இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 4, 2010

சோறு.....


விவசாயியின் வியர்வையில்
வேளான்மைத்தாயின்
நெற்கதிர் மகளுக்குப் பிறந்த
வேளான்மையின் பேத்தி நீ

உனை எப்போது உண்டாலும்
தெகுட்டாத அமுதம் நீ
அளவுக்கு மீறி உண்டால்
குமட்டுகின்ற அனலும் நீ

உனை ஒருதரமேனும்
உண்டுவிடத்துடிக்கும்
உறவு இருக்க...
வீணே உன்னை
குழியில் புதைக்கும்
மூடனும் இருக்கிறான்...

பசிதீர்க்கும் உன்செயலால்
உன்னருமை......
பசித்தவனுக்குத் தெரியும்
ஓங்கி நிற்கும் உன்னருமை
உலக முடிவிலும்
ஓயாது.......
சோறு என்ற உன்னை
உண்ணும் போதுதான்
நினைத்திருந்தேன்...
இவ்வரிகளும் உனக்கே
சமர்ப்பணம்........

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...