படைப்பாளனை மறந்து வாழும் மனிதா
மறதியிலும் அவன் சக்தியை
உணர்ந்து வாழ்ந்திடென எச்சரிக்கையை
நடுக்கங்களினூடே நீ காண்கிறாய்
அனைத்துலக ஆட்சியாளனின்
அடிமை உன்னாட்சியை
நில்லென்று உனை நிறுத்திவிட - அவனுக்கு
நொடியொன்றும் தேவையில்லை
சர்வாதிகாரி அவனிருக்க
உன் வேசமொன்றும் பெரிதல்ல
நீயும் சக்தியற்ற மனிதனென்று
சமநிலை ஆட்சி அனைவர்க்கும் தந்திடு
சிறு நடுக்கம் சிதைத்திருக்கும்
உன் சிந்தையை அதுவே பெரிதானால்
தாங்குமா உன்னிதையம்
தவறு கழைந்து உணர்வதெப்போ
அக்கிரமக் காரனாய் அடாவடித்தனம்
அடிபணிந்திடா மனிதனை அடிமையாக்கிட
அதிகார துஷ்பிரயோகமே ஆட்சியாய்
செய்வதே வழக்கமாகிறதென்றும்
உன் ஆயுளுக்குள் ஆனமட்டும்
மனிதனாய் வாழந்துமடி
நீ மறக்கும் மனிதத்துவத்தை
இயற்கைகொண்டிறைவன் உணர்த்துகிறான்
2 comments:
"உன் ஆயுளுக்குள் ஆனமட்டும்
மனிதனாய் வாழந்துமடி"
சூப்பர் நண்பரே !
மனிதன் தன்னை மறந்து நிறையக் காலமாகிவிட்டதாகவே உணர்கிறேன் இன்றைய வாழ்வில்.மனம் நொந்த ஆதங்கக் கவிதை !
Post a Comment