இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, October 30, 2010

தனித்துச் சென்றாயே...

அன்பை அள்ளித்தந்தாய் 
ஆதரவுடன் இருந்தாய் 
உலகில் எனக்காக 
உதித்தவன் நீயானாய் 


உள்ளம் நிறைந்திருந்தாய் 
உறவால் கலந்திருந்தாய் 
அறிந்தது முதல் ஆற்றாமை வரை 
சகலமும் அறிந்திடச்செய்தாய் 

Thursday, October 28, 2010

உன் நினைவுகளோடு...

கண்ட நாள் முதல் - அடைந்து 
கண்டிரா இன்பங்கண்டேன் 
கண்ணயரும் பொழுதாகினும் 
கண்ணெதிரில் உன்னோடு 


தித்திப்பின் உச்சத்தில் 
திகிலுரிக்கும் முத்தங்கள் 
திண்டாடும் இறுக்கத்தில் 
திழைத்திருந்த சுகங்கள் 


Monday, October 25, 2010

ஏங்கவைத்த பொற்காலம்...


இளமையில் கல் என
இயற்றிய மொழி மறந்து 
இயல்புதான் வாழ்வென
இனித்ததுவே துடினம் 

படி என்று ஊரும் உரைக்க
பகட்டுக்காய் புத்தகத்துடன் 
படிமம் காட்டி நின்று 
பலரையும் ஏமாற்றினேன் 

Saturday, October 23, 2010

சொல்லாட்சி செய்......

மனதின் ஆழுமையில் 
மதியில் உருவாகி 
மலரும் வரிகளாக 
மட்டற்ற வார்த்தை பரிமாற்றம் 


சொல்லாட்சி என்றும் 
சொன்னபடி அமைந்திட்டால் 
சொற்களின் அதிகாரத்துடன் 
சொரக்கம் கண்டிடலாம் 

Thursday, October 21, 2010

காதலின் தவிப்பில்....


தேவதையே... உன்னை 
தேடினேன் உலகமெங்கும் 
தேடாத என் உள்ளத்தில் 
தேராய் அமர்ந்துவிட்டாய் 


கற்பகச்சிலை என்பேன் 
கருவிழியின் மணி என்பேன் 
கலியுகத்தில் நான் கண்ட 
கவியருவி நீயாவாய் Sunday, October 17, 2010

வென்றவனே விலைபோகாதே...

ஏழை மாணவனாய் 
ஏகவல்லோன் துணையில் 
ஏற்றம் கொண்டு கற்றதில் 
ஏறினான் பல்கலைக்கழகம் (பொறியியலாளனாய்)

கடந்த பாதையில் கிடந்த 
கற்களும் முட்களுமாய் தடங்கள் பல
கண்ணீருடன் அயராது - கல்வியை 
கற்றுத்தேறியவன் 

Saturday, October 16, 2010

வீணான கண்காட்சி...

வாலிபம் கடந்தும் 
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு 
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க


மணாளனின் பட்டாளமாம் 
மடைதிறந்த வெள்ளமாய் 
மனிதர்கள் கூட்டமொன்று 
மனங்கோணும் விசாரிப்புகளுடன்

Wednesday, October 13, 2010

பதவியை படித்திடு....

பல அடைவுகள் கண்டு 
பதவிகள் பல கொண்டு 
பலரதும் கவனம் வென்று 
பண்பால் நிலைத்து நின்று 


அடைந்த பதவியினைக்காத்து
அழகுகள் பல சேர்த்து
அறிவுகளை தேடி இணைத்து
அஞ்சாமல் துணிந்து நடத்து 

Monday, October 11, 2010

ன்புச் சிறையினிலே....

அன்பெனும் சிறையிலடைத்து 
அதிர்ச்சியூட்டும் பாசத்தால்
அதிரச்செய்பவளே - உன்னால் 
அல்லல் படுவதில் அனலாகிறேன்

அன்பின் அவதியை 
அருந்தும் பொழுதுகளில் 
அகிலம் மறந்திருந்து 
அடிமையாகிறேன் உன்மடியில் 

அச்சமறியாக் காதலை 
அஞ்சாமல் பரிமாறியதில் 
அந்தம் காண்கிறேன் 
அதுவும் இன்பமாகிறது 

Sunday, October 10, 2010

நேரத்தையாண்டிடு நேர்த்தியாக..

நீ பார்க்கும் நேமென்ன
நீ கடந்த நேரமென
நீ அடைந்த நேரமாய்
நீ தொலைத்த நேரங்களாய்


வாழ்வில் நீ கண்ட நிமிடங்கள்
வாழும்போதே மடிந்துவிட
வாழ்கிறேன் என்று மறந்து
வாழ்ந்தபின் துலைத்த நிமிடத்தை தேடுவாய்

Wednesday, October 6, 2010

மின்னலாய் வந்தவளே


மின்னல் கீற்றில்
மிளிர்ந்த சக்தியாய்
மினுங்கலில் வசீகரித்து - எனை
மின்னலாய் பற்றினாய்

மீளாக்காதலை அழித்து
மீட்டும் வீணையாய் தொடர்ந்து
மீதமற்ற அன்பினை
மீண்டும் மீண்டும் பகிர்ந்தாய்

Tuesday, October 5, 2010

மாய உலகம் மடிந்திடாதே...


பொல்லாத வாழ்க்கையடா 
போதுமிந்த வாழ்க்கை 
வயது அறுபது கடந்துவிட
வயதுகள் நாற்பது தனிமரமாய் 

இத்தனை காலத்தில் 
இருபது தடவை உறவுகண்டு 
இன்பங்கள் மூன்றரை வருடமட்டும் 
இதுவும் வாழ்க்கை பொறுக்குதில்லை மனம் 

Monday, October 4, 2010

எழுந்திரு அடைந்திடுவாய்...
வட்டமிடும் பருந்துகளாய் 
வளைத்திருந்த ஒருவட்டம் 
வறியவன் என்று கண்டு 
வழி மறந்த கதைகேள் 

உன் கைசெழுப்பில் 
உள்ளவரை நீ கண்ட
உறவு என்றவரெல்லாம் 
உதறிச்சென்றதைப்பார்

Saturday, October 2, 2010

மழைத்தூறலின் மாயம்...


மழையின் தூறலில் 
மயிர்ச்செறியும் கூச்சம் 
மல் யுத்தம் நடப்பதுபோல் 
மனதின் போராட்டம் 

மன்னவன் துணைவர
மதி நிறைந்த இன்பம் 
மலர்ந்த உணர்வுக்கு 
மட்டற்ற பல உச்சம் 

ஆழுமையுடையதாய் ஆகட்டும்....
என் பேனா முனையில் 
எழுந்த அலைகளாக
எழுச்சியுடன் ஓயாது - நான் 
எழுதிடும் கருக்கள் - என் கவிதைகள்

கவிதைகளாக வலம் வர
கவிஞர்கள்,மேதைகளெல்லாம் 
கண்ணியமாய் பின்தொடர்ந்து 
கருத்துகளோடு செதுக்கினர்..
Related Posts Plugin for WordPress, Blogger...