இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, April 7, 2012

பாதையும்.... பாசமும்

பாதை

உன் பாதை முடிந்ததென்று 
முடங்கிக் கிடந்திடாதே - நீ 
பலதிசையும் உற்றுநோக்கிப்பார் 
பாதைகளங்கு திறந்திருக்கும் 

எதிர்ப்பட்ட பாதைகளோடு - நீ 
முனைப்புடன் முன்னேறிப்பார் 
முட்களும் கற்களும் - உனக்காய் 
வழிவிடக் காத்திருக்கும் 

வீறுகொண்டு நடந்துபார் 
இமயம் கூட உன் காலடியில் 
பாசம்
வானம் விட்டுப்பிரியாத -நிலவு 
சூரியனிடம் தஞ்சம் 
பாசம் விட்டுப்பிரியாத - தாய் 
பிள்ளையிடம் தஞ்சம் 

சூரியனாய் மாறும் பிள்ளைகளால் 
சுட்டெரிக்கப்பட்ட தாய்களோ 
சுடுகாட்டில் இருந்தாலும் - பிள்ளைப்
பாசம் விட்டுப் பிரிந்திடாள்பாதை தடுமாறும் பிள்ளைகளுண்டு 
பாசம் தடுமாறும் தாய்களுண்டு 
சரி செய்திடும் சமநிலைகள்தான் 
சரித்திரங்களை வென்றுநிற்கும் 

இவ்வரிகளை அமைத்திடத் தூண்டிய சகோ ஹேமா அவர்களுக்கு மிக்க நன்றிகள் உப்பு மடச் சந்தி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விறுவிறுப்பான வீறு கொண்ட வரிகள் ! அருமை !

ஹேமா said...

மிகவும் சந்தோஷமாய் உணர்கிறேன் தோழரே.இனி வானம் வெளித்த பின்னும்... கவிப்பக்கத்தில அடிக்கடி சந்திக்கலாமே !

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...