இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, May 11, 2010

பேரின்பமாய் பேருந்துப்பயணம்


பேரழகி ஒருத்தி
நிறுத்தத்தில் ஏற
ஏனோ மனம்
சிட்டாய் சிறகடிக்க
என்னருகே வருவாளா
என்றெண்ணி
ஏங்கியது மனம்

சாதுவான பெண்ணவள்
சனங்களின் நெரிசலில்
சலனமடைந்ததை
சரி செய்வதற்காய்
அமர்ந்த இருக்கையில்
அமரச்செய்தேன்

மொத்த அழகும்
மொத்தமாய் கொண்டவள்
நன்றிப்பெருக்கில்
புன்னகை ததும்ப
உள்மனம் சிலிர்ப்பில்
உலகமே மறந்தேன்

நிமிடங்கள் நகர
சம்பாசனை நிகழ
இறுகிய மனங்கள்
பலவருடம் பழகியது போல்
பிரிய மறுத்த நொடிகள்
நிறுத்தம் அடைந்தவளை
மறையும் வரை
தேடியது கண்கள்
தொடர்ந்தது உறவு (காதல்)

பொய் சொல்கிறாய் என்று என் மனம் என்னை கொல்கிறது (ரசனைக்காக)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

தஞ்சை.வாசன் said...

தினமும் இன்றும் தொடர்கின்றதா காதல் பயணம்?

//நன்றிப்பெருக்கில்
புன்னகை ததும்ப
உள்மனம் சிலிர்ப்பில்
உலகமே மறந்தேன் //

நல்லா இருக்கு நண்பரே... வாழ்த்துகள்

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி நண்பா உன்மையாய் நிகழ்ந்தல்ல யாராவது ஒருவருக்கு நிகழ்ந்திருக்கலாமல்லவா கற்பனைதான் நன்றி நண்பா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...