இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 29, 2012

சுயநலச் சுமை உன்மீதுஉன் பேராசைகள் கண்ணை மறைத்திருப்பதால் 
உம் பாதையின் படுகுழிகள் உமக்குத் தெரியவில்லை 
சுற்றமும் சூழ்ந்த சுகந்தம் மறந்து 
பாதாளம் நோக்கிய பயணத்தினைத் 
தேர்ந்தெடுத்துக்கொண்டாய் மானிடனே!! 


சமுதாயமென்று சமாதியாக்கப்பட்டது 
சமூகமொன்று சீரழிக்கப்படுகிறது 
சல்லாப வாழ்வைத்தேடிய உன் வழியில் 
சறுக்கல்களும் உள்ளதென்று மறந்ததேனோ!! 


இன்றய பொழுதின் இன்பத்திற்காய் 
எதிர்காலத்தினை அடகுவைத்து 
ஆசைகளின் ஈர்ப்பில் கவர்ந்து 
அடியோடு உனை அழித்திடத்துணிகின்றாய் 

Wednesday, April 25, 2012

தீர்வுகள் பரிகாரங்களாகட்டும்..........


புத்த மதம் போதித்திராத 
புனித பூமிகள் தேடி
பௌத்தர்களின் அட்டூழியங்களால் 
அடிமைப்படுத்தப்படும் ஆட்சியாளர்கள் 


சுதந்திர நாடென்றும் 
சுதந்திரங்கள் உண்டென்றும் 
வாய்ப்பேச்சில் மாத்திரமுரைத்து 
சுயநலங்களுக்காய் மீறல்களும் அவர்களால் 


அன்று மீறிய சுதந்திரத்திற்காய் 
ஆயுதமேந்தினார்கள் அவர்கள் 
இன்று மீறப்படும் சுதந்திரங்கள் சேர்ந்து 
பேரழிவுக்கு வித்திடுகின்றன 


காபீர்களான காடையர்களே - நீங்கள்  
புனித பள்ளியில் புகுந்து நாசம் செய்து 
இஸ்லாத்தையே அவமதித்ததில் 
உம்நாசம் உம்கையாலானதை மறந்தீர்கள் 

Thursday, April 19, 2012

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 12)

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை 11) 

காத்திராத காலம் கரைந்தோடியது

கணவனின் பிணியும் பழகிப்போனது
வறுமையின் பிடியும் இறுகலானது
எதிர்காலக் கேள்விகள் சுமைகளானது
நகராமல் நகரத்துடித்த நாட்களை
நகர்த்தினேனதை மறக்கவில்லை

கிடைத்த வேலைகளோடு பசியாறி
மிகுதியான நேரங்களில் தாதியாகி
கடந்த நாட்ளில் ஓர் நாளில் பேரதிர்வு
நாற்காலியில் இருந்த கணவன்
இருந்தவாறே இறந்திருந்தார்
அந்தக் கறுப்புநாளை மறக்கவில்லை

அயலவர் கூடிவர இறுதிவலம்
அமைதியாக நடந்தேறியது
எனக்கென இருந்த பந்தம் இறுதியானது
அவர் இருப்பதைவிட இறந்தது மேலென
என் கதுகளுக்கே கேட்குமளவு
உரைத்தார்களதை மறக்கவில்லை

Wednesday, April 18, 2012

ஓர் தீக்குச்சி வேண்டும்.....ஓர் தீக் குச்சியைத் தந்துவிட்டுப்போ
என்மனதில் கொழுந்துவிட்டெரியும்
தீ கொண்டத்தனையும் எரித்துவிட


பசியால் ஒரு பட்டாளம் பரிதவிக்கிறது
குசியால் ஒரு சாரார் கும்மாளமடிக்கிறார்கள்
பகிர்ந்தளித்திட ஒரு தீ மூட்ட வேண்டியிருக்கிறது


வயதால் விதவையாகி வஞ்சிக்கப்டுகிறாள் - மாது
வரதட்சனை வேண்டுமென்று புரட்டியெடுக்கிறான் - காளை
காலமது சொற்பமென வாழ்வைக் கற்றுத்தர
தீயிட்டல்லவா உருக்க வேண்டியிருக்கிறது


குழந்தையொரு செல்வம் செழிப்பும் அதிலுண்டு
மறந்த முதலாளர்கள் குழந்தைகளில்
சம்பாத்தியம் செய்கிறார்களே - அவர்களது
உடமைகளையும் சாம்பலாக்க வேண்டியிருக்கிறது


வேண்டாம் வேண்டாமென்று கூக்குரலிட்டும் 
பாவம் மனிதர்களை வதைசெய்து 
ஆட்சி பீடத்தில் சல்லாபம் காணும் - அரசன் 
அவனின் ஆட்சியை கொழுத்த வேண்டுடியிருக்கிறது 

Monday, April 16, 2012

காதலும் கண்ணீர் சிந்துகிறது


கண்ணென வளர்ந்தவர்கள் 
காதலர்கள் ஆனதினால் 
எதிரியாய்க் காணச்செய்து 
கல்லறைக்கு அனுப்பினார்கள் 


காளையவன் உளளத்திற்கு 
காயத்திரி தெய்வமானாள் 
காதலெனும் பூஜை செய்து 
மண்டியிட்டான் காலடியில் 


பூசாரியாய் பெற்றோர்கள் 
எரியவைத்த கற்பூரங்களால் 
பற்றிக் கொண்டதங்கு காதல் 
பூமாலை பிணத்திற்கல்லவா 
சூடிவிட்டனர் 

Saturday, April 14, 2012

மனிதனாய் வாழந்துமடி.....


படைப்பாளனை மறந்து வாழும் மனிதா
மறதியிலும் அவன் சக்தியை
உணர்ந்து வாழ்ந்திடென எச்சரிக்கையை
நடுக்கங்களினூடே நீ காண்கிறாய்

அனைத்துலக ஆட்சியாளனின்
அடிமை உன்னாட்சியை
நில்லென்று உனை நிறுத்திவிட - அவனுக்கு
நொடியொன்றும் தேவையில்லை

சர்வாதிகாரி அவனிருக்க
உன் வேசமொன்றும் பெரிதல்ல
நீயும் சக்தியற்ற மனிதனென்று
சமநிலை ஆட்சி அனைவர்க்கும் தந்திடு

Sunday, April 8, 2012

காதலா.. தொல்லை ...???


கட்டித்தழுவா முத்தம் 
தொட்டுணரா தித்திப்பு 
திகட்டாத தொடர் தவிப்பு - என
கொல்லாமல் கொல்வது காதல் 


உள்ளமதை தொலைத்திடவும் 
உற்றவரை எதிர்த்திடவும் 
தற்பெருமை ஓதிடவும் 
செய்கிறதிந்த காதல் 


காதலனாய் காதலியாய் 
ஆனதினால் எனக்கடிமை, 
நீயாவீர் என்றெண்ணி திணிப்பதினால் 
எதிர்ச்சண்டைக் காதல் 


உன்நிலை நானறியேன் 
என்நிலை போற்றிடென 
தொல்லைமேல் தொல்லை தந்து 
நச்சரிப்பதும் காதல் 

Saturday, April 7, 2012

பாதையும்.... பாசமும்

பாதை

உன் பாதை முடிந்ததென்று 
முடங்கிக் கிடந்திடாதே - நீ 
பலதிசையும் உற்றுநோக்கிப்பார் 
பாதைகளங்கு திறந்திருக்கும் 

எதிர்ப்பட்ட பாதைகளோடு - நீ 
முனைப்புடன் முன்னேறிப்பார் 
முட்களும் கற்களும் - உனக்காய் 
வழிவிடக் காத்திருக்கும் 

வீறுகொண்டு நடந்துபார் 
இமயம் கூட உன் காலடியில் 


Wednesday, April 4, 2012

பொருளாதாரத்தடை......(அழித்திடும்)

என்னை ஆதரிக்காத உன்னை 
வீழ்த்த ஓரி வழியென்று 
வல்லரசென்ற மமதையினைத் 
திணித்திடுமோர் ஆயுதம் பொருளாதாரத்தடை 


மக்களைக் காத்திட வென்று கூறி 
சமநிலை ஆட்சி கோரி 
மனிதாபிமானமற்ற பொருளாதாரத்தடை
விதிப்பதில் சாதிப்பதெதுவோ....??


மனங்கள் வெறுத்த பேரழிவில் 
அழிந்த உயிர்களுக்கு ஈடுண்டோ 
வாழும் உயிர்களை வதைத்திடவா 
பொருளாதாரத்தடை வேண்டும் - இலங்கைக்கென  
கூக்குரலிடுகின்றனர் 


அமேரிக்காவின் ஆயுதப்பட்டறைக்கு 
அன்று அரங்கேற்றம் ஈழமாயிருந்தது 
இந்தியாவின் அன்றய ஆட்டங்களுக்கு 
பச்சாதாபம் இன்று தேடுகின்றார்களாம் 

Related Posts Plugin for WordPress, Blogger...