இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, April 27, 2011

அன்பை விற்றிடா தாய்மை


ஏனம்மா அழுகின்றாய் 
எதற்காக நோகின்றாய்
ஈன்ற குழந்தையினை 
ஏனிப்படி பிரித்தார்களென்றா??

பத்துமாதம் பத்திரமாய்க்காத்து 
பகலிரவாய் பத்தியமும் இருந்து 
ஆசையாய் ஈன்றவனை 
ஆசைதீர முகருமுன்  
ஆழிப்பேரலையாய் வந்து 
அள்ளிச்சென்றனரென்றா??
(அழுகின்றாய்)

Saturday, April 23, 2011

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை 
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு 
தலை சாய்கிறது மனம்


தவறிழைக்காத மனிதமுண்டோ 
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??


தவறென்று மனதுக்குப் புரிந்திடாத 
காதல்வலையில் சிக்கியதால் 
எதிர்ப்பலைகளில் தோற்று  
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

Wednesday, April 20, 2011

ஊனக் காதல்...


உவமானங்கள் தேடியலைந்தேன் 
என் காதலையும் உணர்த்திட 
உனைக்கண்ட மாத்திரத்தில் 
மொழிகள் மறந்த ஊமையாகிறேன் 

காதுகளுக்குக் கேட்காத ஒலிகளோடு 
உன்வார்த்தைகளை மட்டும் 
இனிமையான இசைகளாயொப்பிட்டு 
தினமும் ஒலிக்கக் கேட்கிறேன் 

கண்களைத் திறக்க மறந்து 
இருள்மயமான உலகமாகி 
பசுமையான கற்பனைகள் மாத்திரம் 
இன்பமயமான வாழ்கையாகிறது 

Monday, April 18, 2011

வாடும் மலரொன்று....

வாடிய மலரொன்றின் 
வதனங்களில் மிளிர்கிறது சோகம் 
வண்ணமலாராய் சூடமறந்த 
மனிதங்களினால் அவலம் 

பார்வையில் பலதேடல்களுடன்
பார்வையிழந்த மனிதங்கள் மத்தியில் 
தானும்வாழ்ந்திட மலர்விற்பனை 
மனமுள்ள ஒருவராவது 
மகிழ்விக்க மாட்டாராவென்று 

விற்பனையிலும் ஒரு செய்தியறிவிக்க
கைகளில் ரோஜாமலரேந்தி...
உலக முட்களின் நடுவில் 
நானும் ஒருமலரானேனென்று 

அன்று பறிக்கப்பட்ட மலரொன்று 
வாடிநிற்கிறது இங்கு 
இன்று பறிக்கப்பட்ட மலரையாவது 
வாடுவதற்குள் வாங்குவீர்களா???

Tuesday, April 12, 2011

உரிமையுடன் உன்னிடம்......

என்னிதயம் கவர்ந்த
எளிமையானவளே -  உன் 
இதயம் நிறைந்தவனின் 
உரிமையான வினவல்கள் 

அன்பின் திருவுருவமாக்கி 
அன்னையின் சிம்மாசனத்தில் 
அமரச்செய்து அழகுபார்த்ததில் 
உன் பாசம் முழுதும் எனைச்சேருமா?

அழகின் அலங்காரமே - உன் 
நடையுடை நளினங்களும் 
கவர்ந்திழுக்கும் வசீகரமும் 
எனக்கே எனக்காகுமா??

Saturday, April 9, 2011

சமுகத்திற்கு சவால்....வாழ்வுதராத உலகொன்றில் 
வீதியில் வீசி எறியப்பட்டோம் 
வீரென்று அழுவதை நிறுத்து 
வலிமை உண்டென்று வாழ்ந்துகாட்டு 

புத்தகம் கைபிடித்துப் 
புத்தாடை அணிவித்து 
பள்ளி செல்லாக்குழந்தைகளாய் 
பசிதீர்க்கக் கல்லுடைக்கிறோம் 

யாசகம் செய்யது 
யார் தயவும் நாடாது 
சமுகத்திற்கே சவால்விடுத்து 
உன்பசியும் தீர்த்திடுவேன் 

Wednesday, April 6, 2011

போர்க்களத்தில் ஒர்காதல்


போர்க்களஉக்கிரமம்...
இரு மனங்களின் சம்பாசனை 
என்னவன் முன்னேறுகிறான் 
அவனைக்காக்கும் கலசமாக 
நான் மாற வேண்டும் (பெண்)

ஐயோ..... என்னவளின் 
ஆக்ரோசமா இது...
அரக்கர்களை வீழ்த்துகிறாளே 
என்னை வலம்வந்து 
மண்ணைக் காக்கிறாளே..
அவளை நான் காக்க வேண்டும் (ஆண்)

தனலை உருவாக்கி 
கல்லாய்க் காண்பித்தென்னபயன் 
மனம் தோற்றதுவே காதலிடம் 
உயிர்காத்தாள் உறவென்று 
உருவெடுத்தது காதல் 

வகுக்கப்பட்ட வரையறைக்குள் 
கட்டுண்ட காதலும் 
இதயங்களோடு மட்டும் சங்கமமானது 
இணைந்திடாத உடல்கள் இரண்டும் 
சேர்ந்தே வீழ்ந்தது மண்ணில் 

Monday, April 4, 2011

செழுமையான பாதைவாழ்க்கைப் பயணத்திற்கு 
நேரிய பாதையைத்தேர்ந்தெடு 
நண்மைகள் செழிமைகளாகும் 
உன் கொடைகள்(தர்மம்) முகடுகளாகும் 

உன்பாதை சீரியதானதில் 
சுட்டெரிக்கும் சூரியனாய் 
தீங்குகள் எதிர்ப்பட்ட போதும் 
தர்மங்கள்தான் நிழல்களாய்க் காக்கும் 

பச்சைப் பசேலென்ற பாதையாவதில் 
நிம்மதிதான் நிலைத்த மரங்களாகும் 
கிழைகளும் இலைகளுமாய் 
உறவுகளோடென்றும் மகிழ்ந்திடுவாய் 

Saturday, April 2, 2011

பாசத்தின் தேவையுனக்கு.....

முழுநிலவாய் மலர்ந்து 
வாழ்க்கையின் சந்தோசத்திற்கு 
வித்திட்ட முத்தாரமே...
உன்விழிகளின் தேடலுக்கு 
விடையும் நான் என்கிறாய் 

வானலையின் உரையாடலை 
எத்தனைநாள் ஜீரணிப்பாய் 
ஏக்கத்தின் உச்சத்திலா ???
முத்தமும் நீ கேட்டாய் - ஆதலினால் 
என் கண்களும் குளமானதே....

நித்தமும் என்வருகையினை 
எதிர்பார்த்துக் களைத்ததினால் 
கொஞ்சும் மொழிகளை அம்புகளாக்கி 
நெஞ்சுருக வைக்கிறாய் 
வாழ்க்கை வெறுப்பாகிறதே......

பாசத்தின் தேவையுனக்கு 
நீயறியாத உலக நடப்பு 
உன்பார்வை நியாயமுனக்கு 
என்நிலைமை வாதமெனக்கு 
தோற்கிறோம் தினம்தினமே.....

எப்போதும் திரும்பிடாத 
இழப்புகளின் விடியலுக்காய் 
ஏங்கும் இதயங்களுக்கு 
சாந்தி வேண்டும் 
சரித்திரங்களை மாற்றிட....... 
Related Posts Plugin for WordPress, Blogger...