இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, October 2, 2010

மழைத்தூறலின் மாயம்...


மழையின் தூறலில் 
மயிர்ச்செறியும் கூச்சம் 
மல் யுத்தம் நடப்பதுபோல் 
மனதின் போராட்டம் 

மன்னவன் துணைவர
மதி நிறைந்த இன்பம் 
மலர்ந்த உணர்வுக்கு 
மட்டற்ற பல உச்சம் 

உடல் தொடாத மழைச்சாரலுக்கு 
உடனிருந்த என்னவன்மீது 
உச்சத்தில் கோபம்-ஆதலால் 
உமிழ்கிறது மழையாய் 

உத்தரவு பெற்றேன் மழையிடம்
உயிரானவனின் இறுக்கத்தில்
உலராத ஈரத்துடன் 
உஸ்ணம் தணியாத தாகம் 

குடையின் கீழ் கண்ட மோகத்தில் 
குற்றுயிராய் நடந்தேன் சாலையில் 
குற்றமாகிடா போதையுடன் 
குலம் காத்திருந்த வேளையது..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

யாதவன் said...

கலகிட்டிங்க பாஸ்

Jotheshree said...

azhagana malai.... azhagana varigal... malai thuralin mayam kathalin arputham

அன்புடன் மலிக்கா said...

கவிதை அருமை..

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

நேசமுடன் ஹாசிம் said...
This comment has been removed by the author.
நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@Jotheshree

நன்றி ஜோதி

நேசமுடன் ஹாசிம் said...

@அன்புடன் மலிக்கா

மிக்க நன்றி சகோதரி தங்களின் வருகையில் ஆனந்தம்

நேசமுடன் ஹாசிம் said...

@ஈரோடு தங்கதுரை
மிக்க நன்றி தோழரே கண்டிப்பாக பார்வையிடுகிறேன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...