இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, April 4, 2012

பொருளாதாரத்தடை......(அழித்திடும்)

என்னை ஆதரிக்காத உன்னை 
வீழ்த்த ஓரி வழியென்று 
வல்லரசென்ற மமதையினைத் 
திணித்திடுமோர் ஆயுதம் பொருளாதாரத்தடை 


மக்களைக் காத்திட வென்று கூறி 
சமநிலை ஆட்சி கோரி 
மனிதாபிமானமற்ற பொருளாதாரத்தடை
விதிப்பதில் சாதிப்பதெதுவோ....??


மனங்கள் வெறுத்த பேரழிவில் 
அழிந்த உயிர்களுக்கு ஈடுண்டோ 
வாழும் உயிர்களை வதைத்திடவா 
பொருளாதாரத்தடை வேண்டும் - இலங்கைக்கென  
கூக்குரலிடுகின்றனர் 


அமேரிக்காவின் ஆயுதப்பட்டறைக்கு 
அன்று அரங்கேற்றம் ஈழமாயிருந்தது 
இந்தியாவின் அன்றய ஆட்டங்களுக்கு 
பச்சாதாபம் இன்று தேடுகின்றார்களாம் இவர்களன்று நினைத்திருந்தால் 
இவ் அழிவுக்குத்துணை கிடைத்திருக்குமா ??
முனைந்து வழி செய்திருந்தால் 
சமாதானமொன்று நிகழ்ந்திருக்குமே 


உயிரைப்படைத்த இறைவனென்றும் 
உணவையும் படைத்திருக்கிறான் 
இவர்கள் விதித்த தடைகளால் 
எங்குதான் உயிர்கள் மடிந்திருக்கிது 


விதித்திட முடியாத தடைகளை
தன்னல அரசியலுக்காய்ப் பேசி 
தற்பெருமையும் கொள்கின்றனர் 
தளத்திலுள்ள  வடு ஆறிட வழி ஏதுமில்லை 


வல்லரசுகளே வால் பிடிப்பவர்களே 
பணிகளுண்டு உங்களுக்கும் பகுத்தறிந்திடுங்கள் 
ஈழத்து மண்ணை சோலையாக்க 
பொருட்கள் கொண்டு உதவிடுங்கள் 
தடை கொண்டின்னும் அழித்திடாதீர்கள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...