இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, April 8, 2012

காதலா.. தொல்லை ...???


கட்டித்தழுவா முத்தம் 
தொட்டுணரா தித்திப்பு 
திகட்டாத தொடர் தவிப்பு - என
கொல்லாமல் கொல்வது காதல் 


உள்ளமதை தொலைத்திடவும் 
உற்றவரை எதிர்த்திடவும் 
தற்பெருமை ஓதிடவும் 
செய்கிறதிந்த காதல் 


காதலனாய் காதலியாய் 
ஆனதினால் எனக்கடிமை, 
நீயாவீர் என்றெண்ணி திணிப்பதினால் 
எதிர்ச்சண்டைக் காதல் 


உன்நிலை நானறியேன் 
என்நிலை போற்றிடென 
தொல்லைமேல் தொல்லை தந்து 
நச்சரிப்பதும் காதல் தொடரும் துயரங்களுக்கு 
முற்றுப்புள்ளி வேண்டுமென்று 
உரசிக் கொண்ட மனங்கள் சேர்ந்து 
முறித்துக் கொள்வது காதலை 


புனிதம் கெட்ட காதலென்று 
தான் செய்த தவறும் மறந்து 
காதலுக்கெதிரி நானென்று
வாழ்வைத் தொலைப்பதுவா காதல் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

ஹேமா said...

உண்மையாக ஒருவரை ஒருவர் உணர்ந்த காதலானால் இத்தனை முரண்கள் வராது ஹசீம் !

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...