இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, February 20, 2017

சந்தோசப் பூங்காற்றே....!


என் வாழ்வெனும் நந்தவனத்தில்
மகிழ்வெனும் பூந்தோட்டமாய்
மலர்ந்தென்றும் மாறாதிரு
சந்தோசப் பூங்காற்றே.....!

சிற்றின்பங்களும் சிகரங்களாகி
சிதைந்திடாத சொந்தங்களோடு
குறுகிய என் வாழ்நாளைக்
கடத்திட நீ வகைசெய்திடு.....

தேடல்களின் சோர்வுகளுக்கு
இணைவுகளின்  முடிவுதந்து
துன்பங்களைத் தொலைத்ததொரு
திடமான வாழ்வு கொடு....

தோழ்மீது விளையாடும் குழந்தையும்
துணையோடு விளையாடும் இணையையும்
பிரிந்தென்ன இன்பமுண்டு இவ்வுலகில்
சேர்ந்திருந்து மகிழ்ந்திடச்செய்திடு

சுற்றத்துச் சூழலின்
சுமையும் இங்கு கனக்கிறது
சுட்டெரிக்கும் சுடராய்
மனமும் இங்கு கொதிக்கிறது.
சுகந்தரும் ஆற்றலுண்டு உன்னிடமே....

சந்தோசம் மட்டும் சுவாசித்திடும்
சந்தர்ப்பங்களை உருவாக்கிட
துன்பங்களைத் துடைத்தெறியும்
சூறாவளியாய் மாறி - வசந்த
வாழ்வொன்று ஏற்றிவிடுவாயா.....??

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...