சித்த பிரமை என்கிறாய்
சீ என்று தூவுறாய்
சிறிதும் உணரா
சீற்றம் உன்னாவில்
சின்னஞ்சிறிசிலிருந்து
சீர்செய்து காத்தற்காய்
சித்தம் உன் செயல்கள்
சிட்டாய் சிறகடித்ததில்
தாரம் என்று சொந்தம்
கண்டதால் தாய் என்ற
சொத்தை சிதைத்த
என் சின்ன மகனே
சிந்திக்க மாட்டாயா
நான் கண்ட துன்பம்
என்னோடு தீர
உலகம் போற்ற
வளரு மகனே
என்றெண்ணி
என் மார்பு
சுரந்த உதிரத்தை
பாலாய் வார்ததில்
உன் பாச மொழியில்
அழுகிறது என்மனம்
தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
2 comments:
தாயன்பிற்கு நிகர் ஏது..? கவிதை அருமை ஹாசிம்
மிக்க நன்றி நண்பா
Post a Comment