உனக்காக நான் நடக்கிறேன்
எனக்கா நீ கைகொடுக்கிறாய்
ஒற்றுப்போன உணர்வுகளோடு
ஒருங்கிணைந்த உள்ளம்
ஊனமற்ற உள்ளத்தினால்
உயிர்பெற்ற காதலுக்கு
குறைகளற்ற குணமதிகம்
நிறைவான திருப்பதியும் காண்கிறது
இறைவனின் எடுத்துக்காட்டிது
வாதங்களற்ற வாழ்வியலுக்கு
உள்ளத்தின் திருப்திகாண
ஊனமொரு குறையில்லை
மனதில் ஒன்றும் உதட்டில் ஒன்றும்
நினைவில் ஒன்றும் நிஜத்தில் ஒன்றுமாய்
நிறம்மாறும் ஊனக்காதலர்களுக்கு
கதை சொல்லும் உண்மைக்காதலிது

2 comments:
உன்னின் கரங்களாய்
நானும்
என்னின் கால்களாய்
நீயும்
வாழ்வின் ஓடத்தில்
பயனிப்போம்!
தன்னம்பிக்கை எனும்
தோனி
இருக்குது நம்மிடத்திலே!
எட்டிவிடும் தூரத்தில்
வானம்!
வா! போகலாம்!
கலக்கமில்லாமல்
வாழலாம்!
நம்பிக்கையற்ற
மானுடங்கள் வரட்டும்
நம் பின்னே!
மிகவும் அருமையாக உள்ளது. எனது தளத்திலும் படத்தை பதிவிட்டு உங்கள் தளத்திற்கு லின்க் கொடுத்துள்ளேன் அன்பு உறவே!
Post a Comment