வாளனும் ஏந்தி நிற்கின்ற வேதவாக்கியம் அற்ப சொற்ப  இலாபங்களுக்காய் படோபகார வாழ்வுக்காய் சமுகத்தை விற்பவர்களால் இதனை அழித்துவிட முடியாது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் 

தற்போதய தலைமை மீதான காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் மேலோங்கி அவர் மீது சேறு பூசல்கள் தசாப்தங்களாக நடந்து வருகிறது தற்காலத்தில் சமுக வலையத்தளங்கள் அதிகரித்த நிலையில் தடியெடுத்தவர்களெல்லாம் வேட்டைக்கார்கள் என்ற நிலை உருவாகி ஆளாளுக்கு அவரவர்களின் பாணியில் பல்வேறு அசிங்கங்களை அரங்கேற்றிய வண்ணமிருக்கிறார்கள் இவர்களால் சொல்லப்படுகின்ற குற்றங்களை அவர்  செய்தாரா இல்லையா என்று ஆராயுமுன் ஒரு சமுகத்தின் பெரும்பாலானவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவரைத்  தூற்றுவதன் மூலம் அந்த சமுகத்தையே அவமதிக்கிறோம் என்ற குற்ற உணர்வற்ற எம் சமுகத்தவர்களின்  மத்தியில் வாழ்கிறோமென்று வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது எம் மார்க்கத்தின் குற்றவியலின் சட்டதிட்டங்களைத் தாண்டிய இவர்களின் செயல்பாடுகளின் நோக்கம்தான் என்ன?? இதனால் சாதிக்கத் துணிவது என்ன? எம் சமுகத்தின் ஒழுக்கச் சீர்கேடு அல்லாது வேறென்ன ஒவ்வொருத்தரின் மானத்தினையும் பாதுகாக்கும் பொறுப்பு மற்றவர்களின் கையில் ஒப்படைக்கட்டிருக்கிறது 
சிந்தித்து செயல்படுங்கள்  சகோதரர்களே 

மாற்றம் வேண்டுமென்றால் அது எவ்வாறான மாற்றம் என்பதை முதலில் உணருங்கள். ஒன்றுபட்டால் சாதிக்க முடியாதவை எதுவுமில்லை அடிப்படையில் நாம் ஒற்றுமைப்பட்டவர்களாக மாறவேண்டும். அனைவருக்கும் தலைமைப்பதவி வேண்டும், அனைவரும் ஆட்சியாளர்களாக மாறவேண்டும். அப்போதுதான் அனைத்துவித சுகபோகங்களையும் அனுபவிக்கலாம் என்ற தோரணையில் பிரிந்து நிற்பதை விட்டும் ஒன்று பட வேண்டும்.  நாம் ஒரே சமுகம் ஒரே கொள்கையில் வாழ்பவர்கள் என்பதை முதலில் செயல்மூலம் உறுதி செய்யவேண்டும். ஏதாவது ஒரு முஸ்லிம் கட்சியாக மாறவேண்டும். அதன்பின்னர்தான் எமக்கான தலைமையை தீர்மானிக்கலாம் எதிர்கால சந்ததிக்கான இருப்புகளை வரைந்தெடுக்கலாம். சமகாலத்தில்  
ஒற்றுமை நோக்கிய எழுத்தாளர்களையோ அரசியல் வாதிகளையோ காண முடியாதுள்ளது  அதை முதலில்  அடையாங்காணுங்கள்.  அதன்பால் அனைவரும் அணிதிரளுங்கள்.  இது நடந்தேறுமானால் எமது நீதி மன்றில்   முன்வைக்கப்படுகின்ற  குற்றங்களுக்கு தீர்வினை நாமே வழங்கிட ஆவணை செய்திடலாம் இவ்வாறான சிந்தனைகளுடன் எழுதுங்கள்  முன்வாருங்கள் சகோதரர்களே.....


இது வரை காலமும் வெறும் அடிப்படை உணர்வாளனாக மாத்திரம் பயணிக்கின்ற என்னைப்போன்ற பல்லாயிரம் உறவுகளின் வாயிலாக மன்றாடிக்கேட்கின்றேன் தயவு செய்து அசிங்கங்களை அரங்கேற்றாதீர்கள் எம் பல்லை மற்றவர்களுக்கு முகரக்கொடுக்காதீர்கள் துப்பரவு செய்யும் பொறுப்பு எம்மிடம் கொடுக்கபட்டிருக்கிறது அதற்கான வழி இதுவல்ல தயவு செய்து நிறுத்துங்கள் 

இந்த எழுத்தின் வாயிலாக எவர் மனதையும் புண்படுத்த நான்  நாடவில்லை உண்மையான சமுகப் பற்றை நோக்கமாக்க கருதுதினேன்  மிகவும் வேதனைப்படுகிறோம் பல்வேறு விதமான அபாண்டமான   எழுத்துகளைக்கண்டு மறுப்பெழுத நாடி தவிர்ந்திருக்கிறோம் காரணம் அவைகள் விவாதங்காளானால் கூத்தாடிகளுக்கு குதூகலமாகிவிடும் எமக்குள் அது வேண்டாம்.   ஆதாரம் அணுமானம் எதுவாக இருந்தாலும் இறைவனின் சன்னிதானத்தில் அவர்களும் நாமும் நாளை விசாரிக்கப்பட இருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்  அற்பான இந்த வாழ்நாளில் நாம் சாத்தித்தும் தேடிக்கொண்டதும் மறுமைக்கான நற்கருமங்களாக மட்டும் அமையட்டும்  தயவு செய்து சிந்தியுங்கள் 

மிக்க நன்றி சகோதரங்களே.........

Monday, February 6, 2017

ஆண்மையின் தாய்மை

இன்பத்தின் மிச்சமொன்று  
தாய்மைக்கு வித்திட்டதென்றுணரந்து 
ஈண்றவள்போல் இறுமாப்புடன்  
பிறந்த பயனென்றுனர்வான் 

அகமகிழ்வின் ஆரவாரத்தில் 
அன்னைபோல் அவளைக்காக்க
அல்லும் பகலும் அரவணைத்து 
அன்பின்குறை அகற்றி நிற்பான் 


எடுத்த வாந்தியைக் கையிலேந்தி 
மயக்கமென்றவளை மார்பில் சாய்த்து
மென்மையாய் மெத்தையிட்டு 
மிதமிஞ்சும் சுகங்கள் அளித்திடுவான்   

மஞ்சலரைத்துத் தண்ணியிறைத்து 
காரக் குழம்புடன் கனிவாய் ஊட்டி 
தாய்க்கும் சேய்க்குமென முத்தமாலை 
தினமும் மொத்தமாய்ச் சூடிடுவான்  

ஆறுமாதம் கழிந்தபோது 
மாற்றங்களில் மகிழ்ந்திருந்தாலும் 
அவதியுறும் நிலைகள்கண்டு 
அழுது தொழுதிடுவான் (இறைவனை) 

அறிவு சார் உரைகளும் 
அழகு சார் பேணுதல்களென
குழந்தைக்கென்றொரு அத்தியாயம் 
திறப்பது கண்டு மகிழ்ந்திடுவான்  

பிரசவ வேதனையில் 
பிரசவிப்பான் தனை மறந்து 
இருவரும் நலமெனக் கண்டு 
ஒரு மனதாய்க் கையிலேந்திடுவான் 

பெண் காணும் வலியை மிஞ்சிடுமளவு 
தான் கண்ட வலியகன்ற உணர்வுடன் 
தற்பெருமையும் அவன்கொண்டு  
ஈந்தளித்து மகிழ்ந்திடுவான் 

Saturday, February 4, 2017

அக்கரைச் சீமையில்


அக்கரைச் சீமையில 
நானிங்கு உண்ணலடி 
உனக்கங்க ஊட்டிவிட 
உள்ளதெல்லாம் அனுப்பினேன்டி

ஊணுறக்கமில்லயடி
உளண்று நானும் திரியிறேன்டி 
உற்றார் சொப்பனத்திற்கு  
ஒத்தயில கழியிறேன்டி 

நாலு செவத்துக்குள்ள 
நாசமாப் போகுதெடி 
நீயுமங்க தனிச்சிருந்து 
நிம்மதிய தேடுறியா....

மனிசனயிங்கு காணலடி 
மாமிச உண்ணிகளெடி 
மாடாய்த்தான் மேய்கிறான்டி 
மதிகெட்ட ஜென்மங்களெடி 

மானத்தயும் வித்துட்டண்டி 
மனன் நெந்து அழுகிறன்டி 
உயிராச்சும் மிஞ்சிஞ்சென்டா
உனக்காக வந்திடுவென்.

காசிக்கி கப்பலேறி வந்திட்டன் 
காசாச்சுமிருக்கா நமக்கிட்ட
வயசிதான் கடந்திடுச்சி 
வாலிபமும் தீந்திடுச்சி 

இக்கரையில வந்ததால 
எம்கரையில விட்டதெல்லாம் 
வீணாகிப் போயிட்டுது 
தலயெழுத்தாக்கு மென்டு 
தலயில அடிச்சிக்கிறன்டி 

படச்சவன தொழுகிறன்டி 
பவமெம்மள கரைசேக்க 
பத்திரமா இருடி புள்ள 
பறந்து நானும் வந்திருவன் 


Note : நிலாமுற்றம் குழுமத்தின் தலைப்புக்காக எழுதியது 

சுமையான சுதந்திரம்.......சுகமான சுதந்திரம் சுமைகளகற்றும்
சுமையான சுதந்திரம் சுகங்களகற்றும்
இலங்கையில் இன்று அன்நாள்
சுமையென்பதா சுகமென்பதா.....சொல்

தினந்தினம்  நாம் காணும்
மதவாதிகளின் வெறுப்புணர்வில்
சுட்டெரிக்கும் சுடு சொற்களால்
சுதந்திர இலங்கை எரிகிறது

அத்துமீறும் அராஜக ஆக்கிரமிப்பில்
அவதியுறும் இலங்கைப்பிரஜையின்
மறுக்கப்படும் உரிமைகண்டு
சுதந்திர இலங்கை அவதியுறுகிறது

ஒத்துமையற்ற சமுகங்கள்
ஓலமிடும் அரசியலென
ஒவ்வாமை நிகழ்வுகளென என்னாளும்
சுதந்திர இலங்கை நொந்தழுகிறது....

சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளும்
அக்கறையற்ற ஆட்சியாளர்களுமென
மோதல்களின் விழைவுகளால் - செய்வதறியாத
சுதந்திர இலங்கை  தத்தளிக்கிறது

அனைவரும் ஒன்றுபட்ட ஒரே நாட்டில்
அனைத்திலும் சுதந்திரம் கணும் மக்களுடன்
அன்றாடம் மகிழ்வுறும் நாட்களுக்களுக்காய்
எம் சுதந்திர இலங்கை ஏங்குகிறது மக்களே....

Tuesday, January 24, 2017

இன்று என் தலைவனில்லை சென்றுவா நிலா...உன் பௌர்ணமி முகங்கண்டு 
என் மணாளனின் சுகங்கொண்டேன் 
திகட்டாத தித்திப்பில் திளைத்திருந்து 
தினந்தினம் இன்ப மழை கண்டிருந்தோம் 

உன் ஒளி விழாவில் 
என் மடி தலைவைத்துக் குழைந்து 
அவனளித்த ஸ்பரிசத்தில் 
மெய்மறந்த தருணமிருந்தது 

அவன்  விரல்கோதித் தலைநீவி
என் வட்டமுகம் சொட்டச்சொட்ட
முத்தச் சுகங்களை முழுதாய்க்காண 
உடனிருந்த நிலாவே - இன்று
தனிமையில் அல்லவா அழுகிறேன் 

பிரிவின் துயர் தந்து - 
பிணியின் துணைதந்து 
சென்றுவிட்டான் வெகுதூரம் 
அவனின்றிய உன்னால் 
எனக்கேது சுகமுண்டு நிலாவே....

நீ சென்றாவது சொல் 
என் நிலையின் அவலத்தை 
என் தலைவனோடு வா 
சேர்ந்து நாம் மகிழ்ந்திடலாம் 

தமிழா தங்கத் தமிழா.....வதை செய்வதைக் கண்டு 
பதைக்கிறது உள்ளம் - என் 
சதைகளும் துடிக்கிறது 
சரிசெய்திடத் தோன்றுகிறது...

அகிம்சை வழிசெய்து - நீ
உரிமை வேண்டுமென்றாய் 
அரக்க குணம்கொண்டு - உன் 
உயிரை பறிக்கிறார்களே.... 

உன் மீது  இன்று விழுந்த அடிகளெல்லாம்  
நாளைய சரித்திரத்தின் படிகளாகட்டும் 
திரண்டெளு என்தமிழனே - இன்றே 
வெருண்டெளு என்இளைஞனே......

அவமானங்களின் அவலங்களும் 
அடிகளின் தழும்புகளும் 
ஆறியவுடன் அடங்கிடாதே...
அறிவிலிகளின் ஆட்சியதை 
அடியோடொழித்திடப் புறப்படு.....

அம்மாவென்ற சிம்மாசனத்தை வீழ்த்தி
அத்துமீறி அரங்கில் வீற்றிருக்கும் 
அசிங்கங்களைத் துடைத்திட 
ஒற்றுமை என்னும் ஆயுதமெடு - அவர்களை  
அடக்கும் வரைப் போராடு.....

வாலிபத்தின் வீரியத்தை 
ஆட்சியமைக்க வித்தாக்கு 
மேதைகளின் வளிகாட்டலில் 
மூடர்களை ஒழித்துக்கட்டி
வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பு.....

உன்னை அடிமையாக்கிய 
அருகதையற்ற ஆட்சியாளனை 
உன் புத்திக்கூர்மையில் வென்று 
உன்  சந்ததிக்கொரு வாழ்வுதரப் பாடுபடு 

தமிழனாயப் பிறந்ததைத்தவிர 
குற்றமென்ன நீ செய்தாய் 
சுத்தமொன்று செய்துவிட 
சந்தர்ப்பமும்  அவனளித்தான் 
சலனமின்றிக் காய்நகர்த்து....

ஊடகச் சக்தி உண்டு 
உணர்வுகளின் சங்கமமுண்டு 
மொத்தமாய்த் தமிழகமும் 
உன் காலடியில் 
திரண்டுவிடக் காத்திருக்கிறது 
இனமத பேதமின்றி 
மனிதம் என்ற எழுச்சிகண்டு 
மகிழும் நாளையை உருவாக்கிடு தமிழா....
என் தமிழா தங்கத் தமிழா......

Monday, January 9, 2017

ஆயுதம் தொலைத்தோம்


விழிகளில் முட்டும் கண்ணீருக்கு
விடைகள் கிட்டாத கேள்விகளுடன்
அரசியல் சாணக்கியங்களுடனான
அனாதைகளாய் எம் சமுகம்

அரசுகள் மாறிமாறி அரங்கேற்றும்
நாடகங்களில் ஒரே நடிகர்களானதில்
புளித்துப்போன வேசங்களைக் கண்டு
புளுங்கி நிற்கும் ரசிகர் பட்டாளங்கள்

இன்று நாளை விடிவு என்று - என்றுமே
இருளை மாத்திரங் கண்டு
இடிந்து போன இதயங்கள்
திசையறியாப் படகுகளாய் தத்தளிக்கிறது

கேட்ட உரைகளை மீண்டும் கேட்டு
பச்சோந்திகளின் பசப்பில் மயங்கி
தன் பாலகனின் எதிர்காலத்தையும்  மறந்த
தத்துணிவின்றிய கோழைகளாய் நாம்

எம் சமுகத்தின் காவலனான இளைஞன்
பேஸ்புக்கில் அரசியல் செய்கிறான்
சிந்தனைகளைச் சிதறச்செய்து
மந்தைகளாய் வலம் வருகிறான்

எழுவது எங்கிருந்தென்று தெரியாது
விழுந்து கிடக்கும் எம் சமுகத்தை
தூக்கிவிடப் புறப்படுங்கள்.......
தொலைந்த எம் ஆயுதம் எதுவென்று
தேடியெடுத்திட முனைந்திடுங்கள் 

கண்துடைப்புகளுக்குள் கட்டுண்டு
கண்கசக்கிக் காலில் வீழாது
கண்ணியத்துடன் தலைநிமிந்து வாழ
வழி செய்திடப் பாடுபடுங்கள் 

Related Posts Plugin for WordPress, Blogger...