இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, May 5, 2010

சிறைவாசம்...

கள்ளன் என்றும்
கொலைகாரன் என்றும்
சூதாடி என்றும்
பெண்பித்தனென்றும்
மழுங்கிய புத்தியால்
அடைந்த வாசம்
நியாயம் தான்

இவைகள் என்னென்றே
கண்டிராத குணசீலன்
என்று ஊர் போற்றிய
நானும் இவ்வாசத்தில்
அநியாயமில்லையா

வேண்டாத சட்டம்
ஒன்றால் பாதையில்
கோயிலுக்கு நடந்ததில்
தமிழன் என்ற குற்றத்திற்காக
சிறையிலடைத்த
மடமைக்கு யார்
சிறைசெய்வது ...

கனவுகளும் தொலைந்து
வாழ்கையும் தொலைந்து
இத்தனை வருடம்
நிரபராதியாய் ...
நான் செய்த சிறைவாசம்
இழந்ததனை மீழத்தருமா?

சட்டம் ஏற்றி
சிறையிலடைத்த நீயும்
என்னோடு சிறையிலிருக்க
சிறைஇருக்க வேண்டியவன்
சட்டத்திற்கு வாக்களித்து
சட்டம் ஏற்றுகிறான்

சிந்தை செய்
செய்த குற்றம்கூறு
அப்பாவி என்னை
ஆண்டாண்டு
சிறையிலடைத்து
என்னலாபம் உனக்கு
வாழ்வு கொடுத்தாவது
உன்பாவம் போக்கு

நான் அழாத நாளில்லை
தொழாத கடவுளில்லை
உனக்கு மனமிருந்தால்
என் அலறல் எப்போதே
கேட்டிருக்கும்....
சிறைவாசம் சென்றுபார்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...