இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, November 30, 2011

வாசித்திடு உனக்காக வாசித்திடு

எழுத்துக்களின் கோர்ப்பும்
உமிழும் மொழிச்சலும்
வாசிப்பின் உயிர்நாடியாய்
வாழவைக்கிறது மொழிகளை

தாய்மொழி பிறமொழியென
உலகம் கண்ட மொழிகளின்
அருமையினை ஊமையனிடம்
வினவிப்பார் விக்கியழுவான்

“அ”முதல் “ஃ” வரை படியடாவென்ற
வாத்தியாரின் விரக்தியை
வீணாக்கிய மாணவனிடம்
இன்று கேட்டுப்பார் விரண்டோடுவான்

வாசிக்கத்தெரியாதவன் வாழ்கிறானேயென்று
வீண்வாதம் சொல்கிறவனே கேளவனிடம்
மாற்றானின் வாசிப்பில்தான்
வாழ்கிறேன் என்றுசொல்வான்

சிந்தையுள்ளவனாய் ஊனமற்றவனாய்
உளரல்களோடு மதிமறந்தவனாய்
உணரப்படாத முழுமனிதனாய்
வாசிப்பில் வளர்க்கப்படுகிறாய்

அறிந்து நில் கற்றுச்செல் என்பதை
ஆய்ந்தறிந்திட வாசிப்பற்றவனாய்
ஆராய்ந்திட முடிவதில்லை
ஆழ்ந்து தேடிட வாசிக்கத்துணிந்திடு

எதைத்தான் வாசிப்பதென்று கேட்கிறதுன் மனம்
இறைவழி குர்ஆனை முழுவதுமாக வாசித்திடு
நபிவழி ஹதீஸ்களை முழுவதுமாகப்படித்திடு
உன்னதமனிதனாய் உருவம்பெற்றிடுவாய்

கணணி மயமான உலகிகைக் கற்றிட
வாசிப்பற்று கால்வைத்திட முவதில்லை
கருத்துகளோடும் அவசியத்தோடும்
மொழியறிந்து வாசிக்க வேண்டாமா??

உலகத்துநடப்புகளை பத்திரிகைகள்
உடல்களாய்த்தாங்கிநிற்கிறது ஊர்ந்துபார்
உண்மையறிந்து உணர்ந்து நடந்திடுவாய்
வாசிக்காமல் முடிந்திடுமா இவை

வாசித்தவன் இன்று விண்ணைத்தொட்டான்
விவாதித்தவன் ஏப்பம் விடுகிறான்
வானமும் பூமியும் பரந்துகிடக்கிறது
வாசித்திடு மனிதா உனக்காக வாசித்திடு
அத்தனையிலும் உயர்விருக்கிறது


கடந்த ஆண்டு வாசிப்பு தினத்திற்கா எழுதப்பட்ட கவிதை தேங்கிக்கிடந்தது தூசிதட்டினேன் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள 

Tuesday, November 29, 2011

உயிர்பிழைத்த நாளன்று....

அன்பனும் என்நண்பனும் 
வாவென்று வங்கக்கடலை நோக்கி 
வெறுத்த போதும் வர மறுத்தபோதும் 
நீராடலாம் கடலலையுடன் விளையாடலாம் 
நீந்தி நீயும் கரைசேர்ந்து வாவென்று 
தாறுமாறாக தரதரவென்று இழுத்துச்சென்று 
அலைகளுக்கப்பால் அலாக்காய் விட்டுவிட்டு 
வேகமாயவர்கள் கரையேறிவிட்டனர் 

காணுமிடமெல்லாம் நீராகி 
கண்ணுக்குத்தெரியாத கரைநோக்கி 
கால்களையும் கைகளையும் 
வீரங்கொண்ட விசையுடன் 
உதைக்கிறேன் மேலெழுகிறேன் 
உதைக்கிறேன் மேலெழுகிறேன் 

Monday, November 28, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 08)

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 07)


வாடன்(காவலர்)முதல் தோழியர்வரை
அறிந்திருந்த என்காதலுக்கு
அறிவுரைகள் அதிகரித்தபோது
அடுத்தகணமே நிலையான
காதெலெம் காதலென்று கூற
முனைந்ததை மறக்கவில்லை

மலரின் மகரந்தத்தில் மயங்கிய வண்டாய்
என் மடிதவள்ந்த மன்னவனிடம்
“காதலிப்போம் காதலுள்ளவரை
கரம்பற்றியும் காதலிப்போம் மரணம்வரை”
என்றதில் அதிர்ந்தவன் நிமிர்ந்து
என்முகத்தினையேந்திய கரத்துடன்
கண்மணி நாளையே எம் திருமணமென்றதில்
வழிந்த ஆனந்தகண்ணீரை மறக்கவில்லை

அனாதைகளான இருவருக்கும்
ஆதரவான உறவுகளென்ற சிலருடன்
அன்னதானம் மாத்திரமளித்து
அமைதியாய் நடந்தேறியது திருணம்
பெரியவர்களின் ஆசியுடன்
மாலைசூடிய நாளதை மறக்கவில்லை

Sunday, November 27, 2011

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 07)

அவளாகிய அவள் (பகுதி 06)


தொட்டுப்பார்த்து கட்டியணைத்தான்
என்விரல்களின் இடையே விரல்கோர்த்து
இசைமீட்டும் வீணையாய் என்னை
மயங்கிடச்செய்த காதலை அவனிடம்
ரசித்து ருசித்ததை மறக்கவில்லை

உலகம் மறந்து காதலை நினைத்து
அவன் மடியில் தலைவைத்து
இன்பலோகம் இதுதானோவென்று
என் கன்னிப்பருவம் இசைபோட்டபோது
எதிர்காலம் நோக்கிய சிந்தனையில்
சுதாகரித்து விலகியதை மறக்கவில்லை

இளமைக்குத்தீனியாய் என் இதயம்
படபடத்தாலும் என் அந்தரத்து வாழ்வை
அகத்தினுள்ளே அலசியாய்ந்து
காதலின் அடுத்தபடியை கருதிடவும்
காமத்தினுள் கட்டுண்ட கைசேதத்தை
நாடாததையும் மறக்கவில்லை

Friday, November 25, 2011

என்னை விட்டு உங்களோடு செல்கிறேன்மூன்றுவயதில் முழுமையாய்
உணர்ந்த தந்தையின் பாசம்
அன்னாரின் இறப்போடு ஏமாற்றந்தந்து
அன்னையின் அரவணைப்பில்
ஓரளவு மறந்திடச்செய்தது


இறைவன் வகுத்த வாழ்க்கைக்கோலம்
வயதுகளின் மாற்றத்தில் வலிகளின்
தொடர்வோடு வஞ்சிக்கப்பட்டேன்
வேதனை தீர்க்க வழி காட்டு இறைவா
என்று ஏந்திய கரத்திற்கு அவனளித்த
இறைவாசலாய் இவ்வில்லமடைந்தேன்


என்போன்ற சகாக்கள் ஆயிரமிருப்பதையும்
பாசத்தைத்தேடிய பட்சிகளாய் அவர்களையும்
கண்டு மனம் கலங்கிநின்றேன்
கருணைவடிவான இறையருளின்
சூழலாயிருந்து கல்வியும் பாசமும்
ஒருங்கே பெற்றிடும் இல்லமாயுணரந்தேன்


இணைந்தபோது எதிர்பார்த்திராத
நட்புறவுகளின் அன்பும் தேவைகளின்
திருப்பதியான நிறைவுமடைந்து
ஈருலக வாழ்வின் வெற்றி நோக்கிய பாதையை
காட்டிநின்ற ஆசான்களை
என் தந்தைகளாய் ஏற்றுநின்றேன்

Sunday, November 20, 2011

நாசமானவன் நாசமாவான்....

மனிதனைப் புனிதனாக்க 
மதங்கள் வரையறுக்கப்பட்டன 
மதங்களை இழிவுபடுத்த 
மனிதனே துணிந்துவிட்டான் 


உன்துணிவில் சாதித்திடாது 
துயரங்களே உன்வழியில் 
விலைகொடுத்துப்பெற்றவனாகி 
சபிக்கப்பட்ட சாமானியனாகிறாய் 


சாதாரணமாய் குருதியோட்டும் 
சாத்தான்களின் சங்கமமான உலகில் 
சலசலப்புக்கு வழிசெய்து 
சனியனாய் ஏன் உருவாகினாய் 


நீ துவக்கிவிட்ட வழிகள் 
எத்தனை நல் உள்ளங்களின் 
சாபங்கள் சேர்ந்து சுனாமியாகி 
சின்னாபின்னமான சடலமாவாய் 


நட்புக்கு வழிகோலும் 
முகநூலின் பாதையில் 
கிரிமிநாசினியாய் நீமாறி 
விபரமான முட்டாளாகினாய் 

Saturday, November 19, 2011

என்னைத் தொலைத்த நான்

நானென்ற அகம்பாவம் 
நானென்றே.. நினைத்தபோது 
நன்மைகளேதும் நோக்கியதில்லை 
நான்தான் சரியென்ற வாதம் 
என்னைத் தலைநிமிர்த்தி வைத்தது 

காதலே ஜெயமென்று 
கால்வரை பிடித்துவிட்டவனை 
காதலன் என்றுகாணாது 
அடிமையாய் நடத்திநின்று 
அழித்திருந்தேன் காதலை 

திமிரின் ஆட்சி தலையிலிருந்ததில் 
குனிய மறந்து கும்மாளமடித்ததை 
என்குழந்தைகளும் தொடர்ந்து 
குறையுள்ள பிள்ளைகளாய் 
உருவாக்கியிருந்தேன் செல்வங்களை 

Thursday, November 17, 2011

ஹம்னாவெனும் நடத்துனர்

சேனையென்ற எம் ஆகாயவிமானம்
எழ ஆரம்பித்த போதே..
அமைதியாய் ஏறியமர்ந்த
தலைமை விமானி
பயணிகளறிந்திராத
திறமையான நடத்துனர்


இடிமின்னல் சூறாவளி
கார்முகில் பெருமழையென
இன்னல்கள் எதிர்கொண்ட போதும்
நேர்த்தியான பயணத்திற்கு
தலைவன் வழி பின்தொடர்ந்த
முக்கியமான நடத்துனர்


இன்று பயணிகளின் முன்
நடத்துனராய் காட்சி தந்து
தன்னலம் நோக்கிடாத
தங்கையெம் நங்கை
தலைமை நடத்துனரவர்


ஹம்னாவெனும் புனைப்பெயரில்
சேனை முழுதும் சிலாகித்திருந்து
தேனாய் உறவுகளுக்கு
தித்திப்பய்த் திகழ்ந்த
தங்கத் தமிழ் நடத்துனர்


சேனையில் பல அடைவு
15000 பதிவுகளையும் தாண்டிய பெண்
பாராட்டப்பட வேண்டிய
பக்கங்களோ பல்லாயிரம்
மங்கலமாய் என்றும் திகள
நடத்துனரே உமை வாழ்த்துகிறேன்


உம் பாதையில் கற்றுத்தந்தவைகள்
உன்பிள்ளைச்செல்வங்கள் கற்றவையாகும்
உயரிய பணியில் உளமாறப்பிணைந்து
ஈருலக வாழ்வில் ஈடேற்றமடைந்திட
இருகரமேந்தி பிரார்த்திக்கிறேன்
நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்


Wednesday, November 16, 2011

வஞ்சிக்குமுன் புன்னகை.....நிழலாடும் உன்புன்னகையில் 
நிஜமாய் உயிர்க்கிறேனடி 
நீ உதிர்த்த புன்னகைப்பூ
என் மனப்பூங்காவில் மலர்ந்ததடி


உன் ஒற்றைக் கண்பார்வையில் 
என்னை உற்றுநோக்கிய பொழுது 
என் பிறப்பின் அடைவை 
முழுதுமாய் உணர்ந்தேன் 


புன்னகை மலர்ந்த உன்முகம் 
என் கனவையும் ஆக்கிரமித்துவிட்டது 
தடுமாற்றத்துடன் நடமாடுகிறேன் 
தவழும் உன் புன்னகைக்காக மட்டும் 


உன் புன்னகையின் விலை 
கோடிகளாயினும் கொடுத்திடலாம் 
கோடிகளையும் அற்பமாக்கி 
மகி்ழ்வு தருகிறதுன்புன்னகை 


வஞ்சிக்குமுன் புன்னகை போதுமடி 
வறட்சி நிலங்களும் சோலை வனங்களாகும் 
சாவின் விளிம்பைக்கூட 
சரித்திரம் படைத்து வென்றிடும் 


பர்ஹாத்துக் கோர் வாழ்த்து

பாலமுனை பாறுக்கென்ற 
புகள்பெற்ற கவித்தந்தைக்கு 
மகனாய் அவதரித்து 
பாலமுனை எம் தாயின்புகளுக்கோர் 
விழுதாய் அலங்கரிக்கும் 
அன்புச்சகோதரனை வாழ்த்துகிறேன் 


இறைவனருளால் அடைந்த 
திறமைகளின் வாயிலாக 
உலகவலம் இணையங்களினூடே 
உன் பெயரும் உயர்ந்துநிற்கயில் 
உளம்பூரிக்கிறது வாழ்த்துகிறேன் 

அடைந்த கல்வி 
அயலவர்க்குதவிட 
அயராதுகற்றுத்தந்து 
தினமும் மகிழ (நகை)சுவையோடலைந்து 
நட்புகளுக்கென்று அரட்டையோடிணைந்து 
அன்பனாய் ஓர் வலம் 
சேனைக்காக வாழ்த்துகிறேன் 

கேட்டவற்றுக்கதிகமாக 
கேளாதவற்றையும் நுட்பத்துடன் 
மனமேற்று மகிழ்வுடன் 
தோழமைகளுக்குதவும் 
உள்ளத்திற்காக வாழ்த்துகிறேன் 

ஆயிரம் உன்பயணத்தில் அற்பம் 
பல்லாயிரம் உன்னால் சேனையடையும் 
சேவகனாய் உன்னால் 
நண்பர்கள் மகிழ்வர் 
இணைந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறேன் 

Sunday, November 13, 2011

காதலின் காணிக்கை


காதலெனும் புனிதம் 
காதலெர்களால் கெட்டுவிடுகிறது 
காதலென்று சொல்லி 
ஏமாற்றமங்கு நடக்கிறது 


விழுந்து விழுந்து 
காதல்வலை வீசியதில் 
காதலுக்கே ஹீரோவென்று 
கானமங்கு இசைக்கிறது 


கண்டதும் முத்தம் 
கை பட்டதும் அணைப்பு 
தொட்டதும் ஈர்ப்பு 
தொடர்ந்ததும் அனுபவிப்பு 


மயங்கிய காதலர்கள் 
நம்பிக்கையை காணிக்கையாக்கி 
ஈருடல் ஓருயிரென்று 
ஈனமங்கு அரங்கேறுகிறது 

Friday, November 11, 2011

தோழமையின் மகிழ்வுடன்.....

அன்புத் தோழனே நீரும் எதிர்பார்த்திராத 
இறைவனின் தீர்ப்பாய் உன் மனம் மகிழ 
மங்கலக் குத்துவிளக்காய் வந்துதித்தாள் 
செல்லக்குழந்தை உன் செல்வக்குழந்தை 

தினமது சிறப்பென்று தித்திப்புடன் காத்திருக்க
தித்திப்பின் மிகையென்று மலர்ந்தாள் மகளாக 
அன்னை மடி சுமைதீர்த்து அவதரித்த அன்புக்குட்டி 
அகிலம் போற்ற இறைவன் துணை நிற்கட்டும் 

உன் முகமலர்வை கண்டு மகிழ்ந்தேன் 
உள்ளத்துக் குமிறலின் உணர்வை அறிந்தேன் 
பிரிவோடு பிணைந்த வாழ்வுடன் - மகளை 
காணத்துடித்த வலி உணர்ந்தேன் 

பெற்றது பெண்குழந்தையென 
பெருமிதத்துடன் மார்தட்டினாய் 
உன்தாயென தாங்கிடுவாய்யென்று 
உறுதி கூறினாய் - உனக்கு மகளானதில் 
மகிழ்ந்திடுவாள் இனிவரும் காலத்தில் 

இறைவன் உனக்களிக்கும் தேகாரோக்கியத்தில் 
மலர்ந்த மகளும் உதிர்த்த மகளும் 
மகிழ்வுடன் வாழ்ந்திடவும் 
எல்லாவளமும் இனிதாய் அடைந்து 
ஈருலக வெற்றி அடைந்திடவும் 
ஏகவல்லோன் துணைபுரிவானாக 
மகிழ்ச்சிகள் தோழா வாழ்த்துகிறேன் 

Thursday, November 10, 2011

உண்மைக்காதலிதுஉனக்காக நான் நடக்கிறேன்
எனக்கா நீ கைகொடுக்கிறாய் 
ஒற்றுப்போன உணர்வுகளோடு
ஒருங்கிணைந்த உள்ளம்


ஊனமற்ற உள்ளத்தினால்
உயிர்பெற்ற காதலுக்கு
குறைகளற்ற குணமதிகம் 
நிறைவான திருப்பதியும் காண்கிறது


இறைவனின் எடுத்துக்காட்டிது 
வாதங்களற்ற வாழ்வியலுக்கு 
உள்ளத்தின் திருப்திகாண 
ஊனமொரு குறையில்லை 


மனதில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் 
நினைவில் ஒன்றும் நிஜத்தில் ஒன்றுமாய் 
நிறம்மாறும் ஊனக்காதலர்களுக்கு 
கதை சொல்லும் உண்மைக்காதலிது 

Saturday, November 5, 2011

ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துகள்மகிழ்ச்சிக்கு மகுடம் சூட 
மலர்வது பெருநாள் 
மகிழ்வுடன் தியாகத்தையும் 
உணர்த்துவது ஹஜ்ஜூப் பெருநாள் 


உலகத்து ஒற்றுமைக்கு 
ஒரே யொரு உதாரணம் இத்திருநாள் 
உலக மாதாவின் வயிற்றுக்குழந்தைகளின் 
ஒன்று கூடல் இத்திருநாள் 


அன்று உருவான சரித்திரத்தை 
இன்றும் நினைத்திடச்செய்கிறதின்நாள் 
தன்னை மறந்து பிறருக்காய் 
துணிந்துதவிட திணிப்பதுமின்நாள் 


ஏழை எழியவருக்காய் 
ஏகவல்லோனின் ஏற்பாட்டில் 
உழுகியாவெனும் கடமையில் 
புசித்துமகிழும் இத்திருநாள் 


பெருநாளின் மகிழ்வுடன் 
நட்பினில் பிணைந்து 
அன்பினில் ஜெயித்து 
என்றும் திருநாளாய் மலர்ந்திட 
இன்நாளில் பிரார்த்திப்போம் 
அனைவருக்கும் எனது 
வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் 

Thursday, November 3, 2011

ஏதுமில்லா வாழ்வு...பணந்தான் வாழ்வென்று
பகட்டு வாழ்விற்காய்
துறந்த நாடு பிரிந்த வீடென 
நகர்த்திய வாழ்வு 


பிரிவின் ஆரம்பத்துடன் 
தனிமையின் தவிப்புடனும் 
தேடலின் ஏமாற்றத்துடன்
பரிதவிக்கும் வாழ்வு 


அடைவதில் திருப்தியற்று 
அடைந்தவைகள் மீதமற்று 
ஏனிந்த வாழ்க்கை என்ற 
கேள்விகளே வாழ்வு 

Related Posts Plugin for WordPress, Blogger...