இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, November 30, 2010

தலைவா நானுன் தொண்டன்


சமூகத்தின் தலைவனென்று
உம்மையும் மண்றமேற்றிட
இரவுபகல் தூக்கம் மறந்தவன்
தொண்டனென்று மார்தட்டி
கோசம் எழுப்பி கொடிபிடித்தவன்

முகவரியொன்று தலைவன்பெற்றிட
விலாசங்களேயற்று பயணித்தவன்
தலைவனையொருவன் வைகிறானென்று
தக்கபாடம் புகட்டியவன்

Monday, November 29, 2010

உனை ஆடச்செய்த நிகழ்வெது....



பெண்ணே நீயும் 
ஒற்றைக்காலில் ஒய்யாரமாய் 
நிறுத்தாது நிதானமாய்...
நீயாடக்காரணம் கூறாயோ....

அழகுச் சிலையே....
உன்னையும் சிறைபிடித்து 
அதிரும் இசைகொடுத்து 
ஆடச்செய்த நிகழ்வெது...

Sunday, November 28, 2010

மனதை மயக்கும் மலர்கள்

இரு மலர்கள் இங்கே
இதயம் தொடுகிறது
ஒவ்வாமையற்று இரண்டும்
உருவம் பெறுகிறதே...


மலரில் வடித்தெடுத்த மலரே
மங்கை உன்னழகில் மலர்கூட
நாணிக்கிறது ஏன்தெரியுமா?
அழகின் நித்திலம் நீ என்பதால்

Saturday, November 27, 2010

சந்தி சிரிக்கிறது....


அந்தோ பரிதாபம்
அங்கே........ பார்...
அனியாயமொன்றுண்டு
அழுகிறார்கள் கூடிநின்று

அவனும் துரத்தித்துரத்தி
காதல் வலை வீசினானாம்
அவளும் அதில் மயங்கி
ஓடிவிட்டாள் அவன்பின்னே

Thursday, November 25, 2010

பட்டிணிச்சாவு....

அந்தோ பரிதாபம்
மனிதம் ஒன்றின் மரணமிது
கொடுமையிலும் கொடுமையிது
பட்டிணியால் மரணமிது

எண்சாண் வைற்றுக்கு
எள்ளளவேனும் உணவிருந்தால்
இச்சாவு இருந்திருக்குமா?
ஏன் உலகம் தூங்குகிறது

Wednesday, November 24, 2010

பாசம் கலந்து பாலூட்டு அம்மா.....

அம்மா என்றழும் எனை
ஆரத்தழுவி அணைத்து 
உச்சி மோர்ந்து பாசத்துடன் 
பாலூட்டு அன்னையே..

அகமகிழும் உள்ளத்துடன் 
பசிதீர்க்கும் உனை ஏந்தும் 
பாலகனாய் வளர்ந்திடுவேன் 
உன்பாசமே என்னுள்ளும் 
உதிரமாய் ஓடிடுமே...

Tuesday, November 23, 2010

வரம் தராத வசந்தங்கள்



என் கனவின் பிம்பமாய் 
நான் கண்டெடுத்த முத்தாய் 
என்வாழ்வின் விடிவெள்ளியாய் 
உதித்த உயிரானவனே 


அங்கங்கள் சிலிர்த்திடும் 
காதல் உணர்வுகளைக்
கனிமொழிகளில் நிதமும் 
திகைத்திடச்செய்தாய் 

பணமென்ற பேயுனக்கு....


எதையும் வெல்லும் ஆற்றலுனக்கு
உனக்காக ஏங்கும் மனங்களுண்டு
உன்னால் கண்ட துயர்களுண்டு
உனக்காக மூண்ட போர்களுண்டு


பணமென்ற காகிதமே
உன்சக்திக்கு நிகர் நீயேதான்
உன்னை அடைந்ததை விட
இழந்தவைகளிதிகமே...

Monday, November 22, 2010

காதலுக்காக சாவடிப்பதா?



பருவமுனை அடையுமுன் 
காதலெனும் மாயைக்குள் 
கட்டுண்டு கைசேதம் 
தேடிக்கொண்டாய் பெண்ணே


உனையீன்ற தாயவளுடன் 
உனை ஏந்திய நேசர்களை 
துச்சமென தூக்கி எறிந்து 
துணைஒன்று - தானே தேடினாயே

Sunday, November 21, 2010

மரணமில்லக் காதல்....


எங்கும் காதல் 
எதிலும் காதல்
உயிராய் அவதரித்தால் 
காதலை சுவாசித்திட வேண்டுமே


காதலில்லா வாழ்வும் 
அன்பில்லாக் காதலும் 
மனிதனுக்கே உரித்தான 
அற்புத உணர்வன்றோ..

Sunday, November 14, 2010

தியாகம் வேண்டும்....

வாழ்க்கை நிலைகளை 
வாழும்போது உணர்ந்துபார்
தியாகங்கள் பல செய்து 
திடம் பெறுவாய் நிலைத்து


பசிக்கின்ற நிலைதனிலும் 
உணவின்றி காத்திருந்தாய் 
தீயவழி நாடாது தியாகியாய்
நல்வழி தேடுகிறாய்....

ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்



அனைத்து இணைய நண்பர்களுக்கும் 
என் இதயம் கனிந்த ஈதுல் அல்ஹா 
ஹஜ் பெருநாள் வாழ்த்துகள் 
அனைவரும் சாந்தி சமாதானத்துடன் 
கவலைகளற்ற சந்தோசமான வாழ்கை 
வாழ்ந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Saturday, November 13, 2010

உனைவெல்வேன்.....



கண்டேனடி பல உறவு 
கொண்டேனடி பல நட்பு
அனுபவம் உலகையாள 
எனையாள்கிறாய் நீயடி 


உன்னருகில் நானற்று 
உணர்வுகளை உறங்கச்செய்து 
எதிர்பார்ப்பை விதியாக்கி 
காத்திருபில் எனை வெல்கிறாய் 

இன்பம் தேடி...

சுகமதிகம் உண்டென்று 
கரம் தொட்டு - உன்
பூவான இதள்பதித்து 
இதமாக புகைவிடுகிறாய் 


குலவிளக்கு நீயென்று
உன் புகளும் பாடுகிறார் 
மூட்டிய புகை கொண்டு 
புகைவிட்டு நிருபிக்கிறாய் 

Thursday, November 11, 2010

வண்ண நிலவென்று....


வண்ண நிலவொன்று 
வானில் மின்னுவது போல் 
எட்டிடா தூர நின்று 
சில்மிசம் செய்கிறாய் 


பால் நிலவொளியில் 
கூடி மகிழ்வது போல் 
உன் பார்வை வீச்சில் 
என்மனம் கனக்கிறது

ஏங்கவைக்கும் எதிர்பார்ப்புகள்..


மனதின் ஆசைகளை 
அடைந்திட நாடி 
துடித்த நிமிடங்களுக்கு 
விடைகளற்ற தோல்விகள் 


வலிமையற்ற மனதுக்கு 
தோல்விகள் துயராகிட 
தாங்கிடா வேதனையில் 
ஏக்கங்களே எதிரியாகுறது 

Monday, November 8, 2010

கற்பனைக்காதல்...

கற்பனையில் நான் 
வரைந்து வைத்த ஓவியமடி நீ 
கண்கள் உனை அடைந்த மட்டும் 
காதலும் பற்றியதடி 


சிற்பமாய் உனை கொண்டபோது 
விலை மதிப்பில் உயர்ந்து நின்றாய் 
பேரம் பேசியதால் உனை 
அடைவதென்பதும் கனவானதே 

Thursday, November 4, 2010

அன்னையின் கண்ணீரில்......

தங்கம் என்று தாவி அணைத்து 
அங்கம் சிலிர்த்திட்ட பாசம் கலந்து 
உதிரத்தினை அமுதமாக்கி 
உச்சி மோர்ந்து ஊட்டுகிறாள் அன்னை 

எட்டி நடந்து காலூண்டி 
தட்டுத்தடுமாறி தாவிப்பிடித்து 
வீறு கொண்ட வேங்கையாய் 
எழுந்திட்ட பெருமிதம் அன்னையால் 

Monday, November 1, 2010

அன்பின் உலகம்...

அங்கங்கள் சிலிர்க்கிறது 
உன் அன்பின் ஆழத்தில்
எப்போதும் இப்படியே
இருந்திட வேண்டுமே...

அழிந்திடும் உடல்களோடு 
மடிந்திடா உணர்வுகளுடன் 
உலகில் இணைவதில் 
எத்தனை இன்பங்கள் 




Related Posts Plugin for WordPress, Blogger...