இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, February 19, 2011

நட்புக்கு நிகரேது...

நட்புலகில் நலங்கண்டிட 
நாம் கை சேர்க்கும் நேரமிது 
தேசங்கள் கடந்து
தேடல் வாழ்க்கையுடன் 
தன்ந்தனிமையில் 
தன்னம்பிக்கையினை ஆயுதமாக்கி 
சந்தோசங்காணும் 
சகோதரங்களுக்காய் 
தியாகமே வாழ்வாகிறது 


நாளை சரித்திரம் - எம் 
நலங்களைப்பற்றி அறிந்திடாவிடினும் 
இன்றைய பொழுதுகளை 
நண்பர் கூட்டங்களோடு மட்டுமே 
பகிர்ந்திட முடிகிறது 


துரோகியானாலும் துணிந்து 
நட்போடு அரவணைத்திடு 
நண்பன் என்றுணர்ந்தால் 
துரோகங்கள் கூட துச்சமாகிடும்
உறவுகளுள் உன்னதம் தேடுகிறோமே 
நட்பொன்றிருக்கிறது 
நிகர் கடைக்குமா?
நன்றி நண்பர்களே.... 
என்றும் உங்கள் 
நேசமுடன் ஹாசிம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

ஆயிஷா said...

கவிதை அருமை.வாழ்த்துக்கள்.

தோழி பிரஷா said...

அருமையான கவிதை..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...