இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, February 26, 2011

நகைப்பதற்கா.... நகை.......??

  
கன்னியுனை காண்போர் நகைக்கு 
காட்சிப்படுத்திய கோலத்தில் 
இக் கலியுகத்தின் தேவையெதுவோ
காலத்தின் கட்டாயமா
தற்பெருமையின் பிரதிபலனா


பிறர் நகைப்பதற்கு நகையணிந்து
நங்கையுன் புகழ்மறந்து 
நலங்களேயற்ற நலம்பெற
நாடியதின் விளைவிதுவா


தங்கக்குவியல்களோடு மனதை 
தகரங்களாகின்ற குணங்களாக்கி 
பெண்களின் உலாவில் 
பேதங்களும் உருவாகிறதே...


அளவுக்கு மீறிய ஆசையுடன் 
அனர்த்தங்களை நோக்கிய 
செயற்பாடு வேண்டியதில்லை 
அர்த்தமுணர்ந்து களைவதில்
சமனிலை அடைந்திடலாமே... 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

கவிதை யதார்த்தமாக அருமையாக உள்ளது நண்பரே... நம்ம பக்கம் தொடர்ந்து வாங்க நண்பரே...
ஓட்டும் போட்டுட்டோமில்ல...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...