கண்ணென வளர்ந்தவர்கள்
காதலர்கள் ஆனதினால்
எதிரியாய்க் காணச்செய்து
கல்லறைக்கு அனுப்பினார்கள்
காளையவன் உளளத்திற்கு
காயத்திரி தெய்வமானாள்
காதலெனும் பூஜை செய்து
மண்டியிட்டான் காலடியில்
பூசாரியாய் பெற்றோர்கள்
எரியவைத்த கற்பூரங்களால்
பற்றிக் கொண்டதங்கு காதல்
பூமாலை பிணத்திற்கல்லவா
சூடிவிட்டனர்
மணமுடித்து மகிழவேண்டிய
இரு உள்ளங்களின் -
அமங்கலத்திற்கு மலர்தூவி
இளங்காதலுக்கு சமாதியொன்று
கட்டிவிட்டார்கள்
காளையவர்கள் காதலுக்காய்
உயிர்துறப்பார்கள் என்றறியாது
காவுகொள்ளச்செய்த -
காதலுமங்கு கண்ணீர் சிந்துகிறது
காதலொரு குற்றமென்றுகாணும்
காதலர்களின்னும் வையகத்தில்
உங்களின் உள்ளத்திலும் காதலுண்டு
கண்திறந்து பாரீர் பெரியோர்களே.......
காதலை எதிர்த்ததால் தற்கொலை செய்து கொண்ட காதலர்களின் பிணத்திற்கு திருணம் செய்து அடக்கம் செய்ததாக ஒரு செய்தி கண்டேன் அவற்றை மையமாக வைத்த எனது வரிகளிவை
நாகரீகம் வளர்ந்த இந்த உலகில் இன்னும் காதலை எதிர்ப்பவர்களும் காதலுக்காய் உயிர்திறப்பவர்களும் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள் எதிர்க்காதீர்கள் காதலை முடியுமானவரை வாழவையுங்கள்
இறந்தவர்களுக்கு சமர்ப்பணம்
2 comments:
காதல் என்றாலே ஆராயாமல் சில பெற்றோர்கள் பேய் பிசாசைக் கண்டதுபோல அலறுகிறார்கள்.இப்படியான முடிவுகளைத் தாங்குவார்களா !
படம் பார்த்துக் கவிதை தந்த உங்களுக்கு உப்புமடச்சந்தியில் விருது ஒன்று காத்திருக்கிறது.எடுத்துக்கொள்ளுங்கள் !
http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post_17.html
Post a Comment