மூன்றுவயதில் முழுமையாய்
உணர்ந்த தந்தையின் பாசம்
அன்னாரின் இறப்போடு ஏமாற்றந்தந்து
அன்னையின் அரவணைப்பில்
ஓரளவு மறந்திடச்செய்தது
இறைவன் வகுத்த வாழ்க்கைக்கோலம்
வயதுகளின் மாற்றத்தில் வலிகளின்
தொடர்வோடு வஞ்சிக்கப்பட்டேன்
வேதனை தீர்க்க வழி காட்டு இறைவா
என்று ஏந்திய கரத்திற்கு அவனளித்த
இறைவாசலாய் இவ்வில்லமடைந்தேன்
என்போன்ற சகாக்கள் ஆயிரமிருப்பதையும்
பாசத்தைத்தேடிய பட்சிகளாய் அவர்களையும்
கண்டு மனம் கலங்கிநின்றேன்
கருணைவடிவான இறையருளின்
சூழலாயிருந்து கல்வியும் பாசமும்
ஒருங்கே பெற்றிடும் இல்லமாயுணரந்தேன்
இணைந்தபோது எதிர்பார்த்திராத
நட்புறவுகளின் அன்பும் தேவைகளின்
திருப்பதியான நிறைவுமடைந்து
ஈருலக வாழ்வின் வெற்றி நோக்கிய பாதையை
காட்டிநின்ற ஆசான்களை
என் தந்தைகளாய் ஏற்றுநின்றேன்
என்னை நான் மனிதானாய் உணர்ந்த போது
முழுமையாடைந்திட வேலையும் அளித்து
வெகுமதிநிறைந்த வாழ்வுடன்
தலைநிமிர்ந்த குடிமகனாய் மாற்றிய
இவ்வில்லலத்திற்கு இறைவனிடம்
அருளுக்காய் பிரார்த்திக்கிறேன்
காலத்தின் கட்டாயமும் மாற்றமும்
இதுநாள்வரை அறிந்திருந்திடாத
பிரிவின் துயரம் இன்று என்மனதில்
ஆட்கொண்டு அதிரச்செய்கிறது
என் தோழமைகளின் பாசம்
தோற்றுவிட்டதாய் கண்ணீர் மல்கச்செய்கிறது
விட்டுப்பிரிகிறேன் வேதனைகளோடு
எடுத்துச்செல்கிறேன் பாசங்களை
கற்றுச்செல்கிறேன் நேரிய பாதையை
கலங்கிநிற்கிறேன் பிரிவுக்காக மட்டும்
உயிருள்ளவரை உங்களோடிருப்பேன்
இறைவனுக்கே எல்லாப்புகளும்
அல்ஹம்துலில்லாஹ்
சகோதரர் றமீஸ் அவர்களின் வேண்டுகோளுக்காக அவரது வாழ்வோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மையமாக வைத்து எழுதிய கவிதை அவரது அனுமதியுடன் பிரசுரித்தேன்
4 comments:
நல்ல கவிதை! நன்றி நண்பரே!
அருமை.
உணர்ச்சிக்குவியல்களாய் உள்ள கவிதை.
நல்ல பதிவு.
எனக்காக எழுதப்பட்ட வரிகள்
இது வெறும் வரிகள் அல்ல,
என்றுமே மறக்கமுடியாத
உணர்ச்சியுள்ள உயிர்கள்.
என் அடிமனது சில ஆழமான
வார்த்தைகளை மொழிகிறது,
அதை நன்றி என்று ஓர் சொல்லில்
சொன்னால் எவ்வாறு ஈடாகும்??
ஓ என் இளகிய மனமே!!
நீ உயிருள்ள வரையிலும்
உபகாரம் செய்தவனை
மறவாதே...
Post a Comment