உன் விரல் பிடித்து
தடம்பதித்து எழுத வைத்த
ஏந்தல் உன் ஆசான்
பொறுமையின் சிகரமாய்
செய்த குறும்புகளை
சீர் செய்து சீராக்கி
உன்னை வளப்படுத்திய
உழவன் உன் ஆசான்
உன் துடினம் கடக்க
பாடசாலை அனுப்பிய
ஈன்ற பெற்றோரை விட
உன்னை ஏந்திப் பெற்றவன்
உன் ஆசான்
உன் துறை எது வென்று
உன்னை பாடங்கற்று
உன்திறமை வெளிக்கொணர
உனக்காக் கற்ற மாணவன்
உன் ஆசான்
உலகம் போற்ற
உன்னை ஆழாக்கி
நலமாய் வாழ
நல்லதே நினைத்து
நன்மை மட்டும்
உனக்காகச் செய்த
நண்பன் உன் ஆசான்
மாணவன் என்ற
மா மனிதனே
மறதியிலும் நீ
மதிக்க வேண்டிய
மனிதன் உன் ஆசான்
அன்னாரை உன் வாழ்நாள்
முழுதும் நலமாய் போற்ற
வாழ்நாள் போதுமா?
நீ வாழு மட்டும்
மதித்து நடந்து
மதிப்பைப் பெற்றிடு
நலமே பெறுவாய்
நன்றி மாணவா....
0 comments:
Post a Comment