கடல் அலை எதிர்த்து
துடுப்பிட்டு வலைசுமந்து
வயிற்றுப்பசி தீர்க்க
ஒட்டுகிறார் தோணி
பார்த்தெதுவும் கண்டிரா
பரந்த சமுத்திரம்
பார் சமூகத்தின்
பசிதீர்க்கும் சமுத்திரம்
ஒரு திசையில் தொடுத்து
மறுதிசையில் முடிக்கின்ற வலையுடன்
அணியணியாய் வகுப்பெடுக்கும்
மீனவனின் பாடலரங்கேற்றம்
வாடா தம்பி வழளஞ்சிழுடா
ஒடியிழு உழுவ மீனுக்கு
பாடியிழு பாரைமீனுக்கு
ஏலேலோ.. ஏலியலோ...
ஏலேலோ.. ஏலியலோ...
கூட்டியிழு கூடுதல் மீனுக்கு
அண்ணாந்து பார் பாயுது மீனு
அலைகடந்து ஓடுது பார்
வடா தம்பி சேரந்துழுடா
ஏலேலோ.. ஏலியலோ...
ஏலேலோ.. ஏலியலோ...
முத்து வரிகள் மொழிந்து
எதிர்பார்த்து மணல்மிதித்து
ஒற்றுமையாய் ஒன்றிசைத்து
தினந்தோறும் திகைத்து நின்று
சமுத்திரத்தாயிடம்
கையேந்தும் மீனவன்
இறைவன் வகுக்கும்
இத்தனை உனக்கு
இதுதான் உனக்கு என
கிடைத்ததை பெற்றவனும்
பெருவாழ்வு வாழ்கிறான்
0 comments:
Post a Comment