இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 29, 2012

சுயநலச் சுமை உன்மீதுஉன் பேராசைகள் கண்ணை மறைத்திருப்பதால் 
உம் பாதையின் படுகுழிகள் உமக்குத் தெரியவில்லை 
சுற்றமும் சூழ்ந்த சுகந்தம் மறந்து 
பாதாளம் நோக்கிய பயணத்தினைத் 
தேர்ந்தெடுத்துக்கொண்டாய் மானிடனே!! 


சமுதாயமென்று சமாதியாக்கப்பட்டது 
சமூகமொன்று சீரழிக்கப்படுகிறது 
சல்லாப வாழ்வைத்தேடிய உன் வழியில் 
சறுக்கல்களும் உள்ளதென்று மறந்ததேனோ!! 


இன்றய பொழுதின் இன்பத்திற்காய் 
எதிர்காலத்தினை அடகுவைத்து 
ஆசைகளின் ஈர்ப்பில் கவர்ந்து 
அடியோடு உனை அழித்திடத்துணிகின்றாய் நீ தேர்ந்தெடுத்த பாதையில் 
உன்னைப்போன்ற - சிலர் 
கண்மூடி நடந்து வருகின்றனரே 
அவர்களின் கண்திறக்கவேனும் 
உன்கண்களைத் திறக்க வேண்டாமா .. ?? 


உம் மீது சுமந்திருக்கின்ற 
சுயநலத்தாசைகளைக் கீழுறக்கி 
கண்திறந்து பார் மனிதா....!
புனிதனாய் உலகில் உயிர்வாழ்வாய் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கருத்துள்ள கவிதை ! பாராட்டுக்கள் !

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...