இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, February 27, 2011

மனம்வென்ற ஆட்சி.......

மக்களெனும் அமானிதம் 
மதிக்கப்படும் வரைதான் 
ஆளப்படும் வர்க்கமாகிறது 
அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு 
ஆங்காங்கே பதிலடிகள்...
நடந்தேறுகிறது.....


மக்களென்ற சக்திக்கு 
மடியாத மன்னர்களில்லை 
ஓங்கப்படும் கைகளுக்கு 
விலங்கிட முடிவதில்லை 
அதிகாரமுள்ளவரை 
ஆட்டமதிகம் நிலைப்பதில்லை

Saturday, February 26, 2011

நகைப்பதற்கா.... நகை.......??

  
கன்னியுனை காண்போர் நகைக்கு 
காட்சிப்படுத்திய கோலத்தில் 
இக் கலியுகத்தின் தேவையெதுவோ
காலத்தின் கட்டாயமா
தற்பெருமையின் பிரதிபலனா


பிறர் நகைப்பதற்கு நகையணிந்து
நங்கையுன் புகழ்மறந்து 
நலங்களேயற்ற நலம்பெற
நாடியதின் விளைவிதுவா

Tuesday, February 22, 2011

என்னவனே உனைச்சேர...

எத்தனை பொழுதுகள் 
இப்படியே மறைகிறது 
அந்தி வானமும் 
ஆகாயப்பறவைகளுமாய் 
அவ்வப்போது வினவிச்செல்கிறது 


என் கால்தடங்களை மாத்திரம் 
அழித்தோய்ந்து போன 
கடலலைகளின் கர்ச்சனைகள் கூட 
வெகுவாகக் கேட்கிறது 

Saturday, February 19, 2011

நட்புக்கு நிகரேது...

நட்புலகில் நலங்கண்டிட 
நாம் கை சேர்க்கும் நேரமிது 
தேசங்கள் கடந்து
தேடல் வாழ்க்கையுடன் 
தன்ந்தனிமையில் 
தன்னம்பிக்கையினை ஆயுதமாக்கி 
சந்தோசங்காணும் 
சகோதரங்களுக்காய் 
தியாகமே வாழ்வாகிறது 


நாளை சரித்திரம் - எம் 
நலங்களைப்பற்றி அறிந்திடாவிடினும் 
இன்றைய பொழுதுகளை 
நண்பர் கூட்டங்களோடு மட்டுமே 
பகிர்ந்திட முடிகிறது 

Tuesday, February 15, 2011

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

அன்று நீ ரசித்த வரிகளோடு 
இன்று பரினாமம் கவிஞனடி
உனக்காக எழுதிய காதல்வரிகள் 
இன்னும் காதல்மணம் வீசுதடி 


காதலனாய் உருவாக்கி 
காவலனாய் ஆனபோதும் 
மந்தமற்ற பாசத்தோடு 
திழைத்திருந்த வேளையிலும் 
புரிந்துணர்வற்ற மொழிகளோடு 
வெறுக்கிறாய் என்கவிதைகளை 

Monday, February 14, 2011

காதலுக்கே...சவால்ஜெயம்பெற்ற காதலோடு
உனைவலம் வருகிறேன்
ஜென்மம் தீரும்வரை - உன்
காதலுக்காகத் தவமிருப்பேன்

பேசப்படும் காதல்களோடு
ஒப்பிடமுடியாக் கதலை
உருக்கமாக உவந்தளித்து
உயிர் கொடுக்கிறேன் காதலுக்கு 

Saturday, February 12, 2011

காதலர் தினம்காதலர்களே எழுதுங்கள்
உங்கள் மனுக்களை
உத்தம காதலுக்கு
ஒரு தினம் போதாதென்று

உண்மைக்காதலர்களுக்கு
ஒவ்வொரு நாளும்
திருநாளாகிட வருடம்முழுதும்
காதலர்தினங்களே...

ஒரு நாளில் தீர்வது
வெறுத்த காதலாகி
மரணம் ருசித்த காதல்களுக்கு
மங்கலநாள் ஒரு நாளாகிறது..

Thursday, February 10, 2011

சகலமும் காதல்.....காதல்

வேறுபாடுகள் மறந்து 
அன்பின் வெளிப்பாட்டிற்கு 
அடிமையாவது காதல் 


ஒரு ஜனனத்தில் உருவாகி 
கொஞ்சும் மொழிகளில் 
கெஞ்ச வைப்பதும் காதல் 


எதிர்ப்புகளை ஏற்றெடுத்து 
வெறுப்புகளை அகற்றி 
வெல்ல நினைப்பதும் காதல் 

Wednesday, February 9, 2011

மரணம்தேடும் காதல்....

கதலின் உன்னதம் 
கற்றுத்தந்தெனை 
காதலோடு கிறங்கச்சொய்தாய் 
என் சுழற்சியின் சக்தியாய் 
காதல் உணர்வுகளை 
தினமும் ஊட்டிநின்றாய் 
எதிர்பார்ப்பற்ற காதலை 
விதைத்திருந்த நீ 
பிரிவை எதிர்பார்த்து 
அகன்று சென்றாயே....
உன்னால் உருவான் 
உறங்கமறுக்கும் உணர்வுகளின் 
தவிப்பிற்கு விடைகொடு...


நீ பேசிய போதெல்லாம் 
ரசித்திருந்த நான் 
நீ சிரித்த போதெல்லாம் 
மகிழ்ந்திருந்த நான் 
நீ மௌனமானபோது 
மரணம் தேடுகிறேன் 

Monday, February 7, 2011

உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா...இறைநேசச் செல்வனே..
இறைவன் உமக்களித்த
உன்னன்பான முத்துக்களை
அவனின் நாட்டத்தில்
பிரித்தெடுத்த துயரோடு
தாழாத்துன்பமுனை
நிலைகுலைக்கலாகாது..


மலர்ந்த மழலை...
செல்வமாயுன் கையில்த் தவள
தாயாய் நீமாறித்
தங்கமதை ஏந்திடு
தரணிவியக்கும் பாசமழையில்
தினமும் நனைத்திடு
சோகங்களின் சோர்வுகளை
சொந்தங்களின் நலன்களுக்காய்
என்றுமுரங்களாக்கிடு...

Saturday, February 5, 2011

கனவுலகம்.....

உறக்கம் வேண்டுமெனக்கு
உயிரே எம்முலகம் அடைந்திட 
நிதமும் உன் நினைவில் - கண்கள் 
தூங்க மறுக்கிறது


காரணமற்ற காரியங்களோடு 
வாழ்நாட்கள் கழிந்துவிட 
காவியங்கள் உருவான காதலுலகில் 
எம் கனவுகளில் உருவான 
உணர்வுகளைத்தேடுகிறேன் 


உயிராய் இல்லாதபோதும் 
எம்மால் ரசிக்கப்படும் தடங்களுக்காய் 
ஏக்கங்கள் உருவாகிறதே...
உறவில்லா இவ்வுலகைவிட 
உயிர்தேடும் அவ்வுலகம் சிறந்ததே... 

Wednesday, February 2, 2011

இதயத்தை ஏன்மாய்த்தாய்...?


வேண்டுமுன் இதயமென்று 
காத்திருந்த நாளிகள் மட்டும் 
எட்டி நின்று கும்மாளமிட 
ஈட்டியாய் பாய்ந்து நீயும் 
என்னிதயத்தை மாய்த்துச்சென்றாய் 

பேரழகியாய் ரசித்தபோது 
நான் கண்ட இன்பங்களை 
மொத்தமும் உனதாக்கி 
பித்தனாய் அலைவதை 
மீதமாக்கிச்சென்றாய் 

நித்தமும் உன்னினைவுகளோடு 
உன்னால் பறிக்கப்பட்ட இதயம் தேடி
உயிருள்ளவரை அலைகிறேன் 
உணருமுன் மடிந்திட.....
Related Posts Plugin for WordPress, Blogger...