இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, February 7, 2011

உன் பாதை.......சகோ.அன்சீலுக்கா...இறைநேசச் செல்வனே..
இறைவன் உமக்களித்த
உன்னன்பான முத்துக்களை
அவனின் நாட்டத்தில்
பிரித்தெடுத்த துயரோடு
தாழாத்துன்பமுனை
நிலைகுலைக்கலாகாது..


மலர்ந்த மழலை...
செல்வமாயுன் கையில்த் தவள
தாயாய் நீமாறித்
தங்கமதை ஏந்திடு
தரணிவியக்கும் பாசமழையில்
தினமும் நனைத்திடு
சோகங்களின் சோர்வுகளை
சொந்தங்களின் நலன்களுக்காய்
என்றுமுரங்களாக்கிடு...


இக்காலம் பொன்னானதாய்
பொறுப்புகளின் சுமைகளோடு
எதிர்காலக்கேள்விகள்
உன்பாதையில் நிறைந்திருக்க
வடுவின் விளைவுகளோடு 
வலம்வந்திழந்திடாதே....


நற்குலசீலனாய்....
பிறர்நலன் நோக்கினாய்
நண்மைகள் நோக்கிடா
உபகாரம் செய்திருந்தாய் 
நல்லதோர் எதிர்காலம்
நலங்களோடிறைவன் தந்திடுவான் 


இறைவன் வகுத்துத்தரும் 
வாழ்க்கைப்பாதையில் 
மேடுபள்ளங்களாய்த் தடங்கல்கள் 
அத்தனையும் வென்றிடும் 
ஆற்றலும் அவனளிக்கிறான் 


நடந்தவைகளோடு தொடர்ந்திடாது 
நடப்பவைகளோடு பயணித்து 
உன்பாதையில் நிலைத்து
உளமதைப் பக்குவமாக்கிடு 


நடப்பவை அத்தனையும் 
இறைவனின் ஏற்பாடென்று
சாந்தியும் கொண்டு....
உன் பாதையில் வென்றிட 
கரமேந்திப் பிரார்த்திக்கிறோம் ...குறிப்பு: சசோதரர் அன்சீல்(இலங்கை) அட்டாளைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர். அண்மையில் இவருக்கு ஏற்பட்ட சோகச்சம்பவத்திற்கான(துணைவி குழந்தையின் மரணம்) அனுதாப வரிகள்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...