இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, February 15, 2011

கவிஞன்...........ஆக்கப்படுகிறான்

அன்று நீ ரசித்த வரிகளோடு 
இன்று பரினாமம் கவிஞனடி
உனக்காக எழுதிய காதல்வரிகள் 
இன்னும் காதல்மணம் வீசுதடி 


காதலனாய் உருவாக்கி 
காவலனாய் ஆனபோதும் 
மந்தமற்ற பாசத்தோடு 
திழைத்திருந்த வேளையிலும் 
புரிந்துணர்வற்ற மொழிகளோடு 
வெறுக்கிறாய் என்கவிதைகளை 


என் சிந்தைகளை வடித்திட 
சூழலோடு பிணைந்துவிட்டதால் 
நானும் எழுத்தாளனாக்கப்பட்டேன் 
நான் ரசித்தவைகளை எழுதுவதால் 
என்னோடு அதையேன் ஒப்பிடுகிறாய் 


உலகக்கவிஞர்களைக் கேட்டுப்பார்
எழுதும் வரிகளெல்லாம் கற்பனையென்பர் 
நான் மட்டும் விதிவிலக்காய் 
ஆனதன் மர்மமென்ன ?? 


ரசிகர் கூட்டங்கள் 
நாளுக்குநாள் கைதட்ட
உந்துதலின் உத்வேகத்தில் - வரிகள் 
உயிர்க்கிறது என்னாளும் 
உன்கை ஓசையின்றி 
கண்ணீர் வடிக்கிறது என்கவிதை..... 


உனக்காக உருவாக்கிய 
வரிகளிங்கு வெட்கப்படுகிறது....
வாதங்கள் தவிர்த்து நீயும் 
ஆக்கங்கொடு இக்கவிஞனுக்கு 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

sakthistudycentre-கருன் said...

அருமையான கவிதை..இன்னும் காதலர்தின நினைவுகளுடன்..

Anonymous said...

vaalthukal.
vetha Elangathilakam
Denmark.

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மையான வரிகள்..
கவிதை அருமை..
வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாக்குகள் மற்றும் வாழ்த்துக்கள்..
கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...