இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, May 31, 2010

ஆபாசமான ஆபரணம்
தங்கம் என்ற குணவதி
நகை என்ற சந்தோசம்
ஒரு செர வழங்கும
பொன்னான உன்னால்
பெண்ணுக்குத்தான்
எத்தனை சந்தோசம்

காக்காப்பிடிக்கும்
கணவர் கூட்டமும்
காதலில் மயங்கும்
காளையர் கூட்டமும்
உம்மைக் கொண்டு
உள்ளமும் கவர்கின்றனர்

சொத்தென்று உம்மை
பொத்துகின்ற செம்மல்
சீர்கொடுத்தழித்து
சிம்மாசனம் ஏற்றுகின்றனர்

குவியலிடும் செல்வந்தர்
இறை கட்டளை மறந்து
ஏழையின் பங்கு
ஈகையினை மறுத்து
பேரழிவு தேட்டம்
உன்கவர்ச்சியில்தான்
ஆபாசமான ஆபரணமே
ரகசியமாய் நீயும்
எடுத்துரை முதளாழிக்கு....


Saturday, May 29, 2010

வேண்டாம் அனாதைச் சமுதாயம்

ஆதரவு மறுத்து
பெற்றோர் இழந்ததில்
வீதி என்றும் வீடு என்றும்
வயிற்றுக்கும் வாழ்வுக்கும்
கையேந்தும் துர்ப்பாக்கிய நிலை

நாடிய உறவுகள்
நாளுக்கு நாள் விரட்ட
பதைத்த செஞ்சத்துடன்
பாதை வீடாகி
உயிர் வாழ்வதற்காய்
உணவுதேடி
தெருத்தெருவாய் அலய விட்டு
கண்மூடி காதடைத்து
வளர்த்தெடுக்கும் சமுதாயம்

அனாதை என்றுரைத்து
அனாதரவாக்கி
பிஞ்சு மனதை
பாறாங்கல்லாக்கி
அன்பை மறுத்த மனம்
ஏக்கம் கொண்டு
தவிப்பு வாழ்வாக
வெறுப்பை விழைவிக்கிறது

யார் பெற்றாலும்
குழந்தை ஒரு செல்வம்தான்
வழப்படுத்த வாரீர்
சிந்தையுள்ள மானிடமே
வேண்டாம் இந்த
அனாதைச் சமுதாயம்

Thursday, May 27, 2010

ஏலேலோ...மீனவம்
கடல் அலை எதிர்த்து
துடுப்பிட்டு வலைசுமந்து
வயிற்றுப்பசி தீர்க்க
ஒட்டுகிறார் தோணி

பார்த்தெதுவும் கண்டிரா
பரந்த சமுத்திரம்
பார் சமூகத்தின்
பசிதீர்க்கும் சமுத்திரம்

ஒரு திசையில் தொடுத்து
மறுதிசையில் முடிக்கின்ற வலையுடன்
அணியணியாய் வகுப்பெடுக்கும்
மீனவனின் பாடலரங்கேற்றம்

வாடா தம்பி வழளஞ்சிழுடா
ஒடியிழு உழுவ மீனுக்கு
பாடியிழு பாரைமீனுக்கு
ஏலேலோ.. ஏலியலோ...

கூட்டியிழு கூடுதல் மீனுக்கு
அண்ணாந்து பார் பாயுது மீனு
அலைகடந்து ஓடுது பார்
வடா தம்பி சேரந்துழுடா
ஏலேலோ.. ஏலியலோ...

முத்து வரிகள் மொழிந்து
எதிர்பார்த்து மணல்மிதித்து
ஒற்றுமையாய் ஒன்றிசைத்து
தினந்தோறும் திகைத்து நின்று
சமுத்திரத்தாயிடம்
கையேந்தும் மீனவன்

இறைவன் வகுக்கும்
இத்தனை உனக்கு
இதுதான் உனக்கு என
கிடைத்ததை பெற்றவனும்
பெருவாழ்வு வாழ்கிறான்

Tuesday, May 25, 2010

உயிரை நிறுத்தச்சொல்கிறாய்

என்னை எழுத வேண்டாம் என்கிறாய்
பெருகிவரும் கவியாற்றுக்கு
அணைகட்ட நினைக்கிறாய்
என் மூச்சை நிறுத்து என்கிறாய்
எதற்காக இத்தனையும்

என் வரிகளுக்கு உயிரானவளே
என் படைப்புக்கு கருவானவளே
என் ஆககங்களை ரசித்தவளே
எதற்காக வெறுக்கிறாய்

உன் கற்பனையில்
நீ கொண்ட சலனமும்
உனக்கே உனக்கு
என்ற மமதையாலும்
என்னை நிறுத்தச் சொல்கிறாய்

உயிராய் கலந்த உன்னை
வெறுக்க மறுக்கும் என்னால்
உதிரமாய் கலந்த வரிகளை
நிறுத்த முடியுமா? கண்ணே!!

உன்னை தொலைத்த பாவியாய்
உயிரை நிறுத்திய பிணமாய்
காணத்துடிக்கிறாயா? என்னைரணத்தில் தொலைந்த வாழ்வு
ஏங்கி ஏங்கி ஏக்கம்கொண்டு
நோக்கி நோக்கி நொந்தழுது
பார்த்துப் பார்த்து பரிதவித்து
பொழுதுகள் மட்டும் விடிந்தது

வருகிறாய் என்று
ஒரு வரிகேட்டதில்
சிலிர்த்த மெய் சில்லென்றானது
அனுபவ வலிகள் மறந்து
தரிசன நிமிடம் கற்பனையானது

என் உள்ளத்தின் கள்வன்
கதிகலங்கச்செய்தவன்
ஸ்பரிச உணர்ச்சிக்கு
உயிர்தந்தணைத்தவன்

உருப்பெற்ற வாழ்விக்கு
உருவம் அமைத்தவன்
வந்தால் மட்டும் போதுமே
என்றெண்ணிய அந்த நிமிடம்

இறைவன் வகுத்த
ரணத்தின் நிகழ்வி்ல்
உன்வாழ்வும் தீர்ந்திட
அத்தனை சோகமும்
மொத்தமாய் மாறி
அழுகை மட்டும் வாழ்வாகி
மறுத்த உணர்வுகளை
இறுக்க நினைக்கிறேன்
சுமையான சோகங்களுடன்

Monday, May 24, 2010

விதவை ......


மறுமணம் மறுத்து
திருமணம் நடந்ததில்
கணவனை இழந்ததால்
சமூகம் இட்டபெயர்

இறைவனின் ஏற்பாட்டில்
நடந்த இன்நிகழ்வை
ஏற்க மறுக்கும் மனிதம்
நையப் புடைக்கும் வார்த்தையிது

பெண் என்ற பூவையரின்
எதிர்பாரா விபத்தில்
வடுவாய் மாறும்
அழியாக் கீறலிது

இளமை தனக்கிருந்தும்
விதவையானவளை
எள்ளி நகையாடாது
இனியவாழ்வளித்தல்
இளமையரின் பொறுப்பன்றோ..

உணர்வுக்கு மதிப்பளித்து
உயரிய வாழ்கையினை
உயிராய் மதித்து நீயும்
விதவை என்ற பெயரை
வேரோடு அழித்துடு தோழா..

Saturday, May 22, 2010

வெயில்..
சூரியன் என்ற ஆதவனே
சூடு என்ற உன்
சுட்டெரிக்கும் முகத்தில்
சினம்தான் எத்தனை
சிற்றின்பமும்
சீர்குலைக்கும் வண்ணம்
சிறு எறும்பும் நடுநடுங்கும் நிலைக்கு
சீறும் உன் நிலை காண
வற்றாத நீரும் வற்றுகிறது

உனை காண மறுத்து
நாள்முழுதும் குளிர்ச்சியறையில்
பதுங்கியிருந்தும்
நிர்பந்த ஒரு நொடியில்
நிலை குலையச்செய்கிறாய்

வெட்ட வெளி வேலையாளி
வெந்து நொந்து
நிழலெதுவும் கிடைக்காதா
நிம்மதியும் கிடைக்காதா
எண்றெண்ணி....
உனை நோகும்
நிலை
ஏன் உனக்கு புரியவில்லை


உலக பயன் உன்னால்
பல இருந்தும்
சுடு வெயில் என்ற
ஒரு செயலில்
முகம் சுளிக்கச்செய்கிறாயே
சினம் குறைந்த வெயில் தந்து
மனங்குளிரச்செய்வாயோ..

பரிதாப விபத்து


உள்ளம் பதைக்கிறது
உணர்வுகள் மறுக்கிறது
கண்கள் குழமாகிறது
காண நிலை தடுமாறுகிறது
மரண அவலம் 170 உயிர்கள்
ஒருநொடியில் ஒருசேரப் பறிபோக
அத்தனை உயிர்களும் சுமந்த
கற்பனைகளும் கனவுகளும் கலைத்து
எதிர்பார்த்த உள்ளங்களுக்கு
சாம்பலை மாத்திரம் கொடுத்த
பரிதாப விபத்தை
நினைக்கவும் மறுக்கிறது
உள்ளம் மட்டுமில்லா
உடலே உருகிறது
சோகக் கண்ணீரில்
சேர்ந்து நாமும் அழுதிடலாம்
சாந்திக்காய் பிரார்த்திப்போம்

Thursday, May 20, 2010

பேனாவின் ஆட்சி


பல வண்ணங்களில்
படினமெடுத்து
பல கலையும்

பார்த்தவன் நீ


புத்தியை தீட்டும்

புத்துணர்ச்சியில்

புதுமை படைத்திட

புகளிடம் தந்தவன் நீ

பிறப்பின் பதிவு முதல்
இறப்பின் பதிவு வரை

அந்தமும் ஆதியும்

ஆக்மும் அழிவும் என

அகிலத்தில் அத்தனையும்

உமது ஆட்சியில்தான்


ஆண்டான் முதல் அடிமை வரை

உன் ஆட்சியில் ஆட்டம் கொள்ள

இவ்வுலகையே வரைந்த

இறைவனின் பேராயுதம் நீ
என் எண்ணக்கருக்களுக்கு
ஆழுமை தந்த அரசனும் நீ

உலக முடிவிலும்

உன்னாட்சி தீரா

பொன்னாட்சி படைத்திடும்

பொற்கொல்லன்

உன்னருமை போற்றும்

பெரு வெள்ளமிது....

முபீஸின் திருமண வாழ்த்து

குணத்தின் சீலன்
பாசத்தில் இமயம்
ஆருயிர் நண்பன் முபீஸே
உம் திருமணத்தை வாழ்த்த
வழி செய்த இறைவனுக்கே
எல்லாப்புகளும்
அல்ஹம்துலில்லாஹ்

இறையடி சேர்ந்த தந்ததையின்
பாசமகனாய்ப் பிறந்து
அருமைத்தாய் ஸீனத்தின்
மனங்குளிர்நத செவ்வல் நீ

உன் மனதை கொள்ளையடித்து
உன்னைக் கிறங்கச்செய்த
அரேபிய தேசத்தில்
அழகாய் மலர்ந்த பதுமை
சாதுவான ஷாஹிதாவை
உன் வாழ்வின் விளக்காய்
ஏற்கத்துணிந்த நீ
ஏற்றம் கொண்டதினால்
மலராய் ஏந்தும் தருணமிது

முழு நிலவாய் 
முகம்காட்டும் பௌர்ணமி போல்
முழு மனிதனாய் மாறுகின்ற
முதல் படியிது
முகம்மது நபி(ஸல்)யின்
முழுமை வாழ்வை
முதன்மையாக்கிடு தோழா

இல்லற வாழ்வில்
இன்பங்கள் பல
இங்கிதமாய்க் கண்டு
இனிய செல்வங்கள்
இளமையில் அடைந்து
ஈருலகிலும் சுவர்க்கம் காண
வாகை அமைத்திடு தோழா...

ஆண்டாண்டு காலம்
ஆருயிர்த் தோழர்களாய்
ஆயுளிறுதி வரை
ஆலம்போற்றும் துணைவர்களாய்
இனிதே வாழ்ந்திடுங்கள் 


உன் உறவுகளாய்
உன்னருகிலமர்ந்து 
உன்னோடு துணைநடந்து
உன்னவளிடம் சேர்த்ததாய்
ஊக்கம் கொண்டு நீயும் 
உறவு கலந்திடு


துரஇருந்தாலும் 
உன் நேசர்களாயிணைந்து 
உளமாற வாழ்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்கவே.....

Tuesday, May 18, 2010

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)


கையில் ஏந்திய
குழந்தையை....

தொட்டில் ஏற்றி
தாலாட்டுப்பாடி...

அக மகிழ்ந்ததில் கண்ட
ஆலாபனை நாட்கள்

என்னருமை மகளே
மனங்குளிர்த்த தளிரே
உன்னை அடைந்த ஆனந்தம்
விண்ணில் மிதந்த பெருமிதம்

உனது மூன்றாவது மாதம்
நான் பிரிந்த நிமிடம்
தீராத கண்ணீர் ஆறாய்
பெருக்கெடுத்த நாளை
நினைத்த நெஞ்சம்
கனக்கிறது மகளே...

இன்று உணர்ந்து
காணத்துடித்து.....
“எப்போது வருவாய்”
எனறு நீயும் கேட்க
துட்கித்த இதயம்
கண்ணீர் வடிக்கிறது

என்னருமை தாயே
உன் எதிர்காலம் சிறக்க
எம்மைப் பிரித்த காலனுடன்
காத்திருக்கிறேன்
பொறுத்திரு நீயும்
பொற்காலம் உருவாகும்

Monday, May 17, 2010

மறதியிலும் மதிக்க வேண்டிய ஆசான்

“அ” முதல் “ஃ” வரை
உன் விரல் பிடித்து
தடம்பதித்து எழுத வைத்த
ஏந்தல் உன் ஆசான்

பொறுமையின் சிகரமாய்
செய்த குறும்புகளை
சீர் செய்து சீராக்கி
உன்னை வளப்படுத்திய
உழவன் உன் ஆசான்

உன் துடினம் கடக்க
பாடசாலை அனுப்பிய
ஈன்ற பெற்றோரை விட
உன்னை ஏந்திப் பெற்றவன்
உன் ஆசான்

உன் துறை எது வென்று
உன்னை பாடங்கற்று
உன்திறமை வெளிக்கொணர
உனக்காக் கற்ற மாணவன்
உன் ஆசான்

உலகம் போற்ற
உன்னை ஆழாக்கி
நலமாய் வாழ
நல்லதே நினைத்து
நன்மை மட்டும்
உனக்காகச் செய்த
நண்பன் உன் ஆசான்

மாணவன் என்ற
மா மனிதனே
மறதியிலும் நீ
மதிக்க வேண்டிய
மனிதன் உன் ஆசான்


அன்னாரை உன் வாழ்நாள்
முழுதும் நலமாய் போற்ற
வாழ்நாள் போதுமா?
நீ வாழு மட்டும்
மதித்து நடந்து
மதிப்பைப் பெற்றிடு
நலமே பெறுவாய்
நன்றி மாணவா....

சிவா என்ற சிற்பி...(வாழ்த்து)

ஈகரை என்ற முத்தமிழை
ஈன்ற எங்கள் செந்தமிழன்
இருந்த இடத்தில்
இருந்த வண்ணம்
எட்டுத்திக்கும் ஏற்றம் கொண்டு
எல்லோர் மனதையும்
கொள்ளை கொண்டான்

சிவா என்ற சிங்கத்தின்
சிந்தையில் உதித்த
சித்திரம் ஈகரையை
சீரிய பாணியில்
சிற்பமாய் செதுக்கிய
சிற்பிகளின் புடைசூழலில்
சிறந்த தலைவனாய்
சிறிதும் கலங்காமல்
சீர்செய்யும் சிற்பியே - உமக்கு
சிறியதோர் வாழ்த்து

ழகிய பொக்கிசம் ஈகரை
ழம் நிறைந்த சமுத்திரம்
ன்பமாய் உருவாக்கிய
கரை ஓடத்திற்கு
றவுப்பாலமமைத்ததில்
க்கம் கொண்ட
மது அருமை உறவுகள்
ற்றம் கொள்கின்றனர்

இத்தனைகாலம்
உழைத்த உன் தனிமைக்கு
உறவுகளின் கூட்டம்
சங்கிலித்தொடர்களாய்
படைகாணும் தருணமிது
ஊக்கம் மட்டும் வழங்கி
ஊர்போற்ற நீ வாழும்
உயரிய வேளையிது

உந்தன் வியர்வை
ஈகரைப்பக்கங்களில்
வியர்த்துக்கிடக்கிறது
சோர்ந்து நீயும் செல்லலாகாது
ஒருவழி அடைத்தால்
வேகம் பல வழி திறக்கும்
அடைத்த ஒருவழிக்காய்
பல வழிமூடலாகாது...

நீர் வாழ்க உன் குலம்சிறக்க
நீர் சிறக்க ஈகரைவாழ்க
ஈகரை சிறக்க உறவுகள்வாழ்க
உறவுகள் சிறக்க ஒற்றுமையாய் வாழ்க
மொத்தம் நீயாகிறாய்
நீர் வாழ்க நலம்பெற வாழ்க

Sunday, May 16, 2010

காதல் பிதற்றல்

கலியுகக் கண்ணா
என் காதல் மன்னா
என் மடி நீ தவள
நித்தமும் நித்திரை மறந்தாய்
நினைத்துப்பார்கிறேன்
நித்திரை மறக்கிறேன்

காதல் மொழி பேசி
கண்ணே என்று நாடி தொட்டு
கன்னம் சிவக்க காதல் முத்தம்
தந்தவன் நீ

வருடிய கூந்தலை
விரல்களால் வகுடெடுத்து
வாரிக்கொடுத்தவன் நீ

திடீர் முத்தம் இடியாய் தந்து
இதழ்கள் சிவக்க
இச்சையாக்கியவன் நீ

அருகில் அமரந்து
உஷ்னம் மூச்சாகி
உரக்க மொழியாமல்
உரம் கொடுத்தவன் நீ

அடைந்த வலிகளை
மென்மையாக்கி
கட்டில் சுகத்திற்காய்
முடிச்சு இட்டவன் நீ

சுகத்துக்கே
சுகம் கொடுத்த
சுந்தரப்புரிசனும் நீ

உன் காதல் லீலைகளை
நீ பிதற்றிய நிமிடங்களை
பித்துப்பிடித்தது போல்
பிரிந்த வினாடிகளில்
நினைத்துப்பார்த்து
நிம்மதி கொள்கிறேன்

Saturday, May 15, 2010

காதலுக்கு எதிரி காதலர்கள்

புரியாத புதிராய்
புதுமை நிகள்வு
காதலில் கனிந்து
ஓருடலானவர்களும்
காதலை எதிர்த்து
காதலுக்கெதிரியாகின்றனர்

பெற்றோர் என்ற
பெருமை கொண்ட பதவி
குழந்தையின் காதலை
குடைந்து குடைந்து பார்க்கிறது

வாலிபனாய் நீ கண்ட இன்பம்
காணத்துடிக்கும் மகனுக்கு
மறுக்கின்ற வக்கிரப்புத்தி
நீர் காதலில் விழுந்து
மறந்து நின்ற பேதங்களை
மகளுக்காய் ஆராய்கின்ற
மந்த நிலை அனியாயம்

வெட்டொண்று துண்டோண்றாய்
வேரோடு அறுத்தெறிய
வேட்கை கொள்வதில்
புதல்வம் அழிந்தாலும்
புத்தி மட்டும் உணர்வதில்லை

காதலர்களை எதிர்த்த
காதலர்களாகி
கண்ணியம் தவறிய
கணவான்களாகி
கடைசியில் கைசேதம்
காண்பதற்கா
காதலை எதுக்குறீர்

நித்தியமற்ற
நிலையில்லா உலகில்
நிர்க்கதி அற்ற வாழ்வுக்காய்
தொடுக்கின்ற காதல் படகை
கரைசேர்த்து விட்டால்
கண்ணியம் பல கோடி

Friday, May 14, 2010

மாறாக்காதலாய் மாற்று


கண்ணே மணியே
கனியே அமுதே
முத்தே மலரே
உயிரே இதயமே
என்றெல்லாம்
கதலில் கனிந்து
பிதற்றிய வரிகளை
முட்டாள் மூதேவி
என்று மனங்கூசாமல்
மொழியும் கோபமாய்
மாறுவதில் காதலாகுமா

காதலின் முடிவு
திருமணமாவதால்
தொடரும் காதலே
உயிரோட்டமாகும்

ஒரிரு குழந்தையில்
வெறுக்கின்ற காதலில்
வெந்த மனங்கள்
இறந்ததாய் மாறிட
பிதற்றிய வரிகள்
மறந்ததை நினைக்குமா

காதலின் முதிர்ச்சி
காலத்தின் முதிர்ச்சியில்
மாறாக்காதலாய்
மாற்றுவதில்
பிதற்றிய காதலுக்கு
உயிர் கொடுத்த காதலாகும்

Thursday, May 13, 2010

பள்ளிக்கூட வாத்தியார்

ஏணியாய் நிமிர்ந்து நின்று
ஏற்றி விட்ட வாத்தியார்

ஏடு புரட்டி

எல்லாமே கற்றிட

ஏற்றம் கொண்டவர்


ஆசான் என்ற

அகிலம் போற்றும்

தத்துவ ஞானி

ஈன்ற தாய் போல்
மாணாக்கரை போற்றகண்டு ..
அகமகிழும் மற்றொரு தாய்


பயிலாளர் முதல்

மன்னர் வரை

வணக்கம் போடும்

உத்தம மனிதர்

உயர்ந்த மனிதர்
என்று
உயரத்தில்
பார்ப்போரெல்லாம்
உயர்த்திட நினைப்பதில்லை

கௌரவம் பதவியாவதால்

இவர் பாடு வறுமையில்தான்

நிலைத்த வருமானத்தில்

நிலை தடுமாறி
நித்தமும் வாழ்கைக்காய்

நித்திரை மறக்கிறார்

பள்ளிக்கூடம் சென்று
பாடங்கள் கற்பித்தும்

வாழ்கைப்பாடத்திற்காய்

வழி தேடி அவதி
வாழ்வாகும்

என் அருமை வாத்தியார் ..

Wednesday, May 12, 2010

கேடு கெட்ட புகைருசிக்கத்தெரிந்த மனிதன்
ரசனை படைத்த கடவுளுக்கு
பாடம் கற்பிக்கிறான்
புகை பிடிப்பது கேடு என
புகைப்பவனும் கூற
அற்புதமாய் புகைத்து
அற்புதம் நிகழ்த்துகிறான்

சாத்தாண்டி மனிதா
சாதனை காண
சரீரத்தை சிதைத்து
சாரீரம் ஆக்கிகுறாய்

கேடுகெட்ட புகையை
கெட்டியாய் பிடித்து
கண்காட்ச்சி காட்டியதில்
கண்ட பயன்தானேது

உன்னைக்கண்ட வாலிபன்
உன்பின்னே தயாராகி
வழிகெட்டு புகைவிட்டு
வெந்தவனும் அழிந்திட
வழிசெய்த பாவியடா நீ

முதுமைக் காதல்...


என் இனியவளே..
எந்தன் நெஞ்சில் நிலைத்தவளே
எப்பொழுதும் கொடுத்ததை
எப்போதாவது கொடுப்பதில்
எத்தனை இன்பமடி

நாம் கண்ட இன்பங்கள்
நம்மருகே கிளைகளாய்
நலம் பெறக்கண்டு
நரம்பு துடிக்கிதடி

சரீரம் வயதடைய
சந்தர்ப்பம் எமை விரட்ட
சத்தமற்ற சந்தோசங்கள்
சலனத்தில் சிக்கிவிட
கட்டுண்ட ஆசைகள்
காதலை நாடுதடி

முதுமை என்பவன்
முதுகிலேறி சவாரி செய்ய
கண்ட இன்பங்களில்
காலத்தை கடத்தலாமா

எத்தனை நாளாய்
முத்தம் ஒன்றுதர
முனைந்தே மறுத்துவிட
முழுமை பெற்றதில்
முழுத்திருப்திதானடி

இன்றே இறந்தாலும்
இருவருமே ஒரு நொடியில்
இறையடி சேர்ந்திட்டால்
இவ்வுலகம் பறைசாற்றும்
இறந்தும் காதலர்களென்று

பணிக்குச் செல்லும் பெண்ணிவள்...


குத்து விளக்காய்
குல விளக்காய்
குடும்ப வாழ்வை
மிளிரச்செய்வதற்காய்
பணி என்ற தீபம்
ஏற்றிய பெண்ணிவள்

அதிகாலை எழுந்து
அறக்கப்பறக்க
கருமங்கள் தீர்த்து
சமையல் சாலையில்
சங்கமமாகி
உண்ட பாதி
குடித்த மீதி என
அவசர வாழ்க்கைக்கு
அடிமையானவள்

ஏறெடுத்துப்பார்ப்போரின்
ஏழனப்பார்வை வென்று
பயனிக்கத்துணிந்து
பயந்த சில்மிசங்களை
வெறுத்த மனதுடன்
அடைந்த காரியாலயத்தில்
அத்தனை இன்னல்கள்

வீட்டின் சிந்தனை
வெகுவாய் பாதிக்க
வேலையின் பதற்றத்தில்
சீரற்ற நெருக்கங்கள்
கடமை முடிந்து
வீடுவந்தவளை
மாப்பிள்ளை வீட்டாரும்
மாய வரிகள் உதிர்திட
அழுத மனதுடன்
அல்லலோ அதிகம்

குடும்ப நலத்தில்
இல்லத்தரசியாய்
இல்லறம் சிறக்க
இன்றே உழைத்து
இயன்ற வரை உதவி
இல்வாழ்வை
இலங்கிடச்செய்வேன்
எனச் சொல்லாமல் சொல்லி
வீறு நடை கொண்டவள்

காத்திருந்த காதல்....


பத்து மாதம் சுமந்து
ஈன்றிடுவாள் அன்னை
பத்து வருடம் காத்திருந்து
ஈன்றாய் என் காதலை
என்னைப்பெற்ற
இரண்டாமவள் நீ

இத்தனை காலம்
காத்திருந்த உன்னை
கண்டிராத பாவி நான்
நீ கொண்ட காதலின்
நம்பிக்கையில் கண்ட
வெற்றியும் நான்

எம் காதலின் அர்தத்தில்
என்றுமில்லா ஏக்கம்
நீயின்றிய வாழ்வை
நினைக்கக் கூட
முடியவில்லை
ஈருடல் ஓருயிராய்
நகமும் சதையுமாய்
மாற்றிய காதலை
மறந்து கூட
வெறுக்க முடியவில்லை

காலம் கனிந்திருந்தும்
கரம் சேர்க்க முடியாமல்
வெருண்ட தடங்கல்களை
வேரோடு அழிக்கும் வரை
சுகமான காதலுடன்
சுதந்திரமாய் காத்திருப்போம்..
ஒன்று சேரும் வரை

Tuesday, May 11, 2010

பேரின்பமாய் பேருந்துப்பயணம்


பேரழகி ஒருத்தி
நிறுத்தத்தில் ஏற
ஏனோ மனம்
சிட்டாய் சிறகடிக்க
என்னருகே வருவாளா
என்றெண்ணி
ஏங்கியது மனம்

சாதுவான பெண்ணவள்
சனங்களின் நெரிசலில்
சலனமடைந்ததை
சரி செய்வதற்காய்
அமர்ந்த இருக்கையில்
அமரச்செய்தேன்

மொத்த அழகும்
மொத்தமாய் கொண்டவள்
நன்றிப்பெருக்கில்
புன்னகை ததும்ப
உள்மனம் சிலிர்ப்பில்
உலகமே மறந்தேன்

நிமிடங்கள் நகர
சம்பாசனை நிகழ
இறுகிய மனங்கள்
பலவருடம் பழகியது போல்
பிரிய மறுத்த நொடிகள்
நிறுத்தம் அடைந்தவளை
மறையும் வரை
தேடியது கண்கள்
தொடர்ந்தது உறவு (காதல்)

பொய் சொல்கிறாய் என்று என் மனம் என்னை கொல்கிறது (ரசனைக்காக)

அடிமைச்சங்கிலி (சீதனம்)

சீராய் சீதனம் பெற்று
மணாளன் என்று
நாமம் சூடிய வறியவனே
நீ கொண்ட கோலத்தில்
காணத்துடிக்கும்
இன்பங்கள் செல்லாக்காசுகள்

உண்மை மறுத்த நீ
கரும்பு தின்ன
கூலி வாங்கியவன்
மகர் என்ற புனிதத்தை
உன் உழைப்பில் வழங்காது
கொள்ளை அடித்தவன்
சில்லறை விடுவது போல்
சீதனத்தில்
நீ கொடுத்த மகர்
புரியாமல் நீ செய்யும்
மிகப்பெரிய கொடுமையடா

பெண் என்ற பெட்டகத்தை
கொள்வனவு நீ செய்தால்
பொக்கிசம் உனக்காகும்
பெண் உன்னை வாங்கியதால்
நீ பொருளானாய்

சீ என்று துப்பவும்
போ என்று விரட்டவும்
வழிசெய்தவன் நீயல்லவா?
அடிமைச்சங்கிலி
நீ அணிந்ததால்
அனுபவித்து அருமை பெற்றாய்
இச்சங்கிலி உடைப்பதற்காய்
மகனுக்கு அணிந்திடாதே....

மகர்- மணமகன் மணமகளுக்கு வழங்கும் கட்டாயக் கிரயம் (தங்கம் வெள்ளி பணம் ஏதாவது)

குழந்தைக்காதல்....


ஏனடி வெட்கம் உனக்கு
ஏற்க மறுப்பதற்கா
ஏலவே இறைவன்
ஏற்றிவிட்டானோ...
எம் இருவரின்
ஏற்பாட்டை.....
எனக்கிட்ட மாலையில்
ஏற்கிறேன் துணிவை

மழலை என்று மனமோ
மணாளன் என்று நினைவோ
குறும்பு என்ற வடிவோ
கூற மறுக்கும் செய்கை

நீ நாணிக்கும் அழகில்
என் பிஞ்சு மனமும்
கெஞ்சவைத்ததில்
கிண்டல் செய்யாதே..

இப்போதே நீ
கிடைக்காவிட்டால்
அழுது புரண்டு
அடம்பிடிப்பேன்
உன்னை அடையும் வரை

பின் குறிப்பு: ரசனைக்காக மட்டும் படத்தைக்கண்டு வரைந்தது

Monday, May 10, 2010

வாழ மறுக்கும் வாலிபனே..

வாலிபம் அடைந்தும்
வாழ்கை தொலைத்து
வாழ வேண்டிய வயதில்
வாழ மறுக்கும் வாலிபனே..

குறுகிய ஆயுளுள்
குறைவில்லா இன்பம் பெற

குற்றமற்ற திருமண மாலையை

குனிந்து நீயும் ஏற்கமறுப்பதேன்


தித்திக்கும் பூந்தோட்டம்

திருமணம்

திகைப்பூட்டும் இன்பங்கள்

தீர்க்க தரிசனம்


மலரும் வாழ்க்கைக்கு

மழலைகள் இலக்கணம்

மலர்ச்சி அடைவது

மாந்தர்கழகு...


வயோதிபம் உன்னை வரவேற்க
வாலிபம் உனக்கு விடைகொடுக்க
வயதைத்தொலைத்த
வறியவனாகி
வெறுமை கொண்ட
வாழ்கையில்
ஏது பயன்....

இன்று வாழா வாழ்கைக்காய்

இறுதிநாளின்
இன்னல்தீர்க்க

இன்றே துணிந்து

இயற்றிடு வாழ்வை ...

Sunday, May 9, 2010

தாய் மனம்....சித்த பிரமை என்கிறாய்
சீ என்று தூவுறாய்
சிறிதும் உணரா
சீற்றம் உன்னாவில்
சின்னஞ்சிறிசிலிருந்து
சீர்செய்து காத்தற்காய்
சித்தம் உன் செயல்கள்

சிட்டாய் சிறகடித்ததில்
தாரம் என்று சொந்தம்
கண்டதால் தாய் என்ற
சொத்தை சிதைத்த
என் சின்ன மகனே
சிந்திக்க மாட்டாயா

நான் கண்ட துன்பம்
என்னோடு தீர
உலகம் போற்ற
வளரு மகனே
என்றெண்ணி
என் மார்பு
சுரந்த உதிரத்தை
பாலாய் வார்ததில்
உன் பாச மொழியில்
அழுகிறது என்மனம்

தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..


Saturday, May 8, 2010

கருணை வடிவே அம்மா....ருணைவடிவே
அம்மா......... நீ
பத்து மாதம்
பொத்திக்காத்து
பெத்தெடுத்து
உன் பாசத்தை
என்மீது மழையாய்
பொழிந்தாய்

எத்துயர் வந்திடினும்
அத்தனையும் சிரம்
ஏற்ற என்தாயே
இன்றும் மழை பொழிய
என்னைக் காக்க
உன் சிரம் ஏற்றதில்
பொறாமை கொண்ட
வானமும் ஆனந்தக்
கண்ணீராய் அதிகம்தான்
வடிக்கிறது....

இப்படியும் காத்த
என் மாதாவின்
இளகிய மனதுக்கு
எப்படி நான்
நன்றி கூற
தாயே நீ...
என் பொக்கிசம்
ஆதலினால்...
இறைவா என்தாயின்
மனங்கோணா
வாழ்கையினை
அமைத்திடுவாயா!!!

Thursday, May 6, 2010

உருகும் இதயம்

மின்னலாய்
மின்னுகின்ற
மின்மினியாய்
மிளிர்ச்சி தந்திட
ஏங்கிய இதயத்தை
ஏந்துவதற்காய்
ஏற்றம் கொண்டு
காதலமுதை
வள்ளலாய்
வாஞ்சையுடன்
வாரி வழங்கிய
கனவு தேவதையே
கண்ட நாள் மறந்து
கண்மணி உனை
காணத்துடித்து
வழி மீது
விழி பிதிங்கி
வருவாய் என்றிருந்த
வறியவன் எனை
எட்டி உதைப்பது போல்
மணக்கோலத்துடன்
ஊர்வலம் போகக் கண்டு
உள்ளம் மட்டுமில்லா
உடலே...
உருகிறது பெண்ண
ஊர்போற்ற நீ வாழ்க....

ஒற்றுமை ஓங்கட்டும்


ஒன்று பட்டால்
உண்டு வாழ்வென
உலகம் பறைசாற்ற
வெருண்டு நின்று
வேற்றுமை வளர்த்து
வெறுமையடைவதால்
ஒற்றுமையாகுமா?

வஞ்சம் தீர்க்க
வாகை சூடி
வாஞ்சை மறந்து
அன்பு மறந்து
நட்பு மறந்து
புத்தி மழுங்கி
கூடு குலைப்பதில்
ஒற்றுமையாகுமா?

தனித்து நின்ற யாரும்
வெற்றி சூடி
சரித்திரம் படைத்த
சரித்திரமே இல்லா
இத்திரையில்
தனித்துச்சென்று
வென்று திரும்ப
உன்னால் முடியுமா?

மதபேதம் இனபேதம்
குலபேதம் ஜாதிபேதம்
நிறபேதம் நிலபேதம்
மறந்தால் மட்டும்
ஒன்று பட்டுவாய்
வென்று நிற்பாய்
தட்டட்டும் முரசு
எட்டட்டும் வெற்றி
ஓங்கட்டும் ஒற்றுமை.

Wednesday, May 5, 2010

குழம்பு...

மீன் குழம்பு
மோர் குழம்பு
கோழிக் குழம்பு
இறால் குழம்பு
எனக்கு மட்டும்
வகைவகையான
நாமங்கள்
என்னோடு உறவாட
சோறுமட்டும் தான்
என்னை போற்றாத
விருந்தாளி இல்லை
தூற்றாத குழந்தைகளில்லை
என் வாசனைக்கு
மசாலாவும்
என் திகைப்புக்கு
புளியாரும்
என் ரசனைக்கு
உப்பாரும்
என்றென்றும் உறுதுணை
ம்ம்ம்ம் என்னை ரசம்தட்டி
திண்டு தீர்பதில்தான்
அனைவருக்கும் ஆனந்தம்

சிறைவாசம்...

கள்ளன் என்றும்
கொலைகாரன் என்றும்
சூதாடி என்றும்
பெண்பித்தனென்றும்
மழுங்கிய புத்தியால்
அடைந்த வாசம்
நியாயம் தான்

இவைகள் என்னென்றே
கண்டிராத குணசீலன்
என்று ஊர் போற்றிய
நானும் இவ்வாசத்தில்
அநியாயமில்லையா

வேண்டாத சட்டம்
ஒன்றால் பாதையில்
கோயிலுக்கு நடந்ததில்
தமிழன் என்ற குற்றத்திற்காக
சிறையிலடைத்த
மடமைக்கு யார்
சிறைசெய்வது ...

கனவுகளும் தொலைந்து
வாழ்கையும் தொலைந்து
இத்தனை வருடம்
நிரபராதியாய் ...
நான் செய்த சிறைவாசம்
இழந்ததனை மீழத்தருமா?

சட்டம் ஏற்றி
சிறையிலடைத்த நீயும்
என்னோடு சிறையிலிருக்க
சிறைஇருக்க வேண்டியவன்
சட்டத்திற்கு வாக்களித்து
சட்டம் ஏற்றுகிறான்

சிந்தை செய்
செய்த குற்றம்கூறு
அப்பாவி என்னை
ஆண்டாண்டு
சிறையிலடைத்து
என்னலாபம் உனக்கு
வாழ்வு கொடுத்தாவது
உன்பாவம் போக்கு

நான் அழாத நாளில்லை
தொழாத கடவுளில்லை
உனக்கு மனமிருந்தால்
என் அலறல் எப்போதே
கேட்டிருக்கும்....
சிறைவாசம் சென்றுபார்

Tuesday, May 4, 2010

எனக்குள் ஒரு காதல்

உலக வரைபடத்தில்
கண்ட முகங்களில்
தெகிட்டாத உன் முகத்தை
நினைத்த நிமிடம் முதல்..
தூங்க மறுத்த மனதில்
உனக்காக அமைந்த
அழகு மாளிகையில்
உன்னை குடியமர்த்த
நினைத்த என்னுள்ளம்.
கனிவாய் காதலை
ஒப்புவிக்க தினமும்
தவிக்கிறது பெண்ணே...

நித்தமும் உன்னால்
நித்திரை மறந்து
நிம்மதி அற்று
நிர்க்கதியான என்
நிலையின்
நிறைவுக்கு
நின்று நீயும்
நினைத்துப்பார்...

தஞ்சம் கோரி
வந்த என்னை
வாஞ்சை செய்து
என்னுள் எழுந்த
காதலிவனை
ஏற்று நீயும் .....
அருள் செய் கண்ணே......
Related Posts Plugin for WordPress, Blogger...